Thursday, December 13, 2012

என்ன செய்வது

உயர்நீதி மன்றம் ஒரு சரியான தீர்ப்பை வழங்கி உள்ளது. பேருந்தின் படிக்கட்டில் பயணம் செய்யும் மாணவர்களை கல்லூரியில் இருந்து விலக்க வேண்டும் என்று. நமது அரசியல் தலைவர்கள் உடனே மாணவர்களின் நண்பர்களாகி  பேயர் சூடிக் கொள்ளும் முயற்சியில் ஈடுபட்டுத் தொலைப்
பார்களே என்ன செய்வது.

ஆட்டோவில் ஆறு சிறுவர்களுக்கு மேல் பள்ளிக் குழந்தைகளை ஏற்றிச் செல்லக் கூடாது என்று காவற்றறை கட்டளையிட்டால் உடனே ஆட்டோ ஒட்டுநர்கள் வயிற்றில் அடிக்காதே என்று சத்தமிடுவார்கள். ஆட்டோ ஒட்டுநர் தொழிற்சங்கங்கள் அனைத்தும் . விபத்தில் இறந்து போகின்றவர்கள் குழந்தைகள் என்று வருத்தமே இல்லாமல். தலைவர்கள் வீடுகளிலும் குழந்தைகள் உள்ளன.

சில உத்தரவுகளைப் போடுவதற்கு தேர்தல் நினைவில்லாத தலைமைகள் வேண்டும்.
பெற்றோர்களுக்கும் இதைப் பற்றிக் கவலையில்லை என்ன செய்வது

1 மறுமொழிகள்:

said...

என்ன செய்வது ஐயா ?ஆட்டோவிற்கு ஆறு பேர் என்றால் பதினைந்துபேரிடம் வாங்கும் காசை அந்த ஆறுபேரிடம் வசூலிப்பார் ஆட்டோகாரர்.ஆட்டோகளின் செயல்பாடுமுதல் அரசுப்பளிகளின் செயல்பாடுவரை ஆரம்பத்தில் இருந்தே கண்டுகொள்ளாது விட்டுவிட்டதற்க்கு இதுவும் வேண்டும் இன்னமும் வேண்டும்.நடிகையின் சேலையில் சாமி படம் உள்ளதற்கு கண்டனம், கோர்ட் என அலைவதற்கு ஆட்கள் உள்ளனர்.ஆனால் பள்ளிகளின் அவலநிலைகள் யார் கண்ணுக்கும் தெரிவதாக காணோம்.ஆட்டோகாரர்களுக்கும் குழந்தைகள் உள்ளனர் அதிகாரிகளுக்கும் குழந்தைகள் உள்ளனர்.ஆனால் யாருக்கும் அக்கறைதான் இல்லை.யாரை நோக ?