நீலகண்டர் மனைவி சொன்ன வார்த்தையொன்றில்
நிற்கின்றார் மனைவியவர் துணையுடனே
காலமது இறைவர் அவர் காமனையே
கண்ணுதலால் எரித்தவரின் வேலையது
ஆலமுண்டார் அவர் அன்புத் தண்டனையில்
அகப்பட்டார் நீலகண்டர் அதனால் அந்த
சீலமுள்ளார் எமைத் தீண்ட வேண்டாம் என்று
செப்பியதில் தப்புணர்ந்து நிற்கின்றாரே
இருவருமே ஒரு வீட்டில் இருக்கின்றாராம்
இருந்தாலும் உடல் சார்ந்த வாழ்க்கையில்லை
திரு மகளோ துணைவருக்காய்எல்லாம் அங்கு
தினப்படியே செய்கின்றார் குறைகளின்றி
வருபவர்க்கும் போவபர்க்கும் விருந்து ஒம்பி
வாழ்க்கையதன் சிறப்பையெல்லாம் போற்றுகின்றாராம்
ஒருவருக்கும் தெரியாமல் இந்த வாழ்வை
உவப்புடனே கொண்டாராம் இறையை ஏத்தி
சேக்கிழார்
கற்புறு மனைவியாரும் கணவருக்கான எல்லாம்
பொற்புறு மெய்யுறாமல் பொருந்துவ போற்றிச் செய்ய
இற்புறத்தெழுந்திடாமல் இருவரும் வேறு வைகி
அற்புறு புணர்ச்சியின்மை அயலறியார்து வாழ்ந்தார்
Saturday, July 26, 2008
பழம் பாடல் பெரிய புராணம்
Subscribe to:
Post Comments (Atom)
1 மறுமொழிகள்:
உங்களின் பதிவுகளனைத்தும் அருமை.
உங்களின் முகவரியை எனது வலைத்தளத்தில் இணைத்துள்ளேன்.
எனது வலைத்தளத்திற்கு வருகை தரவும்.
http://eerththathil.blogspot.com
நட்புடன்,
நிலவன்.
Post a Comment