Showing posts with label பாரதி. Show all posts
Showing posts with label பாரதி. Show all posts

Sunday, December 11, 2011

ஏளனம் செய்ய விட்டார்

பாரதி பிறந்தான் இந்தப் பைந்தமிழ் நாட்டில் வந்து
வேரெது விழுதெது என்ற விபரங்கள் சொல்லுதற்காய்
ஆரதைக் கேட்டார் இங்கு அவரவர் ஆட்டம் போட்டார்
சீரெதும் நினைத்தாரில்லை சிந்தனை இழந்தே நின்றார்
நீரிதன் புதல்வர் என்ற நினைவினை அகற்றி விட்டு
ஊரெல்லாம் கொள்ளையிட்டார் உறவிற்கே பந்தலிட்டார்
யாரிவர் என்று இந்த மக்களைக் கலங்க விட்டார்
யாவரும் நம்மைப் பார்த்து ஏளனம் செய்ய விட்டார்

Sunday, September 11, 2011

சிந்தையில் உயிர்த்த நன்னாள்

தங்க நிகர் இமயமே தலைப்பாகை என்றொரு
தனிக் கர்வம்கொண்டிருந்தான்
தலைப்பாகைக்குள்ளேயோ தமிழையும் நாட்டையும்
தாங்கிய பெருமை கொண்டான்
சிங்க நிகர் வீரர்கள் தமிழர்கள் என்றொரு
செருக்கினைக் கொண்டு வாழ்ந்தான்
செந்தமிழ்த் தாய் பெற்ற சீராளன் பாரதி
சிந்தையில் உயிர்த்த நன்னாள்

Friday, December 11, 2009

ஆடுகின்றார்

பாரதிஎன் றொருகவிஞன் பிறந்தான் இன்று
பழந்தமிழைப் புதுத் தமிழாய்ப் புதுக்குதற்கு
ஊரதிரப் பெண்களுக்காய்க் குரல் கொடுத்தான்
ஊத்தைக் கற்பெனும் அந்தப் பெயரொழித் தான்
நீரறிவீர் தமிழை அவன் தந்தது போல்
நிலவுலகில் தந்தவர்கள் யாரும் இல்லை
யாரறிவார் இன்று இந்தத் தமிழுலகில்
யார் யாரோ ஆடுகின்றார் கவிஞர் என்று