Showing posts with label பக்தி. Show all posts
Showing posts with label பக்தி. Show all posts

Tuesday, March 20, 2012

மனிதனென வாழ விடு

இல்லாதார்க் குதவுகின்றேன் என்ற எண்ணம்
எனக்கு வரின் நான் என்ன மனிதனாவேன்
பொல்லாத அவ்வெண்ணம் என் மனதில்
புகுந்து விடின் அவமானம் கொண்டழுவேன்
கல்லாதான் போல அங்கு என்னை நானே
கடிந்து கொள்வேன் அய்யகோ அழுது தீர்ப்பேன்
வல்லாளா என் சிவனே என்னை இங்கே
வாழ வைத்தாய் மனிதனென வாழ விடு

Sunday, March 18, 2012

என்றும் வைப்பாய்

கேட்பதன் முன் உதவுகின்ற வகையில் என்னை
கேள் எனவே ஆக்கி வைத்தாய் அனைவருக்கும்
பார்ப்பதற்கு முன் அவரை உணர்ந்து கொள்ளும்
பக்குவத்தை அளித்தெனையே உயர வைத்தாய்
வார்க்கையிலே எனைச் சரியாய் வார்த்து விட்டாய்
வணங்கி நின்றேன் என் இறையே மேலும் மேலும்
பூக்கின்ற மனமதையே அளித்துக் காப்பாய்
புண்ணியன் உன் திருவடியில் என்றும் வைப்பாய்

என்றும் வைப்பாய்

கேட்பதன் முன் உதவுகின்ற வகையில் என்னை
கேள் எனவே ஆக்கி வைத்தாய் அனைவருக்கும்
பார்ப்பதற்கு முன் அவரை உணர்ந்து கொள்ளும்
பக்குவத்தை அளித்தெனையே உயர வைத்தாய்
வார்க்கையிலே எனைச் சரியாய் வார்த்து விட்டாய்
வணங்கி நின்றேன் என் இறையே மேலும் மேலும்
பூக்கின்ற மனமதையே அளித்துக் காப்பாய்
புண்ணியன் உன் திருவடியில் என்றும் வைப்பாய்

Thursday, March 8, 2012

இருக்கின்றானே

ஆயிரம் பல்லாயிரமாய் நூற்கள் கற்றேன்
அதன் வழியாய் வாழ்வதற்கும் கற்றுக் கொண்டேன்
பாவி இந்த மனிதர்களைப் படித்துப் பார்த்தும்
பல பேரைப் படிப்பதற்கு முடிவதில்லை
கோயிலிலே இருக்கின்றான் இறைவன் என்ற
கூற்றை நான் நம்புவதே யில்லை அய்யா
தாவி இங்கு அன்பு செய்யும் மனிதர் தம்மின்
தலைவாசல் தோறும் இறை இருக்கின்றானே

Tuesday, March 6, 2012

ஆளாக்காதீர்

பணமதுவும் குலைத்து விடும் மிகச் சிறந்த
பண்புகளை நேர்மையினை நாணயத்தை
குணமதுவோ நல்லதெல்லாம் கொண்டிருக்கும்
கூட்டாக்கும் நல்லவரைப் பெரியவரை
இனம் பிரித்துத் தமிழ் இதனை சொல்லி வைத்தும்
எப்படியோ விதி வழியால் மறந்து போனேன்
மனம் துடிக்க இறைவனிடம் வேண்டுகின்றேன்
மறு முறை இத் தவறுக்கு ஆளாக்காதீர்

Sunday, March 4, 2012

அருளிடுக தலைவா

அன்பு செய்வார் மட்டும் தான் உயிரொ டுள்ளார்
அதுவன்றி வாழ்பவரோ உடலாய் உள்ளார்
என்றெனக்கு வள்ளுவனார் சொல்லித் தந்த
எழில் வழியை உணர்ந்தவனாய் வாழுகின்றேன்
அன்பதனால் உலகதனில் பல பேர் என்னை
அப்பா என்றழைக்கின்றார் பாசம் கொட்டி
தெம்பாக நான் வாழ வழி செய்கின்றார்
தேம்புகின்றேன் அவர் செய்யும் அன்பின் முன்னால்

அவசரமாய் அன்பு காட்டி அதே வேகத்தில்
அவசரமாய் விலகுகின்றார் புரியவில்லை
தவம் போல அன்பு செய்யும் என்னைக் கூட
தவறாக உணருகின்றார் என்ன செய்வேன்
குவலயத்தில் இது என்ன துன்பம் என்னை
கொள்க அன்பு என்று சொன்ன இறைவா
அவருளத்தில் அன்பு தன்னை உணரும் ந்ல்
அழகு தன்னை அருளிடுக தலைவா

Thursday, June 16, 2011

திக்கனைத்தும் சடைவீசி தொடர்ச்சி

Monday, April 25, 2011

பாபா உம்மை

தாயாக நிற்கின்றார் பாபா எங்கும்
தனியாக இல்லை பல கோடியாக
வாயார அவர் புகழைப் பரப்புகின்றார்
வாழுகின்றார் உலகமெங்கும் பக்தியோடு
சேயாக அவர் மீண்டும் வருவேன் என்றே
செய்தி சொல்லிச் சென்றுள்ளார் கவலை வேண்டாம்
போய்த் தொண்டு செய்து நிற்பீர் பாபா உம்மை
புகழுக்கு உரியவராய் ஆக்கி நிற்பார்

பாபாவை என்றும் என்றும்

பாபா வின் சமாதி நிலை உலகமெங்கும்
பரபரப்பைத் துயரத்தைத் தந்துளது
ஆனாலும் அவர் பெருமை சேவை எங்கும்
ஆண்டவனின் பெயராலே நடக்கிறது
போனார் என் றுரைப்பதிலே உண்மையில்லை
பொய் உடம்பு தன்னை அவர் நீத்தார் ஆமாம்
காணாதார் உள்ள மெலாம் கோயிலாக்கிக்
கண்டிடலாம் பாபாவை என்றும் என்றும்

Wednesday, November 17, 2010

உணர்த்தி நின்றார் (பக்ரித்)

காலம் கடந் தளித்த குழந்தை தன்னைக்
கடவுளரே கேட்கின்றார் அறுத் தளிக்க
சீலம் நிறைந்து நிற்கும் இபுராஉறிமும்
செய்தி சொன்னார் மகனிடத்தில் சிரித்தவாறே
வாழ்வதனைத் தந்தவரே கேட்கும் வாய்ப்பை
வழங்கியதில் மகன் மகிழ்ந்தார் இறைவனது
ஆழ் அன்பை அவர் உணர்ந்தார் மனம் நிறைந்தார்
ஆண்டவரோ நல் வழியை உணர்த்தி நின்றார்

Sunday, June 20, 2010

ஆனதென்ன

மரணம் தான் உறுதி என்று தெரிந்த போதும்
மனம் போன போக்கில் எல்லாம் ஆடுகின்றார்
சரணம் என உனை அடைய எண்ணம் இன்றிச்
சதிராட்டம் ஆடுகின்றார் சாடுகின்றார்
வரமாகத் தந்த இந்த வாழ்க்கை தன்னை
வாழ்வாங்கு வாழாமல் ஒழித்தழிவார்
பரம் பொருளே இதுவேதான் மீண்டும் மீண்டும்
படைத்த உந்தன் விளையாட்டாய் ஆனதென்ன

அருள்க அய்யா

கொல்லத்தான் போகின்றாய் என்ற போதும்
குளிர் பார்வை தனில் என்னை ஆட்படுத்தி
நல்லவனாய் வாழ வைத்தல் உந்தன் கடன்
நாயகனை உனைப் போற்றி நிற்கின்றேன் நான்
வெல்வதற்குத் தமிழ் தந்த தாயுணர்வே
வேண்டு மட்டும் உனைப் பாடி நிற்பதற்கு
சொல் அனைத்தும் தர வேண்டும் எந்தனுள்ளச்
சோதி மணிப் பேரருளே அருள்க அய்யா

Monday, March 15, 2010

தாய் தந்தை வணங்கிடுவீர்

தாய் தந்தை வணக்கத்தை மறந்தாராகி
தடித் தடியாய் சாமியார்கள் வணங்கி நிற்பார்
போய் அவர்க்குப் பணிவிடைகள் பாத பூஜை
பொற் காசு பணக் குவியல் எல்லாம் சேர்ப்பார்
தோய்ந்த சுக விளையாட்டில் சாமியாரும்
தோதாகித் தோகையினைச் சேர்தல் கண்டால்
ஆய் என்று அலறுகின்றார் அந்தோ பாவம்
அன்னை தந்தை தெய்வத்தை வணங்கி நிற்பீர்

Tuesday, March 9, 2010

இறைவனையே வணங்கி வெல்லும்

மருத்துவர்கள் குறிக்கின்ற நேரம் தன்னில்
மகவு வந்து பிறப்பதில்லை- மரணம் என்னும்
பெருத்த அந்த முடிவதுவும் மனிதர்கள் தாம்
பேரறிவால் அறிவதற்கு முடிவதில்லை
கருத்ததனை உணர்ந்தீரோ என்து மக்காள்
கடவுள் அவன் கையினிலே இரண்டும் உண்டு
பொருத்தமற்ற உம் அறிவைத் தூக்கிப் போட்டு
புகழ்க்கெல்லாம் இறைவனையே வணங்கி வெல்லும்

ஏன் அளித்தான்

கடவுள் இல்லை என்று சொல்லி மேடை தோறும்
கனல் தெறிக்கப் பேசுகின்றார் கர்ஜிக்கின்றார்
புடவையுடன் இவர் மனைவி கோயிலுக்குப்
போகின்றார் அம்பாளின் அருளைப் பெற
விடலை போட்டு விநாயகரைத் தரிசிக்கின்றார்
வேல் முருகன் கால்களையே பற்றுகின்றார்
நடிகர் இவர் தனைக் கூட மனிதர் போல
நாயகனாம் இறைவன் அவன் ஏன் அளித்தான்

சண்டையிட்டு அழிய மாட்டார்

அவரின் மதம் அவர்க் கதனைப் பழிக்க வேண்டாம்
அன்பு செய்வீர் என்று சொன்னார் நபி பெருமான்
புவனமெல்லாம் புரிந்துணர்ந்த இறைவன் தூதர்
பொறுமைகளின் சிகரம் அவர் நேர்மைச் செல்வர்
நவம் இதனை நம்முடைய நம்மாழ்வாரும்
நலம் பயக்கும் பாசுரத்தில் சொல்லிச் சென்றார்
தவம் உணர்ந்தோர் உணர்வார்கள் இதனை எல்லாம்
தவறாகச் சண்டையிட்டு அழிய மாட்டார்

இன்ஷா அல்லா

நாளைக்குச் சந்திப்போம் என்று சொன்னால்
நாயகனாம் அல்லாவின் அருளிருந்தால்
போய் வாரும் என்று சொல்வார் இன்ஷா அல்லா
பொறுப்புடனே சொல்லி நிற்பார் இறைவன் அன்றே
நீர் வாழும் வாழ்க்கையினை முடித்து விட்டால்
நினைத்த படி யாரை எங்கு காண்பீர் நீரும்
ஊர் தோறும் மேடை தோறும் சொல்லுகின்றேன்
உயர் விதனை இறை அருளை இன்ஷா அல்லா

இசுலாத்தை போற்றுகின்றேன்

இசுலாத்தைப் போற்றுகின்றேன் எதற்காய் என்றால்
எல்லோரும் இறைவனையே நம்புகின்றார்
பசப்பான வார்த்தை யில்லை பம்மாத் தில்லை
படைத்தவனே அனைத்தும் என்று பணிந்து நின்றார்
நிசந்தான் நான் சொல்லுவது இசுலாமியர்
நினைப்ப தென்றும் இறைவன் என்னும் பேரருளே
வசங் கெட்ட ஒன்றிரண்டு பேர்கள் மட்டும் இங்கே
வகை கெட்டு மனிதரையே புகழுகின்றார்

அல்லாவைப் பணிதல் ஒன்றே

எல்லாமே இறைவனென்று உணர்ந்தார் என்றும்
எக்குத் தப்பாய் ஆடி ஆடி அழிய மாட்டார்
அல்லாவே பெரியனென்று உணர்ந்தார் எங்கும்
அழிகின்ற மனிதரினைப் புகழ மாட்டார்
வல்லானை அல்லாவைப் பணிதல் ஒன்றே
வாழ்க்கைக்குத் துணையாகும் பெருமை சேர்க்கும்
நல்லார்கள் உணர்ந்துள்ளார் மற்றவரோ
நலமற்ற மனிதரினைப் புகழுகின்றார்

Thursday, March 4, 2010

இறை உணர்ந்தால்

போதை வழி அனைவரையும் மயக்கும் வேலை
போற்றுகின்றார் கல்கி அவர் ஆசிரமத்தில
பாதை தெரியாப் பலரும் அவர் வழியில்
பரிதாபமாக மாட்டி ஆடுகின்றார்
வேதனைகள் இதுவெல்லாம் மனிதர் தம்மின்
வேண்டாத ஆசைகளால் விளைவதன்றோ
தான் தனியாய்ச் செம்பொருளாய் இருக்கும் இறை
தனை உணர்ந்தால் கேவலங்கள் வருமோ அய்யா