Tuesday, July 8, 2008

குறட் கருத்து காமம்

காணுகின்ற மலர்கள் எல்லாம் கவிழ்ந்து கொள்ளும்
கண்மணி உன் கரு விழிகள் கண்டு விட்டால்
நாணி நிற்கும் அம்மலர்கள் உந்தனது
நளின விழி தனைக் கண்டால் என்று என்றும்
வானளவு புகழ்ந்திட்ட காதலர்தாம்
வரவில்லை என்பதனால் விழியிரண்டும்
ஆன மட்டும் அழுதழுது அழகிழக்க
ஆடி நிற்கும் மலர்கள் எல்லாம் ஆர்ப்பரித்து


குறள்

சிறுமை நமக்கு ஒழியச் சேண் சென்றார் உள்ளி
நறு மலர் நாணின கண்

1 மறுமொழிகள்:

said...

அட்டகாசமான விளக்கக் கவிதை!

அற்புதமாயிருக்கிறது.