விரி விழிகள் அவற்றுக்குள் காட்டி நிற்பான்
வியன் உலகச் சிறப்பெல்லாம் ,,, வாய் திறந்து
சிரியெனவே கேட்டாலோ நூறு வகைச்
சிரிப்பதனைத் தந்து நின்ற தவன் ஒருவன்
மொழியெனிலோ அவன் மொழிந்தால் தமிழே ஆகும்
முதல்வன் என்றால் கலையுலகம் அவனைச் சொல்லும்
வழி வழியாய் வந்த ஆய கலைகள் எல்லாம்
வடிவமைத்தான் எங்கள் அண்ணன் சிவாஜியன்றோ
2 மறுமொழிகள்:
சொல்லிடவோ அவன் புலமை யானுமிங்கு
வில்போன்ற புருவங்கள் விரியும் தன்மை
கல்லினையும் கரையவைக்கும் கவின்மிகு விழிகள்
எல்லாரும் போலில்லா இயல்மிகு செயல்பாடு
கல்லாரும் காமுறுவர் எம்சிவாஜி நடிப்பினிலே!
சிம்மக்குரலுடையோன் சிவாஜி சிறப்புரைக்க
செம்மைத் தமிழெடுத்த செம்மலே- உம்மைப்
புகழ்ந்துரைக்க எனக்கில்லை புலமை ஆழ்கடலை
அகழ்ந்துரைப்பார் ஆரிங்குளர்?
தமிழன் வேணு
Post a Comment