Friday, June 6, 2008

அசிங்கம் தீரும்

                 கோயில்  கோயிலாய்ச் சென்றேன் கடவுளையே
                             கும்பிட்டு  மகிழுதற்காய் ஊர்கள்  தோறும்
                  வாயில்  தாண்டிச் சென்றாலோ  கோயிலுக்குள்
                              வரிசையாக ஒவ்வொன்றாய்க் கடைகள்  நூறு
                   பாய்  விற்கும்  கடை   ஒன்று  தொடர்ந்து  அங்கே
                               பாத்திரங்கள்  விற்கின்ற  கடைகள்    நான்கு
                   சேய்  முதலாய்  மங்கையரின்  கரங்களிலே
                               சேர்ந்தாடும்  வளையலுக்காய்  கடைகள்  அய்ந்து


                    தாய் மார்க்கு  சவுரி  முடிக்  கடையோ  ரெண்டு
                                தங்க முலாம்  நகைக் கடையோ மூன்றே  மூன்று
                    வாய்ப் பாட்டுக் குறுந்தகடுக்  கடையோ   ஒன்று
                                வகை வகையாய் பொம்மைகளின்  கடையும்  ஒன்று
                     போய்    அங்கோர்  சவுக்கெடுத்து   அவர்  விரட்ட
                                 பொங்கி  வந்த  ஏசு  பிரான்  இல்லை  அய்யா
                      தாய்மாரே  தந்தையரே  உங்களது
                                  தாள்  பணிந்து  நிற்கின்றேன் அசிங்கம்  தீரும

0 மறுமொழிகள்: