கலந்து மகிழ்ந்தவன் தான் கணப் போதும் பிரியாது
இணைந்து மகிழ்ந்தவன் தான் பொருள் தேடி இன்றென்னை
பிரிந்தே சென்றவுடன் பேதையெனை இத்தனை பேர்
இணைந்தே கொல்லுகின்றார் இது என்ன நியாயம் சொல்க
விரைந்தே கேட்கின்றாள் விரி விழியாள் அப்பப்பா
சிறந்தாள் முதல் குற்றம் சிவனின் மேல் ஆம் அய்யா
நிறைந்தான் எம் மனதில் மன்மதனைக் கொன்ற சிவன்
நிலையின்றி மீண்டும் ஏன் உயிர்ப்பித்தான் மன்மதனை
சிலை கொண்டு என்னை இன்றும் சீர் குலைப்பான் அப்பேதை
சிவனாரின் அன்பு இதைச் செப்பாமல் இருப்பேனோ
குலை நடுங்க வைக்குதிங்கே குயில் இதனின் குரலிங்கே
கூடு கொண்ட காகம் இதை அடை காத்துத் தந்ததனால்
படையல் வைத்த சோறுண்ட காகம் செய்த துரோகம் இது
பார் முழுதும் பாவையர்க்கு என்றென்றும் துரோகம் தான்
இடை இல்லாப் பெண்களுக்கு இடையூறு செய்யும் நிலா
இதை விழுங்கி எங்களுக்கு இன்பம் தந்த இராகு அதும
உடன் அதனை உமிழ்ந்தெங்கள் உயிர் பறிக்கச் செய்ததென்ன
உலகெங்கும் பெண்களது உயிர்த் துன்பம் அறியானோ
இடம் நேரம் என்று இங்கு எதுவுமே கருதாமல்
இடையூறாய் நிற்கின்ற அன்னையவள் செயல் பார் நீ
பட படத்து நிற்கின்றாள் பாவை யங்கே தோழியிடம்
பருத்த முலைத் தோழி என்று பாவையங்கு அழைத்தது ஏன்
இளைத்த முலையானதிங்காம் இவள் முலையும் பிரிவதனால்
கொடுத்து வைத்த தமிழினத்தீர் கொள்க இந்தப் பாடலினை
நாலடியார்
கண் மூன் றுடையானும் காக்கையும் பையரவும்
என்னீன்ற தாயும் பிழைத்ததென் - பொன்னீன்ற
கோங்கரும் பன்ன முலையாய் பொருள்வயிற்
பாங்கனார் சென்ற வழி
1 மறுமொழிகள்:
கொல்லுகின்ற்ர்
அதும
த.பிழை
//கண் மூன் றுடையானும் காக்கையும் பையரவும்//
இதற்கான 3 விளக்கங்கள் மிகச் சிறப்பு!
Post a Comment