மனையாளைத் தேவியென வணங்கி நின்று
மதங்களையேச் சரியாக உணர்ந்து வென்று
அனைவருக்கும் நல் வழிகள் காட்டி நின்று
ஆண்டவனை உணருதற்குக் கதைகள் சொல்லி
புனைகின்ற வேடமல்ல மனம் தான் நம்மைப்
புதிதாக்கும் இறைவனையே உணரச் செய்யும் என
தனை நமக்காய்த் தந்த பரம உறம்சரவர்
தான் வந்து தாய் மண்ணில் பிறந்த நன்நாள்
Sunday, February 20, 2011
பரமஹம்சர் பிறந்த நாள்
Wednesday, January 12, 2011
தொண்டர் தோன்றிய நாள்
துறவு என்றால் தொண்டு என்ற உண்மைதன்னை
துலங்க வைத்த பெருமனிதன் தோன்றிய நன்னாள்
உறவு என்றால் ஏழையர்கள் என்று கொண்ட
உரத்த குரல் மாமுனிவன் உதித்த நன்னாள்
கரவு இல்லா உண்மைகளை என்றும் எங்கும்
கதைப்பதிலே அச்சமில்லான் வந்த நன்னாள்
நிறைவு விவேகாநந்தர் என்ற சொல்லே
நீள் உலகம் வாழ வைக்கும் பெரும் பெயரே
Saturday, December 5, 2009
வணங்கி நிற்போம் விவேகாநந்தர்
அழுதழுது துன்பத்தில் பெண்கள் வாழும்
அவ் வீடும் அந் நாடும் அழிந்தொழியும்
பழுதற்ற தாய்மை யென்று பெண்ணைப் போற்றும்
பாரதத்தில் பிறந்தீரே இதை உணர்வீர்
தொழுவதற்கு தாயன்றி வேறோர் தெய்வம்
தூயவரே இல்லையென்று வேதம் சொல்லும்
விழுதாகி அனைத்தையுமே தாங்கி நிற்கும்
வீரர் அவர் அவர்களையே வணங்கி நிற்போம்
Saturday, November 21, 2009
என் மதம்
ஆதரவற்று எங்கோ தெருவோரத்தில்
அழுது கொண்டிருக்கின்ற நாயதற்கு
தேடிச் சென்று ணவளித்து காத்தல் ஒன்றே
தெளிவான என் மதம் ஆம் உணர்வீர் நீரே
கோடிக் கணக்கான பணத்தைச் சேர்த்து
கோயில் கட்டும் கொள்ளையர் தம் கோயிலுக்குள்
நாடி நிற்கும் ஆண்டவனார் வரவே மாட்டார்
நமக்குரைத்தார் துறவி விவேகானந்தருமே
Sunday, September 20, 2009
எந்தன் மதம்
பாவங்கள் தீர்ப்பதற்காய் இராமேஸ்வரப்
பவித்திரமாம் தீர்த்தத்தில் குளிப்பார்தம்மை
பாவத்தில் மேலும் ஒன்றைக் கூட்டிக் கொண்டார்
பாவியவர் என்கின்றார் விவேகானந்தக்
காவியுடை வேந்தரவர் மேலும் சொல்வார்
கவனிக்க ஆளற்றுக் கிடக்கும் நாயின்
தேவையதைப் பசியதனை தீர்ப்பதுவே
தெரிகின்ற நல்ல மதம் எந்தன் மதம்