யார் வணங்கும் ஆண்டவர்தான் சிறந்தவரென்று
எப்போதும் மனிதருக்குள் சண்டை உண்டு
ஊர் முழுக்க இச்சண்டை மீண்டும் மீண்டும்
ஒலிப்பதுண்டு மனிதர்களை ஒழிப்பதுண்டு
கார் நிறத்து மேனியனாம் கண்ணனையே
காதலித்து நின்றாலும் ஆழ்வார்க் காழ்வார்
சீர் பெறும் நல் வழியினையே நந்தமக்காய்
செப்பி வைத்தார் நம்மாழ்வார் நம்மாழ்வாரே தான்
வாழுகின்ற சூழலுக்கு ஏற்றாற் போல
வடிவங்கள் கண்டெவரும் வணங்குகின்றார்
சூழ்ந்து எதையும் வெல்லுகின்ற விதி தான் இங்கே
சொல்கிறது அவரவர்க்காம் கடவுள் தன்னை
ஆழ்ந்தவரும் வணங்குகின்றார் தவறேயில்லை
அக்கடவுள் குறைந்ததில்லை உயர்ந்ததுவே
வாழ்ந்திடுவீர் மானிடரே இதை உணர்ந்து
வையகத்தில் கடவுளிலே குறைகள் இல்லை
பாசுரம்
அவரவர் தமதம தறி வறி வகை வகை
அவரவர் இறையவர் என அடி அணைவர்கள்
அவரவர் இறையவர் குறைவிலர் இறையவர்
அவரவர் விதி வழி அடைய நின்றாரே
Tuesday, June 3, 2008
நம்மாழ்வார் பாசுரம்
Subscribe to:
Post Comments (Atom)
0 மறுமொழிகள்:
Post a Comment