பாரம் தாங்காமல் கற்றூண் வளைவதுண்டோ
படீரெனத் துண்டாகிக் கீழே விழுந்து விடும்
ஈர மனம் கொண்டு எல்லார்க்கும் உதவி நிற்கும்
எப்போதும் நல்லதையே வாழ்க்கையெனக் கொண்டிலங்கும்
வீர மனத்தார்க்குக் கேவலங்கள் ஏற்படுத்த
வீணர்களும் முயற்சி செய்து வெற்றி பெற நினைத்தாரேல்
சோரம் போவாரோ உயிர் துறப்பார் வெற்றி கொள்வார்
பாரத்தால் ஒடிந்த அந்தக் கற்றூணைப் போலத் தான்
மூதுரை
உற்ற இடத்தில் உயிர் வழங்கும் தன்மையோர்
பற்றலரைக் கண்டால் பணிவரோ== கற்றூண்
பிளந்திறுவதல்லால் பெரும் பாரந் தாங்கின்
தளர்ந்து வளையுமோ தான்
0 மறுமொழிகள்:
Post a Comment