Thursday, July 24, 2008

குறட் கருத்து காமத்துப் பால்

     பார்க்கின்றார்  பெண்கள் எல்லாம் உந்தன்   மார்பை

           பரத்தனென ஆனாய் நீ    இனியுன் மார்பை

    சேர்ந்திடவே மாட்டேன்   நான்  போ போ என்று

          சீறுகின்றாள் பெண்ணவளும்  வெறுத்தாற் போல

   கூர்த்த மதி வள்ளுவனார் இரண்டு செய்தி

        கூறுகின்றார் இக்குறளில் மிகச்   சிறப்பாய்

   சேர்ந்தவரைச் சேருகின்றார் பரத்தையென்றால்

        செப்புகின்றார் ஆடவனைப்  பரத்தனென்று

    மீண்டும் ஒரு செய்தி  இங்கே   சொல்லுகின்றார்

         மிக அருமை மிக  அருமை அந்தச் செய்தி

   காண்டு நிற்பார் பெண்கள்  என்றா சொல்லுகின்றார்

        கணக்காகப்  பெண்ணியல்பு கொண்டார் என்றார்

  தூண்டிடுமாம்  அவன் மார்பின் அழகு  அங்கே

       துடிக்கும் திருநங்கையரை  இழுத்திடுமாம்

  ஆண்களிலே  சிலர் கூட விரும்புவாராம்

       அப்படியே புரிய வைப்பார்   வள்ளுவரும்

                                         குறள்

 பெண்ணியலார் எல்லாரும் கண்ணில்  பொது   உண்பர்

நண்ணேன் பரத்த நின் மார்பு   

1 மறுமொழிகள்:

said...

பாராட்டுகள்.
விருத்தங்களீல் உங்கள் கவிதைகள் சிறப்பு.
காமத்துப்பால் கவிதையில்
"ஆண்களிலே சிலர் கூட விரும்புவாராம்" என்று அந்தக் குறளில் பொருள்கொள்ளச் சொற்கள் இல்லையே!
'பெண்ணியல் எல்லாரும் கண்ணீல் பொது உண்பர்" என்றுமட்டுந்தான் உள்ளது.

பெரி.சந்திரசேகரன்