செந்தாமரை மலரில் சீராக வீற்றிருக்கும்
செங்கண் மால் மார்பு உறையும் திருமகளே சரிதானோ
நொந்தழிய வைக்கின்றாய் நூலறிந்த மேலவரை
நோயாக வந்தவர்க்கு செல்வமதைக் குவிக்கின்றாய்
செந்திருவே நீ நிலத்தில் சாம்பலாய் ஒழிந்திடுக
சீரான பண்பாளர் பொன் போன்றார் அவர் தவிர்த்து
மைந்தராய் தீமைகளை மனம் கொண்டு வாழ்வாரின்
மணமில்லா மலர் போன்றார் தன்னிடத்துச் சேர்ந்தாயே
நாலடியார்
நாறாத்தகடே போல் நன்மலர் மேல் பொற் பாவாய்
நீறாய் நிலத்து விளியரோ - வேறாய
புன்மக்கள் பக்கம் புகுவாய் நீ பொன் போலும்
நன்மக்கள் பக்கம் துறந்து
0 மறுமொழிகள்:
Post a Comment