Friday, July 18, 2008

பழம் பாடல் அவிவேக சிந்தாமணி

     வருகின்றார் நம்மையே தழுவுகின்றார் 

          வாயாரப் புகழுகின்றார் கொஞ்சுகின்றார்

   தருகின்றார் செல்வமதை அள்ளி அள்ளி

          தட முலை மேல் உறங்குகின்றார் தனை மறந்து

   அருகாமல் தள்ளி நின்றால் காலில் கூட

         அப்படியே விழுகின்றார் புரியவில்லை

  செரு காமம் தீர்க்கின்றார் இன்பம் தந்து

        சிந்தனைக்கு எட்டவில்லை காரணமும்

  அரிதான தொழில் இதிலே மூத்திருக்கும்

       அன்னைக்கு இணையான பெண்ணிடத்தில்

  விரி காமச் சோலையெனப் பூத்திருக்கும்

      விழியழகி கேட்கின்றாள் மூத்தவளோ

  சிரிப்போடு பதிலதனைச் சொல்லுகின்றாள்

     செம்மை மிக்க அறஞ் செய்யார் செல்வம் தன்னை

  பிரித்தெங்கும் சிதறடிக்க கள்ளைச் சூதைப்

    பெண்  நமையும்படைத்தானே பிரம்மன் தானே

                                       பாடல்கள்

  அன்னையே அனைய தோழி அறந்தனை வளர்க்கும் மாதே

  உன்னையோர் உண்மை கேட்பேன் உரை தெரிந்துரைத்தல் வேண்டும்

 என்னையே புண்ருவோர்கள் எனக்குமோர் இன்பம் நல்கி

 பொன்னையும் கொடுத்து பாதப் போதினில் வீழ்வதேனோ

                              பதில் பாடல்

 பொம்மென்ப் பணைத்து விம்மி போர் மதன் மயங்கி வீழும்

 கொம்மை சேர் முலையினாளைக் கூறுவேன் ஒன்றைக் கேண்மோ

 செம்மையில் அறஞ்செய்யாதார் திரவியம் சிதற வேண்டி

 நம்மையும் கள்ளும் சூதும் நான் முகன் படைத்தவாறே

2 மறுமொழிகள்:

said...

அடடா..இப்படியெல்லாம் பாடல்கள் இருப்பது உங்கள் மூலமாகத்தான் தெரிகிறது அய்யா!

கோடி நன்றிகள் உங்கள் சேவைக்கு!

said...

இன்றுதான் இந்தப்பக்கம் என் கண்ணில் பட்டன அருமையாக உள்ளது.

anpudan
rahini
germany