மெல்லத்தான தழுவுகின்றான் பொன் மகளாள்
மேனியெல்லாம் இதழ்க் கோலம் போடுகின்றான்
சொல்லத்தான் வார்த்தையின்றிப் பூ மனத்தாள்
சுகம் கண்டு இதம் கண்டு சொக்குகின்றாள்
அள்ளித் தான் தருகின்றார் இருவருமே
அவர்களுக்குள் தோல்வியில்லை வெற்றி ஒன்றே
கள்ளியின் தோள்களிலே களி முடிந்து
காதலனும் உறங்குகின்றான் சுகமோ சுகம்
மெல்ல அவன் விழிக்கின்றான் மார்பகமாம்
மெத்தையிலே வாய் புதைத்துச் சிரிக்கின்றானாம்
கள்ளியவள் விழிக்கின்றாள் சிரிப்பதனின்
காரணத்தைப் புரியாமல் திகைக்கின்றாளாம்
மெல்ல அவன் சொல்லுகின்றான் மேலுலகம்
மேலேயாம் பெரியவர்கள் சொல்லுகின்றார்
கள்ளி உந்தன் தோளில் நான் கொண்ட தூக்கம்
கார் மாலின் சொர்க்கத்தின் இனிதேயென்றான்
குறள்
தாம் வீழ்வார் மென் தோள் துயிலின் இனிது கொல்
தாமரைக் கண்ணான் உலகு
1 மறுமொழிகள்:
சொல்லித்தான் புரிந்திடுமோ
மெல்லியலாள் மென்மார்புச் சுகம்தனை
மெல்லத்தான் வருடுகிறாள்
உள்ளத்தில் உள்ளதெல்லாம் முன்கொண்டுவந்து
வல்லிய மென்முலை
மேலுலகம் வாழ்கின்ற கள்ளழகன் மஞ்சத்திற்கும் மேலாம்
சொல்லுகிறேன் கேட்பாய்
மாலினும் மேலாம் மென்முலை கொண்டவளே
Post a Comment