Thursday, July 17, 2008

பழம் பாடல் அவிவேகசிந்தாமணி

      சிற்றிடையாள்  நிற்கின்றாள் முலைகள் தாங்கி

            சேர்ந்தங்கு  சுகித்தவனோ ரசிக்கின்றானாம்

     நெற்றி  முதல் கால் வரைக்கும் அழகுப் பெண்ணாள்

           நினைக்கவொண்ணா அணிகலன்கள் அணிந்திருந்தாளாம்

   வெற்றி அங்கு அவளுக்கே தங்கம்  எல்லாம்

        வீண் என்று சொன்னானாம்     சொன்னவனே

  சற்று தலை சாய்ந்து  நிற்கும் பெண்ணாள் மூக்கை

       சட்டென்று பார்த்தானாம் அங்கே பெண்ணாள்

 முத்தெடுத்து அணியாமல் குன்றி மணி 

     மூக்கினிலே அணிந்திருந்தாள் பார்த்த மகன்

 பட்டெனவே கேட்டானாம் என்ன இது

     பார்ப்பதற்கே ஒப்பவில்லை  என்று சொல்ல

சட்டெனவே பெண்ணவளும் கண்ணை வாயை

    சரியாக இரு கரத்தால் பொத்தினாளாம்

வெட்டெனவே இளைய மகன் கத்தினானாம்

   வெண் முத்து வெண் முத்து என்று சொல்லி

  தலை சாய்ந்து நின்றதனால் புல்லாக்கதும்

       தன்னிடத்தில் இருந்து சற்று நகர்ந்ததாலே

 கலையழகாள் கண்ணிரண்டின் கருமையது

      கணக்காக முத்தின் மேல் பகுதி சேர

 அலை கடலின் செம்பவள இதழ்கள் தம்மின்

     அச்சிவப்பு முத்தின் கீழ்ப் பகுதி சேர

 நிலை குலைந்தான் குன்றி மணி என நினைந்து

     நீள் விழியாள் இரு கரத்தால் உண்மை தேர்ந்தான்

                                                  அவிவேக சிந்தாமணி

   கொல்லுலை வேற்கயற்கண் கொவ்வையங்கனி வாய் மாதே

   ந்ல்லணி மெய்யில் பூண்டாய் நாசிகாபரண மீதில்

   சொல்லதில் குன்றி தேடிச் சூடியதென் னோவென்றான்

 மெல்லியல் கண்ணும் வாயும் புதைத்தனள் வெண் முத்தென்றான்

1 மறுமொழிகள்:

said...

முத்தின் வெண்மை, பிரதிபலிக்கும் தன்மை, செவ்விதழின் சிவப்பு, கண்விழிகள் கறுப்பு, இத்தனையும் சேர்த்தமைத்த வடிவான செய்யுள்; வளமான விளக்கம்!

கண்ணையும் வாயையும் பொத்தினாளாம் என்னுமிடத்தில்தான் சற்று தடுமாறிப்போனேன், எவருடைய கண்ணையும் வாயையும் என!!