கரு விழியாள் தன்னழகில் வீழ்ந்தேன் வீழ்ந்தேன் அந்தக்
கனியிதழாள் அமுத நஞ்சில் மாய்ந்தேன் மாய்ந்தேன்
தருவதிலும் பெறுவதிலும் வாழ்ந்தேன் வாழ்ந்தேன் அந்தத்
தளிர்க் கொடியாள் எனைப் பிரிந்தாள் ஒய்ந்தேன் ஒய்ந்தேன்
பெருமையுடன் நிமிர்ந்திருந்த ஆண்மை ஊரார்
பேசி நிற்கும் எந்தனது நாணம் என்னும்
இரு படகும் இழந்து விட்டேன் அந்தோ காமம்
எனும் பெரிய வெள்ளத்தில் நானும் நானும்
குறள்
காமக் கடும் புனல் உய்க்குமே நாணொடு
நல் ஆண்மை என்னும் புணை
1 மறுமொழிகள்:
பெண்ணென ஒருத்தி என்னிடம் வந்தாள்
என்னெனச் சொல்வேன் யானும் இங்கே
கண்ணென மதிக்கும் நாணம் துறந்தேன்
ஆண்மையும் சேர்த்திரு படகும் இழந்தேன்
காமம் என்னும் பெரிதொரு வெள்ளம்
என்னையும் கொண்டதை எப்படி உரைப்பேன்
Post a Comment