ஆர்ப்பரிக்கும் கடலினிலே கப்பல் விட்டு
அதன் முலம் வெள்ளையரை எதிர்த்து நின்று
போர்ப் பரணி பாடி நின்ற சிதம்பரத்தார்
பொது வாழ்வில் தனை அ(ழி)ளித்த பொன் மனத்தார்
சீர் பரவி நின்றாரா தமிழர் நாட்டார்
செய்த நன்றி மறந்தாரே அந்தோ அந்தோ
நீர் நிறைந்த கண்களுடன் நினைந்து நொந்தேன்
நெஞ்செல்லாம் புண்ணாகிப் புலம்புகின்றேன்
பார் முழுதும் அரசியலில் பங்கு பற்றி
பல விதமாய்ப் பாடு பட்டோர் இடையில் தன்னின்
சீர் அனைத்தும் இழந்து நின்ற சிதம்பரத்தை
செக்கிழுத்து நமக்குழைத்த செந்தமிழை
ஆர் நினைத்துப் பார்க்கின்றார் அந்தோ அந்தோ
அடிமை விலங்கறுத்தவரை மறந்தார் அந்தோ
ஊர் முழுதும் தவறானோர் விழாக்கள் காணும்
ஊமை மக்காள் உணர்ந்திங்கு பழி நீக்கீரோ
Tuesday, July 8, 2008
வ.உ.சி.40 ஆண்டு சிறைத்தண்டனை
Subscribe to:
Post Comments (Atom)
2 மறுமொழிகள்:
//செக்கிழுத்து நமக்குழைத்த செந்தமிழை
ஆர் நினைத்துப் பார்க்கின்றார் அந்தோ அந்தோ//
நல்ல வரிகள் அய்யா...
ம் வருத்தம்தான் யார் நினைத்துப் பார்க்கின்றார்கள் தேசத்தலைவர்களையும் தியாகம் செய்தவர்களையும்
வ.உ.சி. எனக்கு மிகப்பிடித்த தமிழத் தலைவரில் ஒருவர். அவரைப்பற்றிய உங்கள் அற்புதமான கவிதைக்கு பாராட்டுக்கள். என்றும் நினைவு கூரப்பட வேண்டிய தமிழ்த் தலைவர்.
வ.உ.சி உதிர்த்த வார்த்தைகள் சில
//எந்த நூலானாலும் குற்றமிருக்குமானால் அதனைத் தள்ளத் தயங்கக் கூடாது. நமக்கு கடவுள் பகுத்தறிவைக் கொடுத்திருக்கிறார். அதனைக்கொண்டு ஆராய்வோம்... கடவுள் எழுதினார் என்று கூறப்படும் நூலிலும் பிழை இருக்மானால் அதனையும் தள்ள வேண்டியது தான்... பெரிய புராணத்தில் கூறப்பட்டிருக்கும் மனுஸ்மிருதி இப்பொழுது உள்ளது தான் என்று கூறினால், சேக்கிழாருக்கும் பிராமணருக்கும் சம்மந்தம் உண்டென்று கூறுவதை தவிர வேறென்ன சொல்வது? வேதத்தில் பிழைகள் இருக்கலாம், திருத்த வேண்டியது தான். சைவத்திலும் அப்படியே தான். - வ.உ.சி //
Post a Comment