Sunday, March 20, 2011

குறளும் தேர்தலும்

வாள் போல் பகைவரை அஞ்சற்க அஞ்சுக
கேள் போல் பகைவர் தொடர்பு

வெளிப்படையாகத் தெரிகின்ற எதிரியைக் கண்டு அஞ்ச
வேண்டியதில்லை.

ஆனால் கூடவே இருந்து உறவாகக் காட்டிக் கொண்டு
மனதெல்லாம் வஞ்ச உணர்வோடு நம்மை ஒழிக்கத் திட்டமிடும்
அந்தப் பகைவர்களே ஆபத்தானவர்கள்.

சசிகலா அம்மையாரின் செயல்களுக்கும் இந்தக் குறளுக்கும் சம்பந்தமிருப்பதாக நீங்கள் நினைத்தால் அதற்கு நாங்கள் பொறுப்
பல்ல.

Thursday, March 17, 2011

அம்மையாரின் அரசியல்

வினை வலியும் தன் வலியும் மாற்றான் வலியும்
துணை வ்லியும் தூக்கிச் செயல்


செயலின் வலிமையையும் தனது வலிமையையும் தனது
எதிர் நிற்பான் வலிமையையும் தனக்குத் துணையாக இருப்பாரின்
வலிமையையும் நன்கு ஆய்ந்து ஒரு செயலைச் செய்ய வேண்டும்

உருவு கண்டு எள்ளாமை வேண்டும் உருள் பெருந்தேர்க்கு
அச்சாணி அன்னார் உடைத்து

பெரிய தேர்தான். அது ஒடத் துணை செய்யும் அச்சாணி தேரின் அளவைப் பார்க்கையில் மிக மிகச் சிறியதுதான். அதைக் குறைத்து மதிப்பிடுவது சரியான செயலா.

பொது உடைமை இயக்கங்கள் தே மு தி க ஆகியோரிடம் அம்மையார் நடந்து கொண்டுள்ள விதமும்

நண்பர் வை.கோ.அவர்களை அவர் நடத்திய விதமும் உங்க்ளுக்கு நினைவு வந்தால் நாம் பொறுப்பல்ல.

Friday, March 11, 2011

நாம் பொறுப்பல்ல திமுக காங்கிரஸ் கூட்டணி

வள்ளுவரின் சொல்லழகு வியப்பையே அளிக்கும்.

ஆமாம் மானம் குறித்துப் பேசுகின்றார். மயிரை இழந்தால் கவரி மான் உயிரை விட்டு விடும் என்கின்றார்.

அது சரி மனிதர்கள்.

வள்ளுவர் சொல்லுகின்றார் மனிதர்களும் உயிரை விடுவார்கள்தான்.

ஆனால்

அவர்களுக்கு மானம் வர வேண்டுமே என்கின்றார்

தி.மு.க. காங்கிரஸ் கூட்டணிக்கும் இந்தக் குறளுக்கும் சம்பந்தம் இருப்பதாக யாராவது கருதினால் நாம் பொறுப்பல்ல.

மயிர் நீப்பின் வாழாக் க்வரி மா அன்னார்
உயிர் நீப்பர் மானம் வரின்

வரின் என்கின்ற சொல்தான் உயிர்

Wednesday, March 9, 2011

ஓசியிலே எல்லாமே கொடுப்போம் அய்யா

மூணு நாளு மூணு நாளு கூத்தை யெல்லாம் - ஆமா
கூத்தை யெல்லாம் ஆமா கூத்தை யெல்லாம் - அய்யா
மொத்த மாகப் பார்த்தவர்க்கு நன்றி அய்யா - ஆமா
நன்றி அய்யா ரொம்ப நன்றி அய்யா
வேணுங்கதைக் வேணுங்கதைக் கொடுத் திட்டாங்க - ஆமா
கொடுத்திட்டாங்க அய்யா கொடுத்திட்டாங்க
வேண்டு மட்டும் வேண்டு மட்டும் எடுத்திட்டாங்க ஆமா
எடுத்திட்டாங்க அய்யா எடுத்திட்டாங்க அவங்க
வீட்டுக் கெல்லாம் சிபிஐ போகாதய்யா ஆமா
போகாதய்யா அய்யா போகாதய்யா நெசம்மா போகாதய்யா
ஒட்டை யெல்லாம் கொண்டு வந்து போடுங்கய்யா அய்யா
போடுங்கய்யா எங்களுக்குப் போடுங்கய்யா நாங்க
ஊழலைத் தான் சிறப்பாக வளர்ப்போம் அய்யா ஆமா
வளர்ப்போம் அய்யா நல்லா வளர்ப்போம் அய்யா - உங்களுக்கு
ஒசியிலே எல்லாமே கொடுப்போம் அய்யா நிறையக்
கொடுப்போம் அய்யா ஆமா கொடுப்போம் அய்யா

ஏய் டண்டணக்கு டண்டணுக்கு டண்டணுக்கு போடு
டண்டணுக்கு போடு டண்டனுக்கு ஆமா டண்டணுக்கு

Monday, March 7, 2011

தமிழ்நாடு இனி பொழச்சு வாழும்

தொண்ணித்தஞ்சு வச்சுக்கிட்டு ஆண்ட போது
தோண்வில்லை அய்யாவுக்குத் துன்பம் எல்லாம்
எண்ணிப் பாத்துக் கணக்குப் போட்டு எடமும் கேட்டா
எரிச்சலோடு புளிச்சல் வருது அய்யோ அய்யோ
க்ண்ணியமேயில்லை என்று கத்றுகின்றார் அந்தக்
காங்கிரசார் வேண்டாமென்று புலம்புகின்றார்
தன் கணக்கில் அமைச்சரகளாய் ஆறு பேரை
தான் வாங்கியிருந்த தெல்லாம் நியாயம் தானோ

புண்ணியமாய்ப் போச்சு அய்யா ஆண்டவன் தான்
புத்தியினைத் தந்து (உ)ள்ளார் காங்கிர சிறகு
அண்ணமாருக்கு இப்போ தான் வெளங்கிருக்கு இவர்
ஆண்டதிலே கண்ட சுகம் புரிஞ்சிருக்கு
மன்னவராய் இருப்பதற்கு மற்றவரின்
மடத்தனத்தை கையாண்ட சிறுமை யெல்லாம்
நல்ல வேளை ஆண்டவனும் காப்பாத்திட்டான்
நாடு தமிழ் நாடு இனி பொழச்சு வாழும்

Saturday, March 5, 2011

டண்டணக்கா டண்டணக்கா டாக்கா

வந்திடுத்து வந்திடுத்து தேர்தல் அய்யா
வாக்களிக்க வாக்களிக்க் வாங்க
எந்தக் கட்சி நல்ல கட்சி என்று
எக்குத் தப்புக் கேள்வி யெல்லாம் வேண்டாம்
நொந்த கட்சி நோஞ்ச கட்சி உண்டு
நோக வச்சுக் கொன்ன கட்சி உண்டு
சொந்தமென நாட்டையே தான் எண்ணும் அந்த
சொத்துக் கட்சி வென்றிடாமப் பாரும் ஆமா

டண்டணக்கா டண்டணக்கா டக்கா ஆகா
டண்டணக்கா டண்டணக்கா டக்கா

Wednesday, March 2, 2011

அன்பு செய்வீர்

வழிபாடு செய்கின்றீர் கூட்டமாக
வகை வகையாய் ஊர் தோறும் வணங்குகின்றீர்
கனிவாக அனைவரிடம் நடக்கும் பண்பைக்
கைக் கொண்டு வாழ்ந்தீரோ நினைந்து பாரும்
துணிவாகத் தீமைகளை எதிர்த்து நிற்கும்
தொண்டுள்ளம் கொண்டீரோ சொல்வீரா நீர்
அணி அணியாய் கோயில்களைச் சுற்றி வரல்
ஆண்டவனுக் கிசைந்ததல்ல அன்பு செய்வீர்