Saturday, December 24, 2011

பெருமை ஆனார் பெரியார் எம்.ஜி.ஆர்.

மக்களின் வாழ்க்கைக்காக வாழ்ந்தவர் இருவர் இன்று
மக்களின் நெஞ்சுக்குள்ளே மாறாத மணமேயானார்
பொக்கை வாய்ப் பெரியாரோடு பொன்மனச் செம்மல் என்னும்
தக்கவர் இருவர் ஆமாம் தமிழர் தம் பெருமை ஆனார்

Sunday, December 18, 2011

அய்யா அவர்களோடு நானும் எனது துணைவியாரும்


அய்யாவின் எழுத்துக்களுக்கு நான் ரசிகன். இசை அறிவும் மிக்கவர் அய்யா அவர்கள். நெல்லையில் பிறந்தவர் அல்லவா

அன்பு அய்யா காவற்றுறை முன்னாள் தலைவர் நடராஜ் அவர்களோடு


நெல்லைக்கு வந்திருந்த அய்யா இந்திய காவற்றுறை அதிகாரி ந்டராஜ் அவர்களொடு எனது இல்லத்தில்

நன்றி

நெல்லைக்கு வருகின்ற நல்லவர்கள்
நேராக என் இல்லம் வருகின்றார் காண்
அள்ள அள்ளக் குறையாத அன்னை தமிழ்
அளித்திட்ட அன்பெல்லாம் பகிர்கின்றார் காண்
கொள்ளை கொண்டு செல்கின்றார் எந்தன் உள்ளம்
கோடி யென்ன கோடி அவை தூசு என்பேன்
நல்லவரே உங்களது அன்பினால் தான்
நான் இன்றும் வாழுகின்றேன் நன்றி நன்றி

Sunday, December 11, 2011

ஏளனம் செய்ய விட்டார்

பாரதி பிறந்தான் இந்தப் பைந்தமிழ் நாட்டில் வந்து
வேரெது விழுதெது என்ற விபரங்கள் சொல்லுதற்காய்
ஆரதைக் கேட்டார் இங்கு அவரவர் ஆட்டம் போட்டார்
சீரெதும் நினைத்தாரில்லை சிந்தனை இழந்தே நின்றார்
நீரிதன் புதல்வர் என்ற நினைவினை அகற்றி விட்டு
ஊரெல்லாம் கொள்ளையிட்டார் உறவிற்கே பந்தலிட்டார்
யாரிவர் என்று இந்த மக்களைக் கலங்க விட்டார்
யாவரும் நம்மைப் பார்த்து ஏளனம் செய்ய விட்டார்

Monday, December 5, 2011

பண்புகளால் வென்றிடலாம்

அன்பு செய்து வாழுங்கள் வறியவர்க்கு
ஆன மட்டும் உதவுங்கள் உதவி வேண்டி
நண்பரல்லார் வந்தாலும் மன மகிழ்ந்து
நலம் பலவும் செய்யுங்கள் உறவார் கூட
பண்பின்றி பல துன்பம் தந்திருந்தும்
பசித் துன்பம் இன்றி அன்பாய்க் காத்திடுங்கள்
கண்ணுதலின் பேரிறைவன் காத்து நிற்பான்
கவலையின்றி பண்புகளால் வென்றிடலாம்

Sunday, December 4, 2011

நான் பணிந்து நின்றேன்

அப்பா என்றுனை அழைத்தேன் ஏற்றுக் கொண்டாய்
அய்யனே அண்ணாமலை அழகனே நீ
அப்பா என்றெனை அழைக்க ஆசை கொண்டார்
அன்புடனே திருலோகசந்தர் என்பார்
ஒப்பில்லாத் தமிழன்னை தந்த வரம்
உயர் அன்பைத் தருகின்ற தெந்தனுக்கு
இப்பாரில் இவரைப் போல் உள்ள பிள்ளை
எனக்களித்த இறைவனே நான் பணிந்து நின்றேன்

Wednesday, November 30, 2011

இறைவன் துணை

புரியாமல் வாழுகின்றேன் அன்பை நம்பி
போற்றுவோர் தூற்றுவோர் அனைவரிடம்
அறியாமல் வாழுகின்றேன் என்றே பலர்
ஆதங்கம் கொள்கின்றார் என்னிடத்தில்
சிறியாராய் அவர் நடந்தால் எனக்கு என்ன
சிந்தித்தே முறையாய்த் தான் வாழுகின்றேன்
வறியானாய் ஆனாலும் எந்தனது
வழி முறைகள் மாறாது இறைவன் துணை

Sunday, November 20, 2011

தாயருளால் என்னைக் காப்பாய்

குணமாக்கி எனைக் கொல்ல வேண்டும் அய்யா
கோமகனே உன் பாதம் பணிந்தே நின்றேன்
இரணமாக்கிக் கொல்கின்றார் உற்றார் நண்பர்
இரவெனினும் பகலெனினும் உந்தன் துணை
பிணமாக்கிப் பார்க்கின்றார் நிதமும் என்னை
பேணி நிற்கும் அன்பாலே வந்த வினை
கணமேனும் உனை மறவா அருளைத் தந்த
கண்ணுதலே தாயருளால் என்னைக் காப்பாய்

Sunday, November 13, 2011

திருமதி மதுமிதா திருமதி பரமேஸ்வரி திருமதி விஜயலட்சுமி திருமதி சக்திஜோதி

பாட்டையா என்று என மகன் சுகாவால் அன்போடு அழைக்கப்பட்ட் பாரதி மணியோடு

தம்பி மகள் ஆம் என அன்பு மகளோடும் மருமகனோடும்


பெரியப்பா என்று வாய் நிறைய கூப்பிடும் என் அன்பு மகளும் மருமகனும் வாழ்க வாழ்க என்று வாழ்த்தி மகிழ்கின்றேன்

தம்பி நாஞ்சில் நாடன் மகள் மருததுவர் சங்கீதா விவேகானந்தன் திருமண வரவேற்பு


நாள் 12-11-2011 சனிக்கிழமை மாலை

Sunday, September 11, 2011

சிந்தையில் உயிர்த்த நன்னாள்

தங்க நிகர் இமயமே தலைப்பாகை என்றொரு
தனிக் கர்வம்கொண்டிருந்தான்
தலைப்பாகைக்குள்ளேயோ தமிழையும் நாட்டையும்
தாங்கிய பெருமை கொண்டான்
சிங்க நிகர் வீரர்கள் தமிழர்கள் என்றொரு
செருக்கினைக் கொண்டு வாழ்ந்தான்
செந்தமிழ்த் தாய் பெற்ற சீராளன் பாரதி
சிந்தையில் உயிர்த்த நன்னாள்

Tuesday, August 30, 2011

கலைவாணர் என்.எஸ்.கே. நினைவு நாள்

சிந்திக்க வைப்பதற்கே சிரிக்க வைத்தான்
செந்தமிழர் மனத்தி லெல்லாம் நிலைத்து நின்றான்
மந்திரத்து மாய்மாலம் ஒழிப்பதற்கோ
மனம் தெளிந்து சிரிக்க வைத்து வெற்றி கண்டான்
இந்திரனின் ஆட்சியிலும் மது ஒழிக்க
எண்ண வைத்த கூத்து ஒன்றை ஆடி வைத்தான்
நந்தனையே மனம் கொண்டு கிந்தனையே
நமக்களித்து கல்வியினை உணர வைத்தான்

Friday, August 12, 2011

கொங்கு பொறியியற் கல்லூர் நண்பர் முத்துச் சாமியோடு மேடை நோக்கி விரைகின்றேன்


ஐந்தாம் தேதி விழாவிற்காக மகிழூந்தில் வந்து இறங்குகின்றேன்


ஈரோடு புத்தகத் திருவிழா நுழைவாயில்


ஈரோடு மக்கள் சிந்தனைப் பேரவை புத்தகத் திருவிழா


நுழை வாயில் விள்ம்பரம்

Tuesday, August 9, 2011

விதிதான் போலும்

வெள்ளையனே வெளியேறு என்று காந்தி
வீரமுடன் முழக்கமிட்ட நன்னாள் இந்நாள்
கள்ளமில்லாக் கதராடை உள்ளம் போல
கண்ணியத்தின் பேரூருவம் கொண்டார் எல்லாம்
துள்ளி அன்று வந்தார்கள் விடுதலைக்காய்த்
துச்சமென உணர்ந்தார்கள் உயிரை அன்று
எள்ளி நகையாடுகின்ற நிலையில் இன்று
இருக்கின்றோம் என்ன செய்ய விதி தான் போலும்

Tuesday, August 2, 2011

ரமலான் நோன்பு

சொர்க்கத்தைத் திறந்து வைத்து மிகக் கொடிய
சூதாளர் நரகத்தை அடைத்து வைத்து
மக்களெல்லாம் இறைவனது மாண்புணர்ந்து
மண்டியிட்டுத் தொழுது நின்று பணிவுடனே
தக்க படி நோன்பதனை ஏற்கும் மாதம்
தனியாக முப்பது நாள் ரமலான் ஆமாம்
எக்கணமும் எப்பொழுதும் இறைவனையே
ஏற்றி நிற்கும் இசுலாத்தார் இனிய மாதம்

Monday, August 1, 2011

திலகர் பிறந்த நன்னாள்

வ.உ.சி. பாரதி என்றுயர்ந்தோர் பல்லோர்
வழி காட்டித் தலைவன் என்று ஏற்ற வீரர்
ஊர் தோறும் மக்களிடை விடுதலை நம்
ஒவ்வொருவர் பிறப்புரிமை என உரைத்தோர்
சீரான கல்வியிலே உயர்ந்து நின்றோர்
சிறப்பான இந்தியத் தாய் பெற்ற மேலோர்
நாம் வணங்கி நிற்கின்றோம் திலகர் தன்னை
நாட்டுக்காய் வாழ்ந்த அவர் பிறந்த நாளில்

Friday, July 22, 2011

ஓங்குகின்றார்

வெறுத்தல் கொண்டு வாழ்ந்தவர் எல்லாம்
வீணென வீழ்ந்தே இறந்து பட்டார்
வெறுத்தல் இல்லா விரிமனத்தாரோ
வென்றிவண் உயர்ந்தே வாழ்ந்து நின்றார்
அறத்தின் வழியை அறவே துறந்தவர்
அபலைகளாகி தெருவில் நின்றார்
அறமே வாழ்வெனக் கொண்டே வாழ்ந்தார்
ஆண்டவனாகிப் பொலிந்து நின்றார்

இறப்போம் என்றே துடிப்பவர் எல்லாம்
இறந்தே இறந்தே வாழுகின்றார்
இறப்பை உணர்ந்து பொறுப்பாய் உள்ளோர்
என்றும் என்றும் வாழுகின்றார்
மறப்போம் என்ற நினைப்பே இல்லார்
மனதால் மனதால் வீழுகின்றார்
மறத்தல் மறந்து துறந்தே வாழ்வோர்
மனிதர்களாகி வாழுகின்றார்

கறத்தல் எதையும் எங்கும் என்போர்
கவலைகளாலே மாளுகின்றார்
கறத்தல் இரத்தல் சுருட்டல் இல்லார்
காவலர் ஆகி ஆளுகின்றார்
பொறுத்தல் இல்லாச் சிறு மதியாளர்
புண்பட நொந்தே வாடுகின்றார்
பொறுத்தல் குணமே பொறுப்பின் குணமாய்ப்
பொலிந்தவர் சிறந்தே ஒங்குகின்றார்

Saturday, July 16, 2011

ஆக்கி வீரர் தன்ராஜ் பிள்ளை பிறந்த நாள்

மட்டைக்குள் பந்து அது சுழலும் அது
மயக்கத்தில் சுழல்வது போல் தெரியும்
கட்டுக்குள் பந்து அது நிற்கும் அவர்
கால்களுக்கு இடையில் உருண்டோடும்
பட்டெனவே முன் களத்தில் பாய்வார் அந்தப்
பந்ததுவும் வலைக்குள்ளே பாயும்
கட்டழகுக் கருப்பர் தன்ராஜ் பிள்ளை அவர்
காணுகின்றார் பிறந்த நாளை இன்று

Friday, July 15, 2011

காமாராஜர் பிறந்த நன்னாள்

ஏழைகளைக் காப்பதற்காய் பிறந்த நல்லோர்
எல்லோர்க்கும் கல்வி தந்த இனிய நல்லோர்
வாழையடி வாழையென காந்தி அண்ணல்
வழி நடந்து தமிழருக்குப் பெருமை சேர்த்தோர்
கோழைத்தனம் இல்லாமல் தாய் நாட்டிற்காய்
கொடுஞ்சிறையில் ஆறாண்டு இருந்த வல்லோர்
பேழையாம் கல்வியினை அள்ளித் தந்த
பெருஞ்செல்வர் காமராஜர் பிறந்த நன்னாள்

Thursday, July 14, 2011

மும்பையில் குண்டு

மனிதர்களுக்கு அன்பினையே அருளிச் செய்த
மதங்களுக்குள் நன்மைகளே உண்டு உண்மை
தனி மனிதர் சிலர் இதனைப் புரியாராகி
தவறுகளைச் செய்கின்றார் தனை மறந்து
மனிதர்களைக் கொல்லுகின்றார் குண்டு வைத்து
மனநலத்தில் குறை கொண்ட மனிதராகி
தனி மனிதர் சில பேரின் மனத்துட் பேயால்
தடுமாறி நிற்கின்றதோ மதங்கள் எல்லாம்

Monday, July 11, 2011

பிறந்தீர் என்று

வள்ளுவனார் பிறந்து விட்ட தமிழர் நாட்டில்
வசைகளோடு வாழ்கின்றார் வெட்கமின்றி
உள்ளுகின்றார் நல்லவர்கள் இவற்றை யெல்லாம்
உள்ளத்துள் குருதியுடன் புலம்புகின்றாரே
எள்ளி நகையாடுகின்றார் தவற்றால் வாழ்வார்
எவரையுமே ஏய்த்ததிலே பெருமை கொண்டு
வள்ளுவனை நினைக்கின்றோம் அய்யா நீர் ஏன்
வந்து எங்கள் தமிழகத்தில் பிறந்தீர் என்று

Friday, July 8, 2011

தாதா கங்குலி வாழ்க

தனக்காக ஆடாமல் நாட்டிற்காக
தயங்காமல் ஆடி நின்ற நல்ல வீரன்
பிணக்கேதும் இல்லாமல் இளையவரை
பேர் சொல்லி அணிக்குள்ளே சேர்த்த வீரன்
கணக்காக வெளி நாட்டில் வெற்றிகளை
கண்ணியமாய்ப் பெற்றளித்த உயர்ந்த வீரன்
கங்குலி பிறந்த நாள் இன்று அந்த
கனிவான தாதாவை வாழ்த்துகின்றேன்

Friday, June 24, 2011

நம்மோடும் தமிழரோடும்

பிறப்பாலே கவியரசர் அதனாலே தான் அவர்
பேசி நின்ற வார்த்தை யெல்லாம் கவிதையாச்சு
சிறப்பாகத் தமிழன்னை சிலரை மட்டும்
செருக்கோடு பெற்றுள்ளாள் மனம் விரும்பி
பொறுப்போடு இவர் தந்த கவிதைகளோ
பொதிகை மலை முச்சூடும் மணம் பரப்பும்
இருப்பார் நம் கவியரசர் கண்ணதாசன்
என்றென்றும் ந்ம்மோடும் தமிழரோடும்

Wednesday, June 22, 2011

வர மாட்டிரா

எல்லோரும் மனிதர்கள் தான் இந்தியர் தான்
யாரெனினும் ஊழல் செய்தால் மிருகம் தானே
வல்லார் பிரதமராம் மக்களிடம்
வாக்குக்கள் பெற்றுச் சென்றார் கடவுளராம்
நல்லார் நினைத்தாலும் இவர்களையே
நாட்டு மக்கள் கேள்வி கேட்க விட மாட்டாராம்
அல்லாவே ஏசுவே சிவனே எங்கள்
அவல நிலை கண்டீரா வர மாட்டீரா

Thursday, June 16, 2011

திக்கனைத்தும் சடைவீசி


திக்கனைத்தும் சடைவீசி நூலின் இரண்டாம் பதிப்பிற்கு செந்தமிழ் வாரிதி அண்ணன் செல்வகணபதி அவர்கள் அருளிச் செய்த அணிந்துரை

திக்கனைத்தும் சடைவீசி தொடர்ச்சி

Sunday, June 12, 2011

அன்பு மகள் குடும்பத்தோடு


எனது அன்பு மகள் வித்யாவோடும் முத்துக்குமாரோடும்

குவைத் தமிழ்ச்சங்கம்


6-06-2011 காலை விமானத்திற்குப் புறப்பட்டுக் கொண்டிருக்கும் நேரம் முத்துக்குமார் இல்லத்த்ற்கு நேரில் வந்து எங்களை வாழ்த்திய குவைத் தமிழ்ச் சங்கத் தலைவர் அன்பர் ராஜா அவர்களோடு

நிகழ்வு மேடை


பொங்கு தமிழ் மன்றத் தலைவர் அன்பு முத்துக்குமார் அவர்களோடும் அய்யா ஆய்வுப் பேரறிவாளர் இரா.மதிவாணன் அய்யா அவர்களோடும்

பொங்கு தமிழ் மன்ற மேடை


குவைத் பொங்கு தமிழ் மன்ற நிகழ்வில் உரை நிகழ்த்துகின்றேன் அருகில் ஆய்வுப் பேரறிவாளர் அய்யா இரா.மதிவாணன் அவர்கள்

குவைத் பொங்கு தமிழ் மன்ற அன்பர்கள்


பொங்கு தமிழ் மன்றத் தலைவர் முத்துக்குமார் அவர்கள் செயல்ர் தமிழ்நாடன் அவர்கள் பொருளாளர் செந்தில் அவர்கள் திருக்குறள் வகுப்பு நடத்தும் சேது மாதவன் அவர்கள் பாபு என்ற அப்துல் ரெஹ்மான் அவர்கள் பிரபாகரன் அவர்கள் முருகன் அவர்கள் ராஜெந்திரன் அவர்கள் போற்றுதலுக்குரிய தேவநேயப் பாவாணர் அய்யாவின் சீடர் சிந்துச் சமவெளி ஆய்வுப் பெரியவர் பேராசிரியர் மதிவாணன் அய்யா அவர்கள்

மகளும் மருமகனும்


குவைத்தில் வாழும் எனது அண்ணன் மகள் சிவசங்கரியும் என் மீது உயிரையே வைத்திருக்கும் அன்பு மருமகன் முருகன் அவர்களும்

அன்பினால் என்னை ஆள்பவர்கள்


குவைத்தில் எனக்குக் கிடைத்த என் அன்பு மகள் வித்யாவும் அவளது துணைவர் அன்பும் மரியாதையும் நிறைந்த முத்துக்குமாரும் உலகம் பாராட்டப் போகின்ற மிகச் சிறந்த ஒவியர் எனது பேத்தி ஆதிரையும்

எனது பேரன் சின்னக்கவுண்டர் மகேஸ்வரன்

தலைக்கு மேல் வளர்ந்த பேரன் கெளதம்

அவினாசிப் பிள்ளைகள்

அன்பு செய்ய என்றே இறைவன் எனக்களித்த எனது மக்கள் ஆதவன் பஞ்சாலை கு.பூபதி திருமதி தமிழ்ச்செல்வி திரு கீர்த்திவாசன் திருமதி பானு

Saturday, June 11, 2011

விருதுகள்

தேடிப்போய் காத்திருந்து விருதுகளைத்
திறம் படவே வாங்குகின்றார் வெட்கமின்றி
கோடிகளில் புரளுகின்ற அமைச்சர்களோ
கொடுப்பதற்காய் சுகப் பெண்கள் வேண்டுகின்றார்
வாடி இந்த வாழ்க்கையில் வதை படவே
வந்துதித்த பெண்கள் மிகச் சீரழிந்தார்
ஆடி ஆடி விருதுகளை வாங்குகின்ற
ஆடவர்கள் ஊடகத்தில் ஆடுகின்றார்

Friday, May 27, 2011

நேரு நினைவு நாள்

உலகெங்கும் பாரதத்தை உயர்த்திட வாழ்ந்து வென்றான்
கலகங்கள் இல்லா நாடாய்க் காத்திட ஆசை கொண்டான்
அலகினில் கோதுமைக் கதிரின் அழகிய புறாவாய் ஆனான்
பலப் பல நாடு போற்ற பண்டிதன் அமைதி காத்தான்
உளமெலாம் நல்லதொன்றே உதித்திட உலகை வென்றான்
உயர் குணம் கொண்ட வேந்தன் உத்தமர் காந்தி சீடன்
அளவில்லாப் பெருமை கொண்ட அன்பராம் நேரு மாமா
அகிலத்துக் குழந்தைக் கெல்லாம் அன்பினைத் தந்த சீமான்

Wednesday, May 25, 2011

குவைத் நிகழ்ச்சி ஜூன் மூன்றாம் தேதி

Thursday, May 12, 2011

அருளிச் செய்ய வேண்டும்

ஒரு வேட்டி ஒரு துண்டு கொண்டவராய்
ஊரெங்கும் ந்டந்து செல்லும் வல்லவராய்
மருவில்லா மனத்தவராய் சுய நலத்தால்
மாறாத மனம் கொண்ட நல்லவராய்
கருவிருக்கும் குழந்தை கூட வணங்குமாப் போல்
கண்ணியத்தின் பேரூருவாய் வாழும் மாந்தர்
திரு நாட்டை ஆளுகின்ற காலமொன்றைத்
தெய்வமே நீ அருளிச் செய்ய வேண்டும்

Wednesday, May 11, 2011

கள்ளமில்லா வெள்ளை உள்ளப் பிரபு அவரைக் கண்டேன் கண்டதனால் மனம் நிறைந்தேன்


தூத்துக்குடி விமான நிலையத்தில் பார்த்தவுடன் கள்ளமேயின்றி நெல்லைக்கண்ணன் அண்ணன் நான் என் குடும்பம் அனைவரும் உங்கள் ரசிகர்கள். உங்கள் நிகழ்ச்சின்னா எல்லாரும் உட்கார்ந்து பார்ப்போம் என்ற பிரபு அவர்களின் எளிமை.மனம் நெகிழ்ந்து போனேன்.சென்னை விமான நிலையத்தில் புகைப்படம் எடுத்துக் கொண்டோம்

மனோரமா ஆச்சியுடன் மகிழ்ச்சியுடன்

சரித்திரம் ஆனதோர் தனித்திறம் கொண்டதோர் சாதனைத் தாயுடன் நான் துத்துக்குடி விமான நிலையத்தில்

Sunday, May 8, 2011

தாய்க்கு ஒரு தினமாம்

தாய்க்காக ஒரு தினமாம் இந்தக் கூத்தில்
தமிழர்களும் சேர்ந்துள்ளார் என்ன செய்ய
சேய்க்காக முந்நூறு நாள் சுமந்து தான்
சிரமங்கள் பட்டாலும் அது பொறுத்து
வாய்ப்பாக பெற்றெடுத்து வளர்த்து நல்ல
வாழ்க்கைக்கு வழி செய்த தாயவட்கு
ஏய்ப்பாரைப் போல ஒரு நாளைத் தரும்
இக் கேடு மேல் நாடு தந்த கேடு

Saturday, April 30, 2011

வியட்நாம் விடுதலை பெற்ற நன்னாள்

ஆடைகளோ இரண்டே தான் வேறு இல்லை
அடித்ததுவோ அமெரிக்கத் தடித் தனத்தை
மேடை போட்டுப் பேசவில்லை தனது நாட்டின்
மேன்மைகளை மக்களுக்கு உணர்த்தி நின்றான்
காடுகளில் மரங்களிலே வாழ்ந்திருந்தான்
கயமைகளின் கூட்டத்தை வென்று நின்றான்
ஆடியது அமெரிக்கா ஹோசி மின்னால்
ஆமாம் வியட்னாம் இன்று வென்ற நன்னாள்

Friday, April 29, 2011

ராஜா ரவிவர்மா பிறந்த நாள்

ஒவியத்தால் உள்ளங்கள் தன்னை வென்றோன்
உலகெங்கும் மயங்கி விடச் செய்த நல்லோன்
காவியத்துக் காட்சிகளைக் கடவுளரை
கண்ணியமாய் வரைந்தளித்த கனியின் மேலோன்
தாவி அவன் சித்திரங்கள் மனதிற்குள்ளே
தனியாகப் பதிவுபெற்று மகிழ வைக்கும்
பாவி ராஜா ரவி வர்மா என்னும் பாவி
படைப்பதற்காய்ப் படைப்பவனும் படைத்த நன்னாள்

பாரதிதாசன் பிறந்த நாள்

தன் பெண்டு தன் பிள்ளை தன் வீடு தன் குடும்பம் என்றிருப்போன் கடுகு போல் சின்ன மனம் கொண்டவன் என்று பாடிய பாரதிதாசனார் பிறந்த நாள்.

Monday, April 25, 2011

பாபா உம்மை

தாயாக நிற்கின்றார் பாபா எங்கும்
தனியாக இல்லை பல கோடியாக
வாயார அவர் புகழைப் பரப்புகின்றார்
வாழுகின்றார் உலகமெங்கும் பக்தியோடு
சேயாக அவர் மீண்டும் வருவேன் என்றே
செய்தி சொல்லிச் சென்றுள்ளார் கவலை வேண்டாம்
போய்த் தொண்டு செய்து நிற்பீர் பாபா உம்மை
புகழுக்கு உரியவராய் ஆக்கி நிற்பார்

பாபாவை என்றும் என்றும்

பாபா வின் சமாதி நிலை உலகமெங்கும்
பரபரப்பைத் துயரத்தைத் தந்துளது
ஆனாலும் அவர் பெருமை சேவை எங்கும்
ஆண்டவனின் பெயராலே நடக்கிறது
போனார் என் றுரைப்பதிலே உண்மையில்லை
பொய் உடம்பு தன்னை அவர் நீத்தார் ஆமாம்
காணாதார் உள்ள மெலாம் கோயிலாக்கிக்
கண்டிடலாம் பாபாவை என்றும் என்றும்

Sunday, March 20, 2011

குறளும் தேர்தலும்

வாள் போல் பகைவரை அஞ்சற்க அஞ்சுக
கேள் போல் பகைவர் தொடர்பு

வெளிப்படையாகத் தெரிகின்ற எதிரியைக் கண்டு அஞ்ச
வேண்டியதில்லை.

ஆனால் கூடவே இருந்து உறவாகக் காட்டிக் கொண்டு
மனதெல்லாம் வஞ்ச உணர்வோடு நம்மை ஒழிக்கத் திட்டமிடும்
அந்தப் பகைவர்களே ஆபத்தானவர்கள்.

சசிகலா அம்மையாரின் செயல்களுக்கும் இந்தக் குறளுக்கும் சம்பந்தமிருப்பதாக நீங்கள் நினைத்தால் அதற்கு நாங்கள் பொறுப்
பல்ல.

Thursday, March 17, 2011

அம்மையாரின் அரசியல்

வினை வலியும் தன் வலியும் மாற்றான் வலியும்
துணை வ்லியும் தூக்கிச் செயல்


செயலின் வலிமையையும் தனது வலிமையையும் தனது
எதிர் நிற்பான் வலிமையையும் தனக்குத் துணையாக இருப்பாரின்
வலிமையையும் நன்கு ஆய்ந்து ஒரு செயலைச் செய்ய வேண்டும்

உருவு கண்டு எள்ளாமை வேண்டும் உருள் பெருந்தேர்க்கு
அச்சாணி அன்னார் உடைத்து

பெரிய தேர்தான். அது ஒடத் துணை செய்யும் அச்சாணி தேரின் அளவைப் பார்க்கையில் மிக மிகச் சிறியதுதான். அதைக் குறைத்து மதிப்பிடுவது சரியான செயலா.

பொது உடைமை இயக்கங்கள் தே மு தி க ஆகியோரிடம் அம்மையார் நடந்து கொண்டுள்ள விதமும்

நண்பர் வை.கோ.அவர்களை அவர் நடத்திய விதமும் உங்க்ளுக்கு நினைவு வந்தால் நாம் பொறுப்பல்ல.

Friday, March 11, 2011

நாம் பொறுப்பல்ல திமுக காங்கிரஸ் கூட்டணி

வள்ளுவரின் சொல்லழகு வியப்பையே அளிக்கும்.

ஆமாம் மானம் குறித்துப் பேசுகின்றார். மயிரை இழந்தால் கவரி மான் உயிரை விட்டு விடும் என்கின்றார்.

அது சரி மனிதர்கள்.

வள்ளுவர் சொல்லுகின்றார் மனிதர்களும் உயிரை விடுவார்கள்தான்.

ஆனால்

அவர்களுக்கு மானம் வர வேண்டுமே என்கின்றார்

தி.மு.க. காங்கிரஸ் கூட்டணிக்கும் இந்தக் குறளுக்கும் சம்பந்தம் இருப்பதாக யாராவது கருதினால் நாம் பொறுப்பல்ல.

மயிர் நீப்பின் வாழாக் க்வரி மா அன்னார்
உயிர் நீப்பர் மானம் வரின்

வரின் என்கின்ற சொல்தான் உயிர்

Wednesday, March 9, 2011

ஓசியிலே எல்லாமே கொடுப்போம் அய்யா

மூணு நாளு மூணு நாளு கூத்தை யெல்லாம் - ஆமா
கூத்தை யெல்லாம் ஆமா கூத்தை யெல்லாம் - அய்யா
மொத்த மாகப் பார்த்தவர்க்கு நன்றி அய்யா - ஆமா
நன்றி அய்யா ரொம்ப நன்றி அய்யா
வேணுங்கதைக் வேணுங்கதைக் கொடுத் திட்டாங்க - ஆமா
கொடுத்திட்டாங்க அய்யா கொடுத்திட்டாங்க
வேண்டு மட்டும் வேண்டு மட்டும் எடுத்திட்டாங்க ஆமா
எடுத்திட்டாங்க அய்யா எடுத்திட்டாங்க அவங்க
வீட்டுக் கெல்லாம் சிபிஐ போகாதய்யா ஆமா
போகாதய்யா அய்யா போகாதய்யா நெசம்மா போகாதய்யா
ஒட்டை யெல்லாம் கொண்டு வந்து போடுங்கய்யா அய்யா
போடுங்கய்யா எங்களுக்குப் போடுங்கய்யா நாங்க
ஊழலைத் தான் சிறப்பாக வளர்ப்போம் அய்யா ஆமா
வளர்ப்போம் அய்யா நல்லா வளர்ப்போம் அய்யா - உங்களுக்கு
ஒசியிலே எல்லாமே கொடுப்போம் அய்யா நிறையக்
கொடுப்போம் அய்யா ஆமா கொடுப்போம் அய்யா

ஏய் டண்டணக்கு டண்டணுக்கு டண்டணுக்கு போடு
டண்டணுக்கு போடு டண்டனுக்கு ஆமா டண்டணுக்கு

Monday, March 7, 2011

தமிழ்நாடு இனி பொழச்சு வாழும்

தொண்ணித்தஞ்சு வச்சுக்கிட்டு ஆண்ட போது
தோண்வில்லை அய்யாவுக்குத் துன்பம் எல்லாம்
எண்ணிப் பாத்துக் கணக்குப் போட்டு எடமும் கேட்டா
எரிச்சலோடு புளிச்சல் வருது அய்யோ அய்யோ
க்ண்ணியமேயில்லை என்று கத்றுகின்றார் அந்தக்
காங்கிரசார் வேண்டாமென்று புலம்புகின்றார்
தன் கணக்கில் அமைச்சரகளாய் ஆறு பேரை
தான் வாங்கியிருந்த தெல்லாம் நியாயம் தானோ

புண்ணியமாய்ப் போச்சு அய்யா ஆண்டவன் தான்
புத்தியினைத் தந்து (உ)ள்ளார் காங்கிர சிறகு
அண்ணமாருக்கு இப்போ தான் வெளங்கிருக்கு இவர்
ஆண்டதிலே கண்ட சுகம் புரிஞ்சிருக்கு
மன்னவராய் இருப்பதற்கு மற்றவரின்
மடத்தனத்தை கையாண்ட சிறுமை யெல்லாம்
நல்ல வேளை ஆண்டவனும் காப்பாத்திட்டான்
நாடு தமிழ் நாடு இனி பொழச்சு வாழும்

Saturday, March 5, 2011

டண்டணக்கா டண்டணக்கா டாக்கா

வந்திடுத்து வந்திடுத்து தேர்தல் அய்யா
வாக்களிக்க வாக்களிக்க் வாங்க
எந்தக் கட்சி நல்ல கட்சி என்று
எக்குத் தப்புக் கேள்வி யெல்லாம் வேண்டாம்
நொந்த கட்சி நோஞ்ச கட்சி உண்டு
நோக வச்சுக் கொன்ன கட்சி உண்டு
சொந்தமென நாட்டையே தான் எண்ணும் அந்த
சொத்துக் கட்சி வென்றிடாமப் பாரும் ஆமா

டண்டணக்கா டண்டணக்கா டக்கா ஆகா
டண்டணக்கா டண்டணக்கா டக்கா

Wednesday, March 2, 2011

அன்பு செய்வீர்

வழிபாடு செய்கின்றீர் கூட்டமாக
வகை வகையாய் ஊர் தோறும் வணங்குகின்றீர்
கனிவாக அனைவரிடம் நடக்கும் பண்பைக்
கைக் கொண்டு வாழ்ந்தீரோ நினைந்து பாரும்
துணிவாகத் தீமைகளை எதிர்த்து நிற்கும்
தொண்டுள்ளம் கொண்டீரோ சொல்வீரா நீர்
அணி அணியாய் கோயில்களைச் சுற்றி வரல்
ஆண்டவனுக் கிசைந்ததல்ல அன்பு செய்வீர்

Monday, February 28, 2011

நாணம் கொள்வாள்

எத்தனையோ கொடுமைகளைச் செய்து வாழ்வார்
எவர் சொத்தும் தன் சொத்தாய் ஆக்கிக் கொள்வார்
சத்தியமாய் வெட்கம் என்ற சொல்லை இவர்
சாக்கடையாம் வாழ்க்கையிலே கொண்டதில்லை
முத்தமிழைக் கூட இவர் பெற்ற தாக
முட்டாள்கள் பலர் இங்கு முழங்கிடுவார்
எத் திசையும் புகழ் கொண்ட தமிழாம் தாயோ
இவர் பிறந்த காரணத்தால் நாணம் கொள்வாள்

Tuesday, February 22, 2011

நந்தா கல்வி நிலையங்கள்

ஈரோடு நந்தா கல்வி நிலையங்கள் விழா 24 பிப்ரவரி

உட்கார்ந்திருக்கின்றார் அரசவையில்

தமிழிலே பொறியியலைப் படிக்கின்றானாம்
தர மாட்டோம் வங்கியிலே கடன் என்கின்றார்
அமிழ்தினிய தமிழர் தம் நாட்டில் வாழும்
அதிகாரக் கூட்டத்தார் என்ன செய்ய
தமிழர்கள் தான் அவரும் ஆனால் சொல்லுகின்றார்
தமிழ் நாட்டில் உயிரோடும் வாழுகின்றார்
உமிழுகின்ற பொய்யாலே உயிர் வாழ்கின்றார்
உட்கார்ந்திருக் கின்றார் அரசவையில்

Monday, February 21, 2011

அருணா சாய்ராம்

விஷம க்காரக் கண்ணன் பாடப் பாட
விரும்பி நிற்கும் அவையோரும் ஆடிநிற்பர்
வசமான தமிழாலே வழங்கும் இசை
வானுலகம் வென்று மேலும் புகழைச் சேர்க்கும்
திசையெல்லாம் இசை பரப்பிவென்று நிற்பார்
தீந் தமிழால் மென் மேலும் பாடி இவர்
அசை யாத மனத்தை யுமே அசைய வைக்கும்
அன்னை அருணா சாய்ராம் வாழ்க வாழ்க

Sunday, February 20, 2011

பரமஹம்சர் பிறந்த நாள்

மனையாளைத் தேவியென வணங்கி நின்று
மதங்களையேச் சரியாக உணர்ந்து வென்று
அனைவருக்கும் நல் வழிகள் காட்டி நின்று
ஆண்டவனை உணருதற்குக் கதைகள் சொல்லி
புனைகின்ற வேடமல்ல மனம் தான் நம்மைப்
புதிதாக்கும் இறைவனையே உணரச் செய்யும் என
தனை நமக்காய்த் தந்த பரம உறம்சரவர்
தான் வந்து தாய் மண்ணில் பிறந்த நன்நாள்

Wednesday, February 16, 2011

நபி பெருமான்

தொழுது நிற்பீர் இறைவன் அவன் ஒருவனையே
தொல்லுலகை வாழ்க்கையினைத் தந்தவனை
அழுது நிற்கும் ஏழையர்க்கு உதவி நிற்பீர்
அல்லாஉற் அவர் ஆசி முழுதும் உண்டு
பழுதற்ற வாழ்க்கையினைக் கொண்டு வாழும்
படைத்தவரை ஐந்து நேரம் பணிந்து நில்லும்
விழுதாகி மனித குலம் தழைப்பதற்காய்
வீரர் வந்தார் நபி பெருமான் இன்று போற்ற

Monday, February 14, 2011

நெஞ்சு பொறுக்குதில்லையே

தாமஸ்ஸின் மீது குற்றப் பத்திரிக்கை இருப்பது தெரியாது என்று பிரதமரும் உள்துறை அமைச்சரும் சொல்லியுள்ளனர்.

வெளியுறவுத் துறை அமைச்சர் வேற்று நாட்டுத் தலைவர் உரையை ஐ.நா. சபையில் படிக்கின்றார்.

தலித் என்று ராஜாவைச் சொன்ன முதலமைச்சர் தலித்தை மட்டும் சிறைக்கு அனுப்பி விட்டு தன் குடும்பத்தினரைக் காப்பாற்றிக் கொள்கின்றார்.

நெஞ்சு பொறுக்குதில்லையே என்ற பாரதியின் வரிகள்
நெஞ்சைச் சுடுகின்றது

காதலர் தினம்

நாளெல்லாம் காதலிக்க வாய்ப்பைத் தந்து
நலம் காண ஆண் பெண் இரு பாலர் தந்து
வாழ்வதற்கே வாழ்க்கை என்ற தெளிவும் தந்து
வகை செய்த இறைவனுக்கு நன்றி சொல்வோம்
கோள்பார்த்து நாள் பார்த்துத் திருமணத்தில்
கூடியோரும் காதலித்தே வாழுகின்றார்
நாள் ஒன்றே காதலுக்கு என்று சொல்லும்
நாகரீகம் அய்யய்யோ கேலிக் கூத்து

Saturday, February 5, 2011

நினைவுப் பரிசும் அறிஞர் பெருமக்களும்

நெல்லைகண்ணன் நற்பணி மன்றத்து தோழர்கள் நினைவுப் பரிசு வழங்குகின்றனர்

அவினாசி கு.சிவராஜ் அவர்கள்

கவிஞர் கிருஷி அவர்கள்

கவிஞர் முத்தமிழ் அவர்கள்

அவினாசி தொழிலதிபர் கீர்த்திவாசன் அவர்கள்

மார்ஜின் ப்ரீ மார்க்கெட் ராஜசேகரன் தமிழ்க்கடல் அய்யா அவர்களோடு

திருமதி மீனாகுமாரி கனகராஜ் அவர்கள்

மார்ஜின் ப்ரீ மார்க்கெட் உரிமையாளர் ராஜசேகரன் அவர்கள்

தேவகோட்டை ரவி குருக்கள்

நல்லையா துரைராஜ் அவர்கள் தமிழ்க்கடல் அய்யாவோடு

ஒய்வு பெற்ற தொலைபேசித் துறை மேலாளர் மைக்கேல் சற்குணர்

திருமிகு நல்லையா துரைராஜ் அவர்கள்

தூத்துக்குடி புலவர் சங்கரலிங்கம்

வண்ணார்பேட்டை வாசகர் வட்டத் தலைவர் சுந்தரம்

தமிழ்நாடு நெல்லை கண்ணன் நற்பணி மன்றத்தின் பொதுச் செயலர் வழக்கறிஞர் மதார் மொய்தின்

தமிழ்நாடு நெல்லைகண்ணன் நற்பணி மன்றத்தின் தலைவர் சதீஷ் ரெங்கநாதன் நாஞ்சில் நாடனுக்கு பொன்னாடை போர்த்துகின்றார்

தொகுப்புரை திருமதி ரேணுகா வேலுச்சாமி

ஆதி பராசக்தி கல்லூரி முன்னாள் முதல்வர் திருமதி மீனாகுமாரி திருமதி வண்ணதாசன் திருமதி கலாப்ரியா

பெரியவர் தி..க.சி.அவர்களின் தலைமை உரை

அவையினர்

அவையினர்