நன்றியில்லா நெஞ்சென்று தன் நெஞ்சையே
நங்கையவள் நினைக்கின்றாள் அழகு போங்கள்
மன்னவனைப் பார்த்ததவள் கண்கள் தானாம்
மனதுக்கோ அதனால்தான் பழக்கமானான்
சின்னவனைத் தேடி இந்த நெஞ்சு மட்டும்
சிறகடித்துப் பறக்கிறதாம் ஊர்கள் எங்கும்
கண்களையும் அழைத்துச் செல்ல வேண்டும் என்றே
கை கூப்பி வேண்டுகின்றாள் நெஞ்சம் தன்னை
குறள்
கண்ணும் கொளச் சேறி நெஞ்சே இவை என்னைத்
தின்னும் அவர்க் காணலுற்று
1 மறுமொழிகள்:
நெஞ்சோடு கண்ணங்கு செல்லுதற்கு கால்களன்றோ உதவவேண்டும்!
நெஞ்சு மட்டும் செல்லுதற்கு கால்களங்கு தேவையில்லை!
இருந்தாலும் குற்றமில்லை எல்லாமும்
கற்பனையே!
கண்பார்த்து நெஞ்சுண்டவன் மெய்யானால் நன்று!
Post a Comment