Showing posts with label இசைப் பெரியான மைக்கேலஜாக்சன். Show all posts
Showing posts with label இசைப் பெரியான மைக்கேலஜாக்சன். Show all posts

Sunday, June 28, 2009

ஆண்டவனும் அதில் ஒருவர்

வெள்ளை நிறத்தோலுக்காய் வினை தேடிக் கொண்டானோ
வெற்றிகளும் பணமதுவும் வீழ்த்துதற்கு முனைந்தனவோ
கள்ளமில்லா துள்ளிசையில் ககனத்தை வென்றவனை
கால மகன் வென்றிடவே கணக்கெழுதி முடித்தானோ
வெள்ளையில்லை கறுப்புமில்லை அனைவரையும் வென்றவனை
விரி இசையும் நடனமதும் ஒருங்கிணைத்துக் கொண்டவனை
உள்ளமெல்லாம் கொண்டழுவார் உலகத்தில் பல கோடி
உணராமல் இருப்பாரா ஆண்டவனும் அதில் ஒருவர்