சிற்றிடையால் மார்பகத்தின் செழுமை ஒங்க
சிரிப்பதனால் முல்லையெல்லாம் தோற்று ஒட
கற்றையெனும் குழலதனால் மேகம் வாட
கனி மொழியாள் நடக்கின்றாள் ஊரே பாட
விற் புருவப் பெண்ணாளின் பின்னே சாடி
விரைகிறதாம் மீன் கொத்திப் பறவை ஒன்று
கொத்தி விட வேண்டும் அந்தக் கயல்கள் ரெண்டை
கொஞ்சு மொழிப் பெண்ணாளின் கண்கள் தன்னை
கண்கள் ரெண்டும் கயல்கள் என்று எண்ணி எண்ணி
கவனமாய் பறக்கிறது பின்னாலேயே
பெண்ணவளின் அருகினிலே சென்று உடன்
பின் வாங்கி விண்ணோக்கிப் பறக்கிறது
ஒன்றுமில்லை பெண்ணாளின் புருவம் அங்கே
ஒளி வில்லாய்த் தெரிகிறது அச்சம் கொண்டு
சென்று சென்று மீண்டும் அது வருகின்றது
சேர்ந்தவனின் மனம் போலே ஆகா ஆகா
நாலடியார்
கண் கயல் என்னும் கருத்தினால் காதலி
பின் சென்றது அம்ம அச் சிறு சிரல் - பின் சென்றும்
ஊக்கியெழுந்தும் எறிகல்லா ஒண்புருவம்
கோட்டிய வில் வாக்கு அறிந்து
0 மறுமொழிகள்:
Post a Comment