பராசக்தி தனில் மலர்ந்தான் தமிழர்களின்
படங்களுக்காய் இறைவனவன் தந்த பூவாய்
தராதரத்தில் அவனை மிஞ்ச இன்னுமொரு
தனி நடிகன் வருவதற்கு வாய்ப்பேயில்லை
அறாத ஒரு பெரும் புகழைக் கொண்ட வேந்தன்
அண்ணன் அவன் சிவாஜி எனும் நடிப்பின் வேதம்
பராபரமே அவன் நடிப்பின் சிறப்பைக் காண
பக்கத்தில் அவன் அழைத்துக் கொண்ட தின்று
Wednesday, July 21, 2010
சிவாஜி நடிப்பின் வேதம்
Sunday, January 3, 2010
தமிழன் எக்ஸ்பிரஸ் சிவா ஒருமுறை சிவாஜிக்கு விருது வழங்காதது குறித்துத்
தொலைபேசியில் கேட்ட போது சொன்ன கவிதை
பல்கலைக் கழகமாய்
வந்து நின்றான்
நடிப்புக் கல்லூரிகள்
பின்னரே
தோன்றின
அவனுக்கு
விருது
வழங்காததால்
குடியரசுத் தலைவர்
மாளிகை
ஒரு
சிங்க நடையைத்
தரிசிக்கும்
வாய்ப்பை
இழந்தது
தேசத்திற்கே
விருதாய்
வந்தவனுக்கு
தேசம்
எப்படி
விருதளிக்க
முடியும்
அவன்
போட்ட
பிச்சையிலே தான்
பலர்
இன்று
கோடீஸ்வரர்
Monday, September 22, 2008
வாழ்கின்றாரே
நடிப்பிற்காய் அவன் ஒருவன் தன்னை மட்டும்
நற்றமிழ்த்தாய் ஈன்றெடுத்தாள் இன்று வரை
படிக்கின்றார் அவ்னைத்தான் அவனின் வழி
படிப்பாரே கொஞ்சம் கொஞ்சம் நடிக்கின்றார் காண்
துடிக்கின்ற கன்னங்கள் விழியிரண்டு
துள்ளி வரும் நடையழகும் மென்னடையும்
வடித்திட்ட வளர் தமிழான் சிவாஜி என்னும்
வள்ளல் அவன் வழங்கியதில் வாழ்கின்றாரே
Sunday, September 21, 2008
மாக்கலைஞன் சிவாஜி
ராஜாமணியென்னும் அன்னை பெற்ற ராஜாமணி அவனே வாய் வழியாய்ப்
பேசா மொழியெல்லாம் விழிகள் தன்னால் பேசிப் புரிய வைக்கும் பேரருளே
ரோஜா மலர் போல மென்மையான நோயில்லா மனம் கொண்ட நற் கலைஞன்
கூசாமல் அவன் தன்னை நகலெடுக்கக் கோடிப் பேர் முயன்றிங்கு தோற்றே போனார்
கூஜாவைத் தூக்கியேனும் அவனின் மேன்மை கொண்டு விட வேண்டும் என்று பலர் முயன்றார்
ராஜாவாய் அவன் மட்டும் இன்று வரை நற்றமிழர் உள்ளத்தில் வாழ்கின்றானே
ஆ ஜா என்று இந்தியிலே நடிப்பாரெல்லாம் அவன் நடித்த வேடம் போட அச்சம் கொண்டார்
தேசு புகழ் சிவாஜியெனும் மாக்கலைஞன் தெய்வம் தந்த மாக்கொடையே உணர்ந்தோம் வென்றோம்
Monday, July 21, 2008
வாழுகின்றான் இன்றும்
மறைந்து விட்டான் மா கலைஞன் என்று இந்த
மனிதர்களும் புலம்புகின்றார் புரியாராகி
நிறைந்து விட்டான் நற்றமிழர் நெஞ்சிலெல்லாம்
நீங்காத புகழ் கொண்ட மேலவனாய்
சிறந்து நிற்பான் என்றென்றும் தமிழர் நெஞ்சில்
சிவனாகிச் சிவாஜியாய் எங்கள் அண்ணன
கலந்து விட்டான் அறிஞர்களின நெஞ்சில் எல்லாம்
கலையுலகத் தலைமகனாய் வாழுகின்றான்
Wednesday, July 16, 2008
நடிகர் திலகம் 3
விரி விழிகள் அவற்றுக்குள் காட்டி நிற்பான்
வியன் உலகச் சிறப்பெல்லாம் ,,, வாய் திறந்து
சிரியெனவே கேட்டாலோ நூறு வகைச்
சிரிப்பதனைத் தந்து நின்ற தவன் ஒருவன்
மொழியெனிலோ அவன் மொழிந்தால் தமிழே ஆகும்
முதல்வன் என்றால் கலையுலகம் அவனைச் சொல்லும்
வழி வழியாய் வந்த ஆய கலைகள் எல்லாம்
வடிவமைத்தான் எங்கள் அண்ணன் சிவாஜியன்றோ
Thursday, July 10, 2008
நடிகர் திலகம 2
கண் நடிக்கும் என்றே நாம் பார்த்து நிற்போம்
கை நடிப்பைப் பார்ப்பதற்கு விட்டுப் போகும்
பண்ணிசைக்கு வாயசைக்க பார்த்திருந்தால்
பாடியது அவரேதான் என்று தோன்றும்
விண்ணவரின் வேடத்தில் அவரும் வந்தால்
விண்ணவர்க்கோ வியப்பினால் இமை துடிக்கும்
கண்ணவரே எங்களது திரைத் துறையின்
கடவுளே சிவாஜி கணேசனன்றோ
நடிகர் திலகம்
ஒவ்வொரு அசைவும் நமது உயிரினைக் கொள்ளை கொள்ளும்
அவ்விரு விழிகள் பேசும் ஆயிரம் மொழிகள் தன்னை
செவ்விய தமிழோ அவனால் சிறப்புகள் கோடி கொள்ளும்
சிறு நடை நடந்தால் கூட சிங்கமே ஒதுங்கிக் கொள்ளும்
எவ்விதம் இவனால் மட்டும் இத்தனை முடியும் என்று
அவ்விய நெஞ்சத்தாரின் அழுக்காறு அவரைக் கொல்லும்
பவ்வியம் காட்டும் போதும் பல விதம் காட்டி நிற்கும்
பல்கலைக் கழகம் எங்கள் பார் புகழ் சிவாஜி அண்ணன்