ஈரோடு புத்தகத் திருவிழாவிற்குச் சென்றிருந்தேன்.தோழர் ஸ்டாலின் குண்சேகரனின் கடின உழைப்பு.
இரண்டு மணி நேரம் அய்ம்பது நிமிடம் உரையாற்றினேன்.பன்னிரண்டாயிரம் பேர் வந்திருந்தனர்.
இறுதியில்பதினைந்து நிமிடம் கர வொலி எழுப்பிக் கொண்டேயிருந்தனர்.அண்மைக் காலத்தில்
இரண்டு வருடங்களுக்குள் என்னை நெகிழ வைத்த விழா.எல்லாப் பெருமையும் உழைப்பை மதிக்கும்
தோழர் ஸ்டாலினுக்கே.7-08-2008
8-08-2008 சென்னைக் கம்பன் கழகம் சிலம்பொலியார். அண்ணன் சத்திய சீலன்.அண்ணன் தெ.ஞான
சுந்தரம்,இலக்கியச் சிந்தனை அய்யா ப.இலக்குமணன் பெரியவர் இராம.வீரப்பன் நண்பர் ஜெகத்
ரட்சகன்.அருமையான ரசிகர்கள்.
10-08-2008 திருப்பத்தூர்க் கம்பன் கழகம்/ மிகச் சிறந்த சுவைஞர்கள்.
இன்று 11-08-2008 மதியம் 12 மணிக்குத் தான் வந்தேன்.நாளை எழுதுவேன்.
நன்றி நெல்லைக் கண்ணன்
Monday, August 11, 2008
கடிதம்
Wednesday, June 4, 2008
அன்புடையீர்,
வாழ்க தமிழுடன்.நம்மாழ்வார் பாசுரத்திற்கு இரண்டு கவிதைகள்.ஆமாம்.
முதலில் ஒன்றை தட்டச்சு செய்து கொண்டிருக்கும் போதே மின் தடை
ஏற்பட்டு விட்டது.
மின்சாரம் வந்தவுடன் வேறொன்றை தட்டச்சு செய்தேன்.மீண்டும் கணிப்
பொறியைப் பார்க்கையிலே பாதியாக ஒரு கவிதை இருந்தது.அதையும்
முடித்தேன்.அதனாலே இரண்டாயிற்று.நன்றி.
தங்கள்
நெல்லைக்கண்ணன்
Tuesday, June 3, 2008
விளக்கம்
அன்புடையீர்
வணக்கம். விஜய் தொலைக்காட்சி தமிழ்ப் பேச்சு எங்கள் மூச்சிற்கான படப்
படிப்பிற்காக சென்னை சென்றிருந்ததனால் 29ம் தேதியில் இருந்து ஒன்றும்
எழுதவில்லை.இன்றிலிருந்து எழுதுவேன். வாழ்க தமிழுடன்.நன்றி.
தங்கள்
நெல்லைக்கண்ணன்
3-6-08