Showing posts with label ஆக்கி தன்ராஜ் பிள்ளை. Show all posts
Showing posts with label ஆக்கி தன்ராஜ் பிள்ளை. Show all posts

Saturday, July 16, 2011

ஆக்கி வீரர் தன்ராஜ் பிள்ளை பிறந்த நாள்

மட்டைக்குள் பந்து அது சுழலும் அது
மயக்கத்தில் சுழல்வது போல் தெரியும்
கட்டுக்குள் பந்து அது நிற்கும் அவர்
கால்களுக்கு இடையில் உருண்டோடும்
பட்டெனவே முன் களத்தில் பாய்வார் அந்தப்
பந்ததுவும் வலைக்குள்ளே பாயும்
கட்டழகுக் கருப்பர் தன்ராஜ் பிள்ளை அவர்
காணுகின்றார் பிறந்த நாளை இன்று