Wednesday, July 13, 2016

வாரும் வே பசுங்கிளியா பிள்ளை. அத்தானை இப்பம்தான் நெனவு வந்திச்சோ.

ஆரம்பிச்சிட்டேளா. அய்யா நான் கடை கண்ணியோட படாத பாடு பட்டுக்கிட்டிருக்கேன். போதாக்குறைக்கு ஒங்க தங்கச்சி படுத்துத பாட்டையும் பொறுத்துக் கிட்டு ஒருத்தன் வாழுறதே பெரிய காரியம்ண்ணு நெனைக்கவே மாட்டுக்கேளே.

வே நாங்க பைத்தியக்காரத்தனமா எங்க தங்கச்சிய கட்டிக் கொடுத்தத இப்படிச் சொல்லிக் காட்டுதீரோ அவ இருக்கப் போய்தாம் நீரு மணந்துக்கிட்டு இருக்கீரு மறந்திராதியும்.

சரிய்யா வாயத் தொறக்க விடமாட்டேளே.

யத்தான் நான் நேத்து ராத்திரியே வந்திட்டேன். இப்பம் போய் அவாளத் தொந்தரவு ப்ண்ணாதேன்னு ஒங்க மாமனார் சொன்னதுனாலதான் இப்ப வந்தேன்.  ஆமா இந்த ஆவுடையப்பம் பொண்டாட்டி யாரோடயோ ஒடிப் போயிட்டாளாமே. அத ஊர்க்காரனுவ சொல்லுதானுவ  அவோ ஒங்க பெரிய வீட்டு அத்தான் அந்தப் பிள்ளைய எவனும் கொற சொல்லாதீங்ல ண்ணு உத்தரவு போடுதாவண்ணு சொல்லுதானுவளே நெசந்தானா.

நெனச்சேம் தென்காசிக்கு தகவல் வந்து இத வெசாரிக்கத்தாம் நீரு வந்திருக்கேரு. இதில அத்தானப் பாக்க வந்ததா ஒரு நாடகம்.


எய்யா அது சின்னப் புள்ள நல்லா பாக்க அம்சமா வேற இருக்கு. அதப் போயி அவ அம்மை அந்த ஆவுடையப்பப் பயலுக்கு நாப்பது வயசான பயலுக்குக் கட்டிக் கொடுத்தா எப்படிவே சரி. சொல்லும். பளிச்சினு எல்லாப் பயலுவளையும் போல நீங்க பேசலாமா.தென்காசியில் எத்தனை பெரிய தமிழ் அறிஞர்கள்லாம் வந்து திருக்குறள் கழகத்தில் பேசுதாங்க. அதை நல்லாக் கேட்டிருந்தா பொம்பளப்புள்ளயக் கொற சொல்றத விசாரிக்க வர மாட்டீய.


அவ அம்மையப் போல மகன்னு ஊர்க்காரனுவ சொல்லுதானுவள்ளா. அதான்  கேக்கலாம் ன்னு வந்தேன்.

மக்களுக்கு ஆயிரம் பிரச்சினை எல்லாம் இருக்கு அதையெல்லாம் விட்டுப் போட்டு இதக் கேக்க வந்தேளாக்கும்

என்ன அவ அம்மே பண்ணிட்டா. அவளும் அந்தக் கிராமத்திலேயே அழகுல்லா.  ஒடம்பு வேற நல்லாச் சாப்பிட்டு சாப்பிட்டு வளந்திருந்துது.நெய்யும் தயிருமால்லா அவ அம்மே அவள வளத்தா.
அவளைக் கொண்டு சொந்தம்ண்ணு ஒரு டிரைவருக்குக்  கட்டி வச்சா.
அந்தப் பய காரையே சரியா ஒட்ட மாட்டான்னு திருநவேலி பூராம் தெரியும்.

சரி இரண்டு பொட்டபுள்ளகள்யும் பெத்தா. இவம் ஒழைக் கதில்ல.எப்பம் பாரு எவங்கிட்டயாவது கடன் வாங்கியே பொழப்ப ஒட்ட்ப் பாத்தான். அப்பந்தாம் அவ தூரத்து சொந்தக்காரன் தாசிலதாரா வந்தான். அவ வீட்டுக்குக் கிட்டய குடியும் வந்தான் . இவ அவனுக்குப் பொங்கிக் குடுத்தாவது புள்ளைகளக் காப்பாத்த்லாம்ன்னு அவனுக்கு பொங்கிக் கொடுக்க ஆரம்பிச்சா . இவ புருஷங்காரப் பய அவங்கிட்டயும் பிச்சை எடுக்க ஆரம்பிசான். அந்தப் பய இவள ரொம்ப அன்பா வச்சுக்கிட்டான். வேணும்ன்னாவே அந்தப் புள்ள பண்ணுச்சி. சூழ்நிலைவே மாப்பிள்ளை.பொசுக்குண்ணு பேசிடப்பிடாது பொம்பளப்புள்ளகள புரியுதா.

0 மறுமொழிகள்: