Thursday, January 26, 2012

வந்தேமாதரம்

இயக்கங்கள் அனைத்திலும் தீயவர்கள்
இருக்கின்றார் மிக்ப் பெரும் பொறுப்பிலே காண்
தயக்கமே யில்லாமல் தலைவர்களும்
தழுவியே அவர்களோ டுலவுகின்றார்
மயக்கம் தெளிந்தாலும் நமது மக்கள்
மாற்றின்றி இவரையே மாற்றுகின்றார்
வழக்கம் போல் குடி மக்கள் தலைவர் கூண்டில்
வந்தே மாதரம் கூறுகின்றார்

Sunday, January 15, 2012

அருள வேண்டும்

ஆங்கிலத்தில் பொங்கலுக்கு வாழ்த்துச் சொல்லும்
அறியாத தமிழர்களை என்ன சொல்வேன்
பூங்குவளைத் தமிழ் இருக்க வெட்கமின்றி
புரியாத மொழியினிலே வாழ்த்துகின்றார்
தாங்கள் தான் மிகப் பெரிய அறிஞரென்று
தங்களுக்குத் தாங்களே நினைக்கின்றார் காண்
ஏங்கி நின்றேன் தமிழே என் தாயே நீ தான்
இக் கொடுமைதனைத் தடுத்து அருள வேண்டும்

Friday, January 6, 2012

புரியவில்லை

புரியவில்லை

சிதம்பரத்திற்கெதிராக இத்தனை வேகம் காட்டும் சுப்ரமணியசாமி
மாறன் சகோத்ரர்களைப் பற்றி பேசாத மர்மம் என்ன.

புதுச்சேரியில் புயல் பாதித்த பகுதிகளைப் பார்வையிட்ட தமிழர் சிதம்பரம் கடலூர் பகுதியைப் பார்வையிடாத மர்மம் என்ன.

சட்டசபைத் தேர்தலுக்கு முன்னர் சசிகலா கும்பல் என்ற திமுக
இன்று முரசொலியில் பிற்படுத்தப் பட்டவர் சசிகலா என்று கண்ணீர் வடிப்ப
தென்ன.

சோவே என்னைப் பாராட்டியிருக்கின்றார் என்று பலமுறை பெருமைப் பட்டுக் கொண்டுள்ள கருணாநிதி இன்று சோ போன்றோர் போயஸ் தோட்டத்தில் இருக்கின்றனர் என்றும் பார்ப்பன ஆதிக்கம் என்றும் பேசுவதென்ன.

பெரியவர் அன்னா உறசாரேயின் உண்ணாவிரதத்திற்குக் கூடிய கூட்டம் சிறை நிரப்பும் போராட்டம் என்றவுடன் குறைந்து போன மர்மம் என்ன.

கிரிமினல் வழக்கில் சிறையிலிருந்து ஜாமீனில் வெளி வந்த கனிமொழி அம்மையாருக்கு இத்தனை ஆர்ப்பாட்டமான் வரவேற்பைக் கண்ட பின்னரும் நீதி மன்றத்தில் சாட்சிகளை மிரட்டுகின்ற சூழலை உணர்த்தி சிபிஐ கனிமொழியின் ஜாமீனை ரத்துச் செய்ய முயற்சிக்காத மர்மம் என்ன.

ஒவ்வொரு கிராமமும் தனக்குத் தேவையானவற்றைத் தானே தயாரித்து தன்னிறைவு பெற வேண்டும் என்ற தேசத்தந்தைக்குப் புறம்பாக அந்நியர் முதலீட்டிற்கு அச்சாரம் போடும் காங்கிரஸ் தலைவர்கள் காந்தி சமாதியில் சென்று வணங்கச் செல்ல அருகதையற்றவர்கள் என்பதனை உணராத மர்மம் என்ன.

கோடிக் கணக்கில் கொள்ளையடித்திருக்கின்ற ஐஏஎஸ் அதிகாரி குடும்பத்திற்கு வருமான வரி விதித்திருக்கின்ற வருமான வரித்துறையின்
முட்டாள் தனத்தை என்ன சொல்ல.

அவர்கள் சொத்துக்களை அரசாங்கம் பறிமுதல் செய்யாத மர்மம் என்ன

எனது மருமகன் ரமேஷ் மகள் மருததுவர் ஆனந்தி அய்யா அமரநாதன் அவர்களோடும்

எனது மரியாதைக்குரிய பாண்டிச்சேரி அய்யா அமரநாதன் அவர்களோடும் எங்கள் மகள் அறுவை சிகிச்சை நிபுணர் ஆனந்தியோடும்

எனது அன்பு மகன் திருலோகசந்திரனோடும் அறிவோடு கூடிய மருமகள் பிரியாவோடும்

அன்பு மகன் திருலோக்ச்சந்திரன் குடும்பத்தாரோடு

Wednesday, January 4, 2012

எனது இந்த மாத நிகழ்வுகள்

எனது இந்த மாத நிகழ்வுகள்

ஜனவரி 7 ம் தேதி
பவானி திருமுறை மன்றம்
சங்கமேஸ்வரர் திருக்கோயில் மாலை 7 மணி
பொருள் சைவமும் பெண்மையும்

ஜனவரி 10 பெரியகுளம் அரசினர் தோட்டக் கலைக்
கல்லூரி முத்தமிழ் மன்றம்
காலை மணி 10

ஜனவரி 13 ஏ.வி.பி.அறக்கட்டளை
மெட்ரிக்குலேஷன் மேனிலைப் பள்ளி
மாலை 5 மணி பொருள் எது செல்வம்

ஜனவரி 15 பாளை சிவன் கோயில்
பொருள் பட்டினத்தார்

ஜனவரி 17 புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். பிறந்த நாள்
திருநெல்வேலி
சுழலும் சொல்லரங்கம்

ஜனவரி 18 திருநெல்வெலி தாம்பிரபரணி இலக்கிய மன்றம்
விருதுகள் வழங்கி உரை நிகழ்த்தல்

ஜனவரி 25 திருமுருகன் பூண்டி திருக்கோயில் விழா
மாலை 7 மணியள்வில்
பொருள் குந்தியின் மைந்தன்

ஜனவரி 26 நெல்லை மாவட்டம் திருமலாபுரம்
பட்டி மண்டபம்

ஜனவரி 29 கல்லல் அய்யா தண்ணீர்மலைச் செட்டியார்
அவர்கள் இல்லத் திருமண் விழா