Wednesday, June 30, 2010

எழில் சுத்தானந்தன் என்றும் உள்ளார்

நெற்றியிலே திருநீறு உள்ளம் போல
நெஞ்சார அன்பு செய்யல் உண்மையாக
பற்றாளர் தமிழ்க் கடவுள் முருகன் மீது
பண்பாளர் பழகுதற்கு நட்புக் கொள்ள
கண் போன்ற கல்வியினைத் தருவதிலே
கலைமகளின் தலைமகனாய் வாழ்ந்து வென்றார்
என் போன்றோர் இதயத்தில் என்றும் உள்ளார்
எழில் சுத்தானந்தன் என்றும் மறையவில்லை

Tuesday, June 29, 2010

பாவேந்தர் நினைந்தாரா

யாருக்கும் வெட்கமில்லை என்று அன்றே
இழிந்தார்க்கு ஒரு சொல்லைத் தந்தார் தாசன்
ஊருக்கே வெட்கமின்றி ஒழியும் என்று
ஒரு நாளும் சொல்லவில்லை பாவின் வேந்தர்
பேருக்கே அவரை யெல்லாம் சொல்லுகின்றார்
பெருமை செய்யவில்லை அவர்க் கின்று இங்கே
யார் கேட்கப் போகின்றார் வாய் திறந்து
எல்லோரும் பிழைக்கின்றார் அஞ்சி அஞ்சி

எதிர்த்தா கொலைதான்

அம்மாவை எதிர்த்தாலும் அடிப்பாங்க
அய்யாவை எதிர்த்தாலும் அடிப்பாங்க
சும்மாக் கெடஙக தமிழர் களே
சொரணை மானம் நமக் கெதுக்கு
கும்மாங் குத்து வாங்கித் துடிக்காமே
குடும்பம் காக்கப் பாருங்க
எம்மாம் பெரிய ஆளு அவங்க ளெல்லாம்
எதிர்த்தாக் கொலைதான் பொழச் சுக்குங்க

Sunday, June 27, 2010

பாட வேண்டும்

செம்மொழிக்காய்க் கவியரங்கம் ஆங்கிலத்தில்
சிறப்பாகப் பாடுகின்றார் பெண்ணொருத்தி
தம்மொழியில் செய்திகளைச் சொல்ல வொண்ணா
தனியாரை ஏன் பாடச் சொன்னார் என்றால்
அம்மையவர் நன்றாகப் புகழுவார் காண்
அய்யாவை அய்யாவை அய்யாவைத் தான்
செம்மொழிக்காய் மாநாடு என்றால் தானே
செந்தமிழை உணர்ந்தார்கள் பாட வேண்டும்

Saturday, June 26, 2010

கொடுமைகளை

எழுத்தாலே தமிழுக்குச் சேவை செய்த
எத்தனையோ நல்லறிஞர் நாட்டில் உண்டு
செழித்த அந்தத் தமிழறிஞர் தன்னையெல்லாம்
சிறப்பிக்க விரும்பாமல் அடிவருடிப்
பிழைப்பாரைப் பேணுகின்றார் அவரும் தன்னைப்
பேரறிஞர் என்று எண்ணி ஆடுகின்றார்
பொறுக்கின்றாள் தமிழ் அன்னை என்ன செய்ய
பொதிகை மலைக் குளிராகக் கொடுமைகளை

என்ன செய்வாள் தமிழாம் தாயார்

கொடுத்த ஒரு ஊதியத்தைக் குறைத்துக் கொண்டு
கொங்கு தமிழ் நாட்டினது தூரன் அய்யா
அடுக்கடுக்காய் தமிழுக்காய் களஞ்சியங்கள்
ஆக்கியது பத்தாகும் அருஞ் செயலாய்
நினைப்பதற்கு யாரும் இல்லை என்ன செய்ய
நெஞ்சழிந்து பேடிகளாய் ஆன மாந்தர்
கொடுப்பவரைப் புகழுதற்கேப் பிறப்பெடுத்த
கோழைகளை என்ன செய்வாள் தமிழாம் தாயார்

Monday, June 21, 2010

படைப்புக்கள் கோவையில் கிடைக்குமிடம்

ரீடர்ஸ் பார்க்
285. என்.உறெச்.சாலை
கோயம்புத்தூர்
641 001
தொலைபேசி எண் 0422 2399934
கைபேசி எண் 99446 9994

வடிவுடைக் காந்திமதியே ரூபாய் 75 00
(மரபுக் கவிதை)
காதல் செய்யாதவர்கள்
கல்லெறியுங்கள் ரூபாய் 125 00
(புதுக்கவிதை)
குறுக்குத்துறை ரகசியங்கள் ரூபாய் 100 00
(நடைச் சித்திரம்)

Sunday, June 20, 2010

நினைந்து போற்ற

மரபாலே மயக்கி நின்ற மாக் கவிஞன்
மனிதர் வாழ்வைச் சொல்வதிலே வென்ற மேதை
திரை உலகா அதிலேயும் வெல்வதற்கு
தேடி இன்று பார்த்தாலும் யாரும் இல்லை
வரவானான் தமிழுக்கு அன்னை அவள்
வரமானாள் அவனுக்கு வென்றான் வென்றான்
தரமானான் கண்ணாதாசப் பெருங் கவிஞன்
தான் பிறந்த நாளின்று நினைந்து போற்ற

ஆனதென்ன

மரணம் தான் உறுதி என்று தெரிந்த போதும்
மனம் போன போக்கில் எல்லாம் ஆடுகின்றார்
சரணம் என உனை அடைய எண்ணம் இன்றிச்
சதிராட்டம் ஆடுகின்றார் சாடுகின்றார்
வரமாகத் தந்த இந்த வாழ்க்கை தன்னை
வாழ்வாங்கு வாழாமல் ஒழித்தழிவார்
பரம் பொருளே இதுவேதான் மீண்டும் மீண்டும்
படைத்த உந்தன் விளையாட்டாய் ஆனதென்ன

அருள்க அய்யா

கொல்லத்தான் போகின்றாய் என்ற போதும்
குளிர் பார்வை தனில் என்னை ஆட்படுத்தி
நல்லவனாய் வாழ வைத்தல் உந்தன் கடன்
நாயகனை உனைப் போற்றி நிற்கின்றேன் நான்
வெல்வதற்குத் தமிழ் தந்த தாயுணர்வே
வேண்டு மட்டும் உனைப் பாடி நிற்பதற்கு
சொல் அனைத்தும் தர வேண்டும் எந்தனுள்ளச்
சோதி மணிப் பேரருளே அருள்க அய்யா

Saturday, June 19, 2010

அன்புடையீர் எனது படைப்புக்கள் கிடைக்குமிடம்.

சென்னை
நியூ புக்லேண்ட்ஸ் 52 சி வடக்கு உஸ்மான் சாலை தி நகர்
தொலைபேசி 28156006

ராகுல் பிறந்த நாள் வாழ்த்து

ஆசைகளை அறுத்தவனாய் வாழுகின்றான்
அடக்கமதைக் கொண்டவனாய்ச் சிறந்து நின்றான்
பாசமதை நாட்டின் மேல் வைத்தவனாய்
பண்பு நலன் குறிக்கோளாய் உயருகின்றான்
வீசுகின்ற தென்றலெனப் பேசுகின்றான்
வெற்றி வழி உண்மையென்று போற்றுகின்றான்
தேசமிதைக் காப்பதற்காய் இறைவன் ஈந்த
தேசு மிக்க ராகுலை வாழ்த்துகின்றோம்

Tuesday, June 15, 2010

கவிதா பதிப்பகம் சொக்கலிங்கம் அவர்களிடம் இசைஞானி தனது திருவெம்பாவை நூலை எனக்கு அனுப்பச் சொல்லுகின்றார்

இசைஞானியின் வெண்பாக்கள்

இசை வடிவாய் வாழுகின்ற இளையராஜா
இன் தமிழில் வெண்பாக்க ளியற்றுகின்ற
அசை அழகு அத்தனையும் கண்டு கொண்டேன்
அட அடடா அட அடடா அன்பு கொண்டேன்
இசையான தமிழுக்கு இவரின் பாக்கள்
எத்திசையும் புகழ் சேர்க்கும் பெருமை சேர்க்கும்
விசையான இசையோடு உலகம் வென்றார்
வெண்பாவில் வென்று உள்ளார் போற்றுகின்றேன்

கவிஞர் வாலி அவரகள் ஏற்புரை

இயக்குனர் நடிகர் பார்த்திபன்

Monday, June 14, 2010

இசைஞானியின் மகிழ்ச்சி

வாலி அவர்களின் வாழ்த்து

சுவைத்து மகிழுகின்றனர்

அனைவரும் மகிழ்ச்சியில்

அல்லயன்ஸ் சீனுவாசன் செல்வகணபதி அண்ணன் வாலி அவர்கள் இசைஞானி அவர்கள் மகிழ்ச்சியில்

பண்பாட்டின் சிகரம் இசைஞானி வாலி இருவரும் சுவைத்து மகிழ்கின்றனர்

உரை நிகழ்த்துகின்றேன்

காவடியும் வேலும்

மகிழ்ச்சியில் அய்யா வாலி அவர்கள்

பரிசு வழங்கல்

தம்பி ஜெயந்தா மகன் பழனி பாரதி இசை ஞானி ஆகியோர் பரிசை வழங்குகின்றோம்

என் அன்பு மகன் பழனி பாரதி எங்களோடு

இசைஞானி அவர்களை வேண்டிக் கொண்டேன் பரிசை அளிக்க குழந்தையைப் போல வாலி மகிழுகின்றார்

திருசெந்தூரில் செய்த காவடியும் வேலும் நான் அளித்த நினைவுப் பரிசு

இசைஞானி உரை நிகழ்த்துகின்றார்

கவிஞர் பிறை சூடன் பா.ஜ.க.இல.கணேசன்

நெல்லை ஜெயந்தா பழனி பாரதி மேக்னெட் ராஜாராம்

பாலச்சந்தர் உரையைக கேட்டுக் கொண்டிருக்கின்றோம்

வாலியின் விளக்கங்கள்

வாலி அவர்களின் விளக்கங்கள்

இளையராஜாவின் வெண்பா குறித்து பேசிக் கொண்டிருக்கின்றேன்

Sunday, June 13, 2010

இசை அறிவரோடு

இசைக் கடவுளோடு

நாங்கள் மூவர்

வாலி அய்யா இளையராஜா அய்யா அவரகள் நான்

பேராசிரியர் அண்ணன் செல்வகணபதி அவர்களோடு நாங்கள்

அவையினர்

மகிழ்ச்சியில் நால்வரும்

மீண்டும் நாங்களே

வாலி இளையராஜா நான்

வாலி அவர்களுடனும் இளையராஜா அவர்களுடனும்

இசையே வடிவான இளையராஜா ஏவீஎம் சரவணன் அய்யா

Saturday, June 12, 2010

ஏ வீ எம் சரவணன் அவரகள் உரை

வாலி அவரகள் செல்வகணபதி அவரகள் இளையராஜா அவரகள் பாலச்சந்தர் அவரகள் சரவணன் அவரகள்

விழாவில் கலந்து கொண்டவர்கள்

சிவத் தொண்டர் இளையராஜா அவர்களோடு

பழனியாண்டவர் திருக்கோவில் திருநீறு மரியாதை

பழனியாண்டவர் திருக்கோயில் மரியாதை

பழனியாண்டவர் திருக்கோவில் மரியாதை

பி.பி.சீனுவாஸ் அவர்களிடம் ஆசி பெறுகின்றார் வாலி

நீதி அரசர் விடைபெறுகின்றார்

அவையினர்

அவையினர் திரு ஜவஹர் பழனியப்பன் ரவி தமிழ்வாணன்

அவையினர்

Friday, June 11, 2010

அவையினர்

ஏ வீ எம் சரவணன் அய்யா அவர்களோடு