Tuesday, July 12, 2016


குறுக்குத் துறை ரகசியங்கள் இரண்டாம் பாகம் எழுதத் தொடங்குகின்றேன்.


ஏய் பூரணலிங்கம்  என்னல காலேல/

ஒண்ணுமில்ல அண்ணாச்சி நம்ம சொரணத்தக்காவ கோயில்ல பாத்தேன் அண்ணாச்சி. அவ ரொம்ப வருத்தப் பட்டா அவ வீட்டுக் காரர் இறந்ததுக்கு ந்ம்ம கிட்டுப்பிள்ள வரல்லேன்னு.

நெனச்சேம்ல ஏதாவது குண்டுணி பேசலைன்னா ஒனக்கு தூக்கம் வராதுன்னு.

ஒடனே என்னயத்தான் குத்தம் சொல்லுவியோன்னு தெரியும். ஒடம்பொறந்தவ வீட்டுக் காரம் செத்துப் போயிட்டான்னா இவரு போகல்லேன்னா சரிங்களோ அண்ணாச்சி

ஏய் சவத்து மூதி   கிட்டுப் பிள்ளையப் பத்தி ஒனக்குத் தெரியும்லாலே. அவம் அப்படி ஆளால, அவம் குடும்பத்தில எல்லொரும் அவனைப் பயன் படுத்திக் கிடுவாங்க. பொறவு ஆவலாதி தான். இந்த ஊருக்கே தெரியும்ல அவனப் பத்தி. அவ சொன்னாளாம் இவரு கேக்க வந்திட்டாராம்.மூடிக்கிட்டுப் போல.

எல அவளுக்கு மூணு கொள்ளி இருக்கானுவள்ளா. ஒரு பயலாவது உருப்படியா இருக்கானுவளா சொல்லுல. பூராவும் குடிகாரப் பயலுவ கேட்டா அந்த அக்காதாம் சொல்லுவா அவர மாதிரியே வந்திட்டானுவ தம்பி. அவ புருஷன்காரனப் பத்திச் சொல்லுவா .எல கிட்டுப் பிள்ள வாரம் தோறும் ஏதாவது கோயிலுக்குப் போவாம்ல்லால  இவளும் அவன்குடும்பத்தோட தொத்திக்கிடுவா தெரியும்லால ஒனக்கு.

ஆமா அண்ணாச்சி அன்னிக்கு நவ திருப்பதிக்குப் போம்போதும்  கூடத்தாம் போனா. அங்க போயி அவ பெருமாள்ட்ட என்ன வேண்டுவான்னு தெரியுமால. அவ புருஷன் உடனேயே செத்துப் போகணும்ன்னு.அது மட்டுமில்லல இந்த மாசம் உறுதியா செத்திருவாரு. புளியங்குடி ஜோசியன் சொல்லிட்டான்ம்பா. கிட்டுப்பிள்ளை வந்து அழுவாம். இவ தலையெழுத்து இப்படி ஆயிடுச்சே அண்ணாச்சி ண்ணு.


அவதான கோயில் கோயிலா வேண்டினா. இப்பம் அவரு செத்ததுக்கு வரல்லேன்னா. அசிங்கமா இல்லையா?

எல அவ பெரிய பய பன்னெண்டாம் கிளாசில அஞ்சு தடவ பெயிலா ஆயிட்டான். ஒரு காலேஜிலேயும் சேர்க்க முடியல்ல. கிட்டுப் பிள்ளைதான் நம்ம கிறிஸ்துவக் காலேஜில சேர்த்து விட்டான்.ஒரு தடவை பெயிலான பயலுவளய அந்தக் காலேஜ்ல சேக்க மாட்டானுவ. இவனச் சேத்துக் கிட்டானுவன்னா கிட்டுப் பிள்ளைக்காகத்தானே.
ஒரேமாசத்துல அந்தப் பய அந்தக் காலேஜ்ல ஸ்டிரைக பண்ணிட்டாம். கிட்டுப் பிள்ளை போயி காலேஜ் பிரின்சிபால் முன்னால தலையத் தொங்கப் போட்டுக் கிட்டு நின்னான். அடுத்த பய இருக்காம்ல்லா. நம்ம கண்ணதாசன் ஒரு சினிமாப் பாட்டுல் எழுதியிருப்பருல்லா காமுகர் நெஞ்சில் நீதியில்லை அவர்க்கு தாயென்றும் தாரமென்றும் பேதமில்லை என்று. அவம் கூத்து பெருசுல. ஒரு சொந்தக்காரங்க வீடிலயும் அவன உள்ள விட மாட்டாங்க.
பொம்பளப்புள்ள இருக்க வீட்டில மட்டும் இல்லல. பொம்பள இருக்க வீடுகளுக்குள்ளய விட மாட்டங்க.

கிட்டுப் பிள்ளைட்ட வந்து அவனுக்கு பொண்ணு பாக்கச் சொல்லியிருக்கா. கிட்டுப் பிள்ளை பொம்பளப் புள்ளபாவத்தில் நாம அடிச்சு விழுந்திருக் கூடாதுன்னு ஒண்ணும் பாக்கல. அவளா ஒரு பொண்ணைப் பாத்து கட்டி வச்சா. யாரோ ஒரு பைத்தியக்காரன் தன் பொண்ணைக் கட்டிக் குடுத்தாம்.இந்தப் பய தனிக்குடித்தனத்தில அந்தப் புள்ள முன்னாலேய பக்கத்து வீட்டில் இருக்கற ஒரு ஊன்முற்ற பையன் பொண்டாட்டியக் கூட்டிட்டு வந்து கூத்தடிச்சிருக்காம். அந்தப் புள்ள அவ அப்பன் வீட்டுக்குப் போயிட்டு.

கிட்டுப் பிள்ளை பயலுவல்லாம் எப்படி அவம் வள்த்திருக்காம் அப்படி. பாத்த  உடன கால்ல விழுந்து கும்பிடுவானுவ பெரியப்பா ஆசீரவாதம் பண்ணுங்கன்னு.

ஆமா அண்ணாச்சி என்னயும் எங்கன பாத்தாலும் மாமாண்ணு கும்பிடுவாங்க அண்ணாச்சி.

கிட்டுப் பிள்ளை மூத்த பயலுக்குக் கல்யாணம் ஆச்சுல்லால.

ஒங்க தலைமையில தான கல்யாணம். ரெண்டு நாளா எல்லாருக்கும் அவங்க வீட்டில தான சாப்பாடு.

கிட்டுப் பிள்ளை மாதந்தோறும் திருச்செந்தூர் போயிருவாம்ல்லா. அன்னிக்கு இந்தச் சின்னப் பய வந்திருக்காம் பொம்பளப் புள்ள இருக்க வீட்டுக்குள்ள இந்தப் பயல எப்படி விட முடியும். குடிச்சிட்டு வேற வந்திருக்காம். பணம் கேட்டிருக்காம். அந்தப் பயலும் மரியாதையா அத்தான் ஒங்க மாம திருச்செந்தூருக்குப் போயிருக்கா. சாயங்காலம் வந்து  வாங்கிக்கோ ண்ணிருக்கம். இந்தக் குடிகாரப் பய நிலயா நின்னிருக்காம். பக்கத்து வீட்டுப் பலவேசம் போயி யோவ் யத்தான் பெரியப்பா ஊரில் இல்லைல்லா அவாள் வந்ததுக்கப்புறம் வாங்கண்ணிருக்காம்.  அவனைப் போயி தேவடியாமகனேண்ணிருக்காம். அந்தப் பயலா பளிச்சின்னு யாரையும் கை நீட்டிருவாம்ல்லா. கையை நீட்டிட்டான். பொறவு அவன் அண்ணன் காரன் வந்து இந்தக் குடிகாரப் பயல கூட்டிடிட்டு போயிருக்காம்.இந்தப் பய பணத்தைப் பூராம் அவம் அண்ணங்கரான் தான் ஆட்டையப் போட்டிருக்காம். அவம் இந்தப் பயல ஒடனே சென்னக்கு அனுப்பி வச்சிருக்காம்

இடையில் கிட்டுப் பிள்லை வீட்டுக்காரிக்கு ஒடமுக்குச் சரியில்லேன்னு மெட்ராசுக்குக் கூட்டிட்டுப் போயிருந்தாம்லா அப்பம் இந்தப் பய வீட்டுக்கு பக்கத்துல இருந்த ஒரு மிலிட்டரிக்காரன் பிள்ளைய பதினங்ஜ்டு வயசுப்பிள்ளைய கூட்டிட்டு கிட்டுப் பிள்லை வீட்டுக்குப் போயிட்டாம். அதையும் எப்படியோ கிட்டுப் பிள்ளை சமாளிச்சு  அந்தப் பிள்ளையை அவங்க அப்பன் காரன்கிட்ட ஒப்படைச்சிருக்காம். இநதப் பய  அதேதான் சாக்குன்னு அங்கேயே ஒரு ஆறு மாசம்  டேரா போட்டுட்டான். அங்கனயும் சும்மா இல்ல ஒரு இள்நீர் விக்கறவ்ம் பொண்டாட்டிய சினிமாவுக்கு கூட்டிட்டுப் போயிட்டாம்ன்னு அங்க எல்லாரும் ஆவலாதி. என்ன பண்ணுவாம் கிட்டுப் பிள்ளை. அவன ஊருக்குப் போய்யாண்ணு கெஞ்சிக் கூத்தாடி அனுப்பிச்சு வச்சிருக்காம். இவ என்ன சொல்லுவா தெரியுமா  எல்லார்ட்டயும் ஒரு வாய்ச் சோறு போடாம எம்புள்ளய அனுப்பிச்சிட்டாம்ன்னு. ஆறுமாசம் இந்தப் பய அங் என்ன் பீயையால தின்னாம். இவள்லாம் ஒரு மனுஷின்னு  நீரு கேக்க வந்திட்டேரோ.

0 மறுமொழிகள்: