Tuesday, July 9, 2013

விஜய் தொலைக்காட்சி தமிழ்ப் பேச்சு எங்கள் மூச்சு

அன்புமிக்க தமிழர்களுக்கு வாழ்க தமிழுடன். விஜய் தொலைக்காட்சி மீண்டும் தமிழ்ப் பேச்சு எங்கள் மூச்சு நிகழ்வை தொடங்கியுள்ளது. இந்த முறை தமிழுணர்வு மிக்க நல்லறிவோடு கூடிய நல்ல இளம்படை என்னோடு பணியாற்றுகின்றது. ஒவ்வொரு ஞாயிற்றுக் கிழமைகளிலும் காலை 10 மணியிலிருந்து 11 ம்ணி வரை நிகழ்ச்சி ஒலி பரப்பாகின்றது. அனைவரும் பார்க்க வேண்டுகின்றேன். அன்புடன் நெல்லைக்கண்ணன்

3 மறுமொழிகள்:

said...

மகிழ்ச்சி! விஜய் தொலைகாட்சிக்கு நன்றி!
இந்த வாரம் பார்த்தேன்.அருமை!இனி தொடர்ந்து பார்ப்பேன்.

வாஞ்சிநாதனை பற்றி பேசிய கல்யாண சுந்தரம் அற்புதமாக பேசினார்.இவரது பேச்சிலும் உடற்மொழியிலும் நாம் தமிழர் கட்சி சீமான் சாயல் உள்ளது.
வேலு தம்பி தளவாய் பற்றி பேசியவரும் நன்றாக பேசினார்.
தீரன் சின்னமலை பற்றி பேசிய பெண்ணை நீங்களும் கவிஞரும் தேற்றிய விதம் அருமை!

ஒன்றே ஒன்று மட்டும் குறைபோல் தோன்றியது. 'ஆச்சி தமிழ் பேச்சு எங்கள் மூச்சு' "Powered by " "Powered by" இதை தமிழில் கூறியிருந்தால் நல்லா இருந்திருக்கும்.

நன்றி,
முத்து

said...

உங்கள் அழைப்பிற்கு நன்றிகள் ஐயா. கருத்தோடு சொல்லாடல்கள்,தமிழோடு சுவைக்க காத்திருக்கிறோம்.மீண்டும் இந்த வாய்ப்பை அமைத்துதந்த விஜய் தொலைக்காட்சிக்கு நன்றிகள் பல.

said...

மிக்க மகிழ்ச்சி ஐயா!
நான் ரசித்து ருசித்து பார்கும்
முக்கியமான நிகழ்ச்சி இது!!!!
நிகழ்ச்சியின் இடை இடையே
பழைய நிகழ்வுகளையும்,
பழைய நிகழ்ச்சிகளையும்
எங்களோடு பகிர்ந்து கொள்வது
வரவேற்க்கத்தக்கது!!!
விஜய் தொலைக்காட்சிக்கு நன்றி!!!