ஆண்டவர்கள் பெயரினிலே சண்டையிட்டு
அழிகின்றார் மானிடர்கள் எங்கும் என்றும்
தூண்டுபவர் எவரேனும் அழிவதில்லை
தொண்டர்களே அழிகின்றார் அந்தோ பாவம்
வேண்டுமட்டும் பெரியவர்கள் சொல்லிச் சென்றும்
வீணாக அழிகின்றார் கண்டு நொந்தோம்
ஆண்டவனை நற்றமிழால் அழகு செய்த
ஆழ்வார்க்கு ஆழ்வார் தம் சொல்லைக் கேட்போம்
அவரவர் தம் அறிவினது வழியதாக
அவரவர்க்காய் தெய்வம் அங்கே அமைகிறது
அவரவர்க்காய் அமைந்த அந்தத் தெய்வம் ஏதும்
அன்பான தெய்வம்தான் குறைந்ததில்லை
அவரவர்தம் விதி வழியே தெய்வங்களும்
அமைகிறது வணங்குகின்றார் புரிந்து கொள்வீர்
தவறின்றித் தமிழினிலே தந்து நின்றார்
தமிழ் வேதம் அருளி நின்ற நம்மாழ்வார் தான்
பாசுரம்
அவரவர் தமதறிவறி வகை வகை
அவரவர் இறையவர் என அடி அணைவர்கள்
அவரவர் இறையவர் குறைவிலர் இறையவர்
அவரவர் விதி வழி அடைய நின்றாரே
Tuesday, June 3, 2008
நம்மாழ்வார்
Subscribe to:
Post Comments (Atom)
1 மறுமொழிகள்:
nallathu ariyathu !!!
Post a Comment