மாற்றிக் கொள்ள நினைந்தானா அவன் தன் நெஞ்சை
மயக்குகின்ற வேலை மட்டும் செய்த மகன்
ஆற்றிக் கொள்ள வழியின்றி அவன் நினைவில்
அரற்றுவதும் பிதற்றுவதும் மீண்டும் மீண்டும்
தேற்றுதற்கு ஆளின்றித் தவிப்பதுவும்
தினம் வேண்டாம் சொல்வதை நீ கேட்பாய் நெஞ்சே
மாற்றமின்றி என்னிடமே இருந்திடு நீ அவன்
மயக்கு நெஞ்சு அவனிடத்தே இருந்தால் போல
குறள்
அவர் நெஞ்சு அவர்க்கு ஆதல் கண்டும் எவன் நெஞ்சே
நீ எமக்கு ஆகாதது
0 மறுமொழிகள்:
Post a Comment