Monday, February 28, 2011

நாணம் கொள்வாள்

எத்தனையோ கொடுமைகளைச் செய்து வாழ்வார்
எவர் சொத்தும் தன் சொத்தாய் ஆக்கிக் கொள்வார்
சத்தியமாய் வெட்கம் என்ற சொல்லை இவர்
சாக்கடையாம் வாழ்க்கையிலே கொண்டதில்லை
முத்தமிழைக் கூட இவர் பெற்ற தாக
முட்டாள்கள் பலர் இங்கு முழங்கிடுவார்
எத் திசையும் புகழ் கொண்ட தமிழாம் தாயோ
இவர் பிறந்த காரணத்தால் நாணம் கொள்வாள்

Tuesday, February 22, 2011

நந்தா கல்வி நிலையங்கள்

ஈரோடு நந்தா கல்வி நிலையங்கள் விழா 24 பிப்ரவரி

உட்கார்ந்திருக்கின்றார் அரசவையில்

தமிழிலே பொறியியலைப் படிக்கின்றானாம்
தர மாட்டோம் வங்கியிலே கடன் என்கின்றார்
அமிழ்தினிய தமிழர் தம் நாட்டில் வாழும்
அதிகாரக் கூட்டத்தார் என்ன செய்ய
தமிழர்கள் தான் அவரும் ஆனால் சொல்லுகின்றார்
தமிழ் நாட்டில் உயிரோடும் வாழுகின்றார்
உமிழுகின்ற பொய்யாலே உயிர் வாழ்கின்றார்
உட்கார்ந்திருக் கின்றார் அரசவையில்

Monday, February 21, 2011

அருணா சாய்ராம்

விஷம க்காரக் கண்ணன் பாடப் பாட
விரும்பி நிற்கும் அவையோரும் ஆடிநிற்பர்
வசமான தமிழாலே வழங்கும் இசை
வானுலகம் வென்று மேலும் புகழைச் சேர்க்கும்
திசையெல்லாம் இசை பரப்பிவென்று நிற்பார்
தீந் தமிழால் மென் மேலும் பாடி இவர்
அசை யாத மனத்தை யுமே அசைய வைக்கும்
அன்னை அருணா சாய்ராம் வாழ்க வாழ்க

Sunday, February 20, 2011

பரமஹம்சர் பிறந்த நாள்

மனையாளைத் தேவியென வணங்கி நின்று
மதங்களையேச் சரியாக உணர்ந்து வென்று
அனைவருக்கும் நல் வழிகள் காட்டி நின்று
ஆண்டவனை உணருதற்குக் கதைகள் சொல்லி
புனைகின்ற வேடமல்ல மனம் தான் நம்மைப்
புதிதாக்கும் இறைவனையே உணரச் செய்யும் என
தனை நமக்காய்த் தந்த பரம உறம்சரவர்
தான் வந்து தாய் மண்ணில் பிறந்த நன்நாள்

Wednesday, February 16, 2011

நபி பெருமான்

தொழுது நிற்பீர் இறைவன் அவன் ஒருவனையே
தொல்லுலகை வாழ்க்கையினைத் தந்தவனை
அழுது நிற்கும் ஏழையர்க்கு உதவி நிற்பீர்
அல்லாஉற் அவர் ஆசி முழுதும் உண்டு
பழுதற்ற வாழ்க்கையினைக் கொண்டு வாழும்
படைத்தவரை ஐந்து நேரம் பணிந்து நில்லும்
விழுதாகி மனித குலம் தழைப்பதற்காய்
வீரர் வந்தார் நபி பெருமான் இன்று போற்ற

Monday, February 14, 2011

நெஞ்சு பொறுக்குதில்லையே

தாமஸ்ஸின் மீது குற்றப் பத்திரிக்கை இருப்பது தெரியாது என்று பிரதமரும் உள்துறை அமைச்சரும் சொல்லியுள்ளனர்.

வெளியுறவுத் துறை அமைச்சர் வேற்று நாட்டுத் தலைவர் உரையை ஐ.நா. சபையில் படிக்கின்றார்.

தலித் என்று ராஜாவைச் சொன்ன முதலமைச்சர் தலித்தை மட்டும் சிறைக்கு அனுப்பி விட்டு தன் குடும்பத்தினரைக் காப்பாற்றிக் கொள்கின்றார்.

நெஞ்சு பொறுக்குதில்லையே என்ற பாரதியின் வரிகள்
நெஞ்சைச் சுடுகின்றது

காதலர் தினம்

நாளெல்லாம் காதலிக்க வாய்ப்பைத் தந்து
நலம் காண ஆண் பெண் இரு பாலர் தந்து
வாழ்வதற்கே வாழ்க்கை என்ற தெளிவும் தந்து
வகை செய்த இறைவனுக்கு நன்றி சொல்வோம்
கோள்பார்த்து நாள் பார்த்துத் திருமணத்தில்
கூடியோரும் காதலித்தே வாழுகின்றார்
நாள் ஒன்றே காதலுக்கு என்று சொல்லும்
நாகரீகம் அய்யய்யோ கேலிக் கூத்து

Saturday, February 5, 2011

நினைவுப் பரிசும் அறிஞர் பெருமக்களும்

நெல்லைகண்ணன் நற்பணி மன்றத்து தோழர்கள் நினைவுப் பரிசு வழங்குகின்றனர்

அவினாசி கு.சிவராஜ் அவர்கள்

கவிஞர் கிருஷி அவர்கள்

கவிஞர் முத்தமிழ் அவர்கள்

அவினாசி தொழிலதிபர் கீர்த்திவாசன் அவர்கள்

மார்ஜின் ப்ரீ மார்க்கெட் ராஜசேகரன் தமிழ்க்கடல் அய்யா அவர்களோடு

திருமதி மீனாகுமாரி கனகராஜ் அவர்கள்

மார்ஜின் ப்ரீ மார்க்கெட் உரிமையாளர் ராஜசேகரன் அவர்கள்

தேவகோட்டை ரவி குருக்கள்

நல்லையா துரைராஜ் அவர்கள் தமிழ்க்கடல் அய்யாவோடு

ஒய்வு பெற்ற தொலைபேசித் துறை மேலாளர் மைக்கேல் சற்குணர்

திருமிகு நல்லையா துரைராஜ் அவர்கள்

தூத்துக்குடி புலவர் சங்கரலிங்கம்

வண்ணார்பேட்டை வாசகர் வட்டத் தலைவர் சுந்தரம்

தமிழ்நாடு நெல்லை கண்ணன் நற்பணி மன்றத்தின் பொதுச் செயலர் வழக்கறிஞர் மதார் மொய்தின்

தமிழ்நாடு நெல்லைகண்ணன் நற்பணி மன்றத்தின் தலைவர் சதீஷ் ரெங்கநாதன் நாஞ்சில் நாடனுக்கு பொன்னாடை போர்த்துகின்றார்

தொகுப்புரை திருமதி ரேணுகா வேலுச்சாமி

ஆதி பராசக்தி கல்லூரி முன்னாள் முதல்வர் திருமதி மீனாகுமாரி திருமதி வண்ணதாசன் திருமதி கலாப்ரியா

பெரியவர் தி..க.சி.அவர்களின் தலைமை உரை

அவையினர்

அவையினர்

எழுத்தாளர்கள் நாறும்பூநாதன் சு.வேணுகோபால் தளவாய் இராமசாமி சக்திஜோதி

தர்மகிருஷ்ண ராஜா மதுமிதா கா.சு.மணியன் ச/மணி கலாபிரியா கல்யாண்ஜி நாஞ்சில் தி.க.சி.

கவிஞர் பாமணி வரவேற்புரை

பங்கேற்பாளர்கள் அனைவரும் மேடையில்

ராவ்பஹதூர் தர்மராஜா கல்வி அறக்கட்டளையின் நிர்வாக அறங்காவலர் தர்மகிருஷ்ண ராஜா அவர்கள்

அய்யம்பாளையம் கவிதாயினி சக்தி ஜோதி அவர்கள்

இராசபாளையம் கவிதாயினி மதுமிதா அவர்கள்

வழக்கறிஞர் மருமகன் மணி அவர்கள்

வண்ணதாசன் அவர்கள்

கவித்தென்றல் கா.சு.மணியன் அவரகள்

தமிழினி வசந்தகுமார் அவர்களை சுந்தரம் மேடைக்கு அழைத்துச் செல்கின்றார்

தம்பி நாஞ்சிலை வண்ணார்பேட்டை வாசகர் வாட்டம் சுந்தரமும் மதார் மொய்தீனும் மேடைக்கு அழைத்துச் செல்கின்றனர்

எனது துணைவியாரும் நாஞ்சிலின் துணைவியாரும் எனது மகளும்

நற்பணி மன்றத்தினர் நாஞ்சிலுக்கு ஏற்பாடு செய்திருந்த கேடயம்

மகன் இல.சுப்பிரமணியன் எனது நற்பணி மன்றத்தின் செயலர் மதார் மொய்தீன் வழக்கறிஞர்

அன்பு மாப்பிள்ளை கலாப்ரியாவோடும் தம்பி நாஞ்சிலோடும்

வண்ணதாசனும் நாஞ்சில் நாடனும் அண்ணாச்சி தளவாய் இராமசாமி அவர்களும்

அரங்கிற்குள் தம்பி நாஞ்சில் நாடன்

அரங்கிற்குள் நான்

பிள்ளையார்பட்டி பிரசாதத்தோடு வந்த என் மேல் உயிரையே வைத்திருக்கும் காரைக்குடி சித .பழனியப்பன்

கவிஞர் கிருஷி கா.சு.மணியன் தம்பி நாஞ்சில் நாடன் அவினாசி பூபதி

விழா மேடைப் பின்புலம்

விழா மேடை

தம்பி நாஞ்சில் நாடன்பாராட்டு விழா நுழை வாயில்

Friday, February 4, 2011

அருணா சாய்ராம் மதுரை சோமு

அனுபவித்துப் பாடுவதில் அருணா சாய்ராம்
அவருக்கிணை அவரே தான் போட்டியில்லை
தனுப் பிடித்து நிற்கின்ற இராமன் கூட
தனை மறப்பான் சீதையினை மறந்து நிற்பான்
வினை யதனால் வீழ்ந்து விட்ட இராவணனும்
வீணை கொண்டு அவரோடு இசைத்து நிற்பான்
தனை மறந்து என்ன கவி பாடி நிற்க
தமிழ்ச் சோமு உள்ளிருந்து வாழ்த்தி நிற்பார்

Thursday, February 3, 2011

வாக்கு பிச்சை போடு

ராசாவைக் கைது செய்து விட்டோம் விட்டோம் மத்த
ராப்பாடி கூட்டத்தையே விட்டோம் விட்டோம்
பேசாம இருக்கதுக்கு ராசா கிட்ட நாங்க
பேரமெல்லாம் பேசி விட்டோம் நல்லா நல்லா
கூசாமல் கூட்டணியும் வைப்போம் வைப்போம் நாங்க
கொள்கை என்ற கெட்ட வார்த்தை விட்டோம் விட்டோம்
வா சாமி வந்து போடு வாக்கை வாக்கை நாங்க
வாழ்வாங்கு வாழ்வதற்கு பிச்சை போடு

Tuesday, February 1, 2011

பில்லி சூனியம் எடியுரப்பா

எனக்கெதிராக பில்லி சூனியம் வைத்திருக்கின்றார்கள்
எடியூரப்பா


வாய்ப்பிருந்தால் மொத்தத் தலைவர்க்ளுக்கும் அல்ல்வா
வைத்திருப்பார்கள் மக்கள்