Tuesday, January 8, 2013

எள்ளுப் பெயரன் வெண்பாவும் பதில் வெண்பாவும்

இன்று காலை மின்னஞலில் எனது ஞானத்தந்தை பாரதியின் எள்ளுப் பெயரன் திரு நிரஞசன் அவர்கள் அவரது கவிதை நூலை நான் வெளியிட வேண்டும் என்று கேட்டுக் கொண்டிருந்தார். அதோடு என்னைக் குறித்து ஒரு வெண்பாவும் அனுப்பியிருந்தார்.

கலைமகள் நாவில் கரை புரண்டோட
மலையருவி  பேச்சில் வழிய-நிலை பெற்று
எண்ணியே என்றும் இமிழும் திரு நெல்லை
கண்ணன் தமிழின் கடல்

நான் பதில் அனுப்பினேன்

எள்ளுமிள காய்ப்பொடியும் எள்ளெண்ணெ யும் சேர்த்து
அள்ளூற உண்ணுவதே ஆசையாம் - தெள்ளுதமிழ்ப்
பாரதியின் எள்ளுப் பெயரா அதனால் தான்
நீர்வந்து சேர்ந்தீரோ நெஞ்சு


1 மறுமொழிகள்:

said...

அப்பா,

தாங்கள் கர்ம வீரர் காமராஜர் வாழ்க்கை வரலாற்றை வெண்பாவாக படைத்து புத்தகமாக வெளியிட்டால் மகிழ்வோம்.

அன்புடன்
தெயவீகராஜன்