Sunday, June 8, 2008

ந்பி பெருமான் வணிகம்

       ஒட்டகங்கள்  விற்கின்றார்  நபி பெருமான
                  உவகையுடன்  உள்ளத்தில்  பெருமையுடன்
       கட்டி வைத்த  ஒட்டகத்தில்  ஒன்றே யொன்று
                  கால்  ஊனம்  நபி பெருமான்  இல்லா வேளை
       அட்டி நின்ற பணியாளும் ஒட்டகங்கள்
                  அனைத்தையுமே  ஒரே விலைக்கு  விற்று  விட்டார்
       எட்டி  பணி நிமித்தம்   சென்ற  நபி பெருமான்
                   இச்சேதி  அறிந்தவுடன்  துடித்து விட்டார்



       விரைந்து  வந்த  நபி பெருமான்  ஒட்டகங்கள
                   விரும்பி  வாங்கிச்  சென்றவரைத்  தேடிச் சென்றார்
       மறந்து  எந்தம்  உதவியாளர்  உங்களிடம்
                 மறைத்து விட்டார்  ஒரு சேதி பொறுக்க   வேண்டும்
       சிறந்த  நல்ல  ஒட்டகங்கட்(கு)கிடையில் ஒரு
                 சேதமுற்ற ஒட்டகத்தைத் தந்து விட்டார்
       மறந்திடுவீர் என்று சொல்லி பணத்தைத் தந்து
                 ம்றுபடி  அவ்வொட்டகத்தை  ஒட்டிச் சென்றார்
                    

5 மறுமொழிகள்:

said...

Excellent post, my friend, excellent!
Happy day

said...

படித்தவுடன் எனை அழைத்துப்
போற்றி நின்ற
பாங்கிற்கு நன்றி சொன்னேன்
வணக்கம் அய்யா.


வாழ்க தமிழுடன் நெல்லைக்கண்ணன்

said...

அற்புதம் அய்யா!

ஒரு சம்பவத்தை, புராணத்தை, இலக்கிய நிகழ்வுகளை, பாமரனுக்கும் புரியும் வகையில் , கவிதை நடை மாறாமல், அழகாக ,எளிமையாக அதேசமயம்
பிரம்மாண்டமாகத்தர

உங்களைத்தவிர யாரால் தர முடியும் அய்யா?

said...

piramadham..! Nabigalar (iraivanin santhiyum samadanamum avargal meedhu yendendrum undakattumaga) kurithu thodarndhu yezhudhungal..!

said...

megavum ellimaiaha puriyumpadi ulladhu thaangal nabigal vazhkai varalattai pudhoo kavidhai vazhi aha yezhunghal