Friday, July 15, 2016

ஹலோ யாரு எல பிச்சம்மா .நல்லா இருக்கியால.ஊருல்லாம் புடிச்சிக்கிட்டா. அந்த ஊருக்கென்னா. அவரு மணிகண்டன் நாயர் எப்படி இருக்காரு. நல்ல பையம்ல்லா. சந்தோஷமா இரில. மலையாள பூமியே அழகுதானல.ஒங்க  அப்பனா ஊரு பூராவும் அண்ணாச்சி இப்படிப் பண்ணிப்புட்டாகளேன்னு ஒரேபுலம்பல்தானாம் .நேற்று ஒங்க ஹெட்மாஸ்டர் மாமா வந்திருந்தாகள்ளா அவுக சொன்னாக. அவுக கிட்டயும் போயி ஆவலாதி.                                                                                                                            

அவுக கேட்டிருக்காக. என்னவே தப்பு பண்ணிட்டாக பெரிய வீட்டு அண்ணாச்சி. அவாளுக்குத் தப்பு எப்படிய்யா தெரியும் . நீரு மனுசனா ஒரு அப்பனா நடந்துக் கிடல. அவாளும் பொறுத்துப் பொறுத்துப் பாத்தா. பொம்பளப்புள்ளயும் அவாள்ட்ட போயி நின்னிருக்கு.  அவ சொன்னத ஏத்துக் கிடுததத் தவிர வேற வழியில்லல்லாவே. ஒம்ம வீட்டுக்காரிகிட்டயும் சொல்லிருக்காக. அவதாம் அப்படியே பண்ணிருங்க அண்ணாச்சி.  இல்லேண்ண எம் புள்ள வாழ வேற் வழி கிடையாதுன்னு சொல்லி அழுதிருக்கா.

சரியாத்தாம் அவுக செஞ்சிருக்காங்கன்னு சொல்லிருக்காக. நானால வருவேம்ல்லா. எங்க அம்மேல்லா நீ. எப்பமும் வருவேம். அவாள்ட்ட ஒங்க மாமனார் மாமியார்ட்ட எல்லார்ட்டயும் சொல்லு.அந்த ஊருல தேங்காய் விசேசம்ல்லா. சொதி வச்சிரு என்னா.நான் ஒண்ணும் கடவுள் இல்ல.மனுசனா இருந்த்தாப் போதும் . ஒங்கப்பனுக்கு அறிவில்லையே

எங்க அம்மை சொல்லுவா தான் தின்னி பிள்ளை வளரா  தவிடு தின்னி கோழி வளராம்பா.

அறுபது வயசிலேயும் தான் திங்கணும் வாழணும்ன்னு  இருக்கானே.இப்படியும் பொறந்திடுதானுவளே என்னம்மா செய்ய.

வடமொழியில ஒரு  செய்தி ஜெயகாந்தன் அண்ணாச்சி பிரம்மோபதேச்ம்ங்கிற கதையில் எழுதி இருப்பாக. அதவது ஒரு தகப்பன் பதினாறு வயசுக்குள்ளே தன் பெண்ணுக்கு திருமணம் செய்து வைக்கலேன்னா அந்தப் பொண்ணு அவ ம்ணாளனை அவளே தேர்ந்துக் கிடலாம்ன்னு. மொழி என்னம்மா மொழி .மனுசனுக எல்லாரும் உணர்ந்திருக்கானுவ.ஒங அப்பன் அவங்க அப்பனை மாரியே பொறந்திட்டாம். சரி நீ ஆபீஸ்க்கு போக வேண்டாமா. பெரியப்பன் கிட்டயே பேசிக்கிட்டிருந்தேண்ணா.

ஒங்கப்பன நாம் பாத்துக்கிடுதேம். இதுக்கப்புரமும் அப்பனைக் காப்பாத்தணும்ன்னு நெனக்கீயே. தங்கம்ல்லா எங்கம்மை. நல்லா இரு. கோயில் நெறய இருக்கு கேரளாவில. வீட்டுக் காரரோட போயிட்டு வா,
பெரியப்பா இன்னும் கொஞ்சம் நா கெடக்கணும்ன்னு வேண்டிக்கிடுவீயா.


யாருல வாசல்ல.


அண்ணாச்சி நாம்தாம் பரமசிவம்.

பாம்பு கழுத்தில இருக்கா. இல்ல கழத்தி வச்சிட்டு வந்திருக்கியா.

இல்லேண்ணாச்சி. நான் எலக்ட்ரீஷியன் பரமசிவம்.

வாவே கரண்ட் பிள்ளை. என்ன சேதி. சொல்லும் வெபரம் கூடுன ஆளுல்லா நீரு. சொல்லும்.


புன்னை வனம் அண்ணன் புலப்பம்தாங்க முடியல்ல அண்ணாச்சி.மின்னடிப் படித்துறையில குளிக்க வருதவம் ட்ட பூராம் சொல்லி சொல்லி அழுதாரு. கொஇல்ல ஊஞ்சல் மண்டபத்தில ஒக்காந்துக்கிட்டு காந்திமதி அம்மேட்ட வேற புலம்புதல்.

என்ன என்னய கொல்லணும்ன்னு வேண்டுதானால.

இல்ல பெரிய ஆளு எம்புள்ளய மலையாளத்துக் காரன் கையில புடிச்சுக் குத்துட்டாவளேன்னு புலப்பம்.

எல தெரியாத மாரியே பேசுதிய நீ நல்லகண்ணுப்பிள்ளை மகம்ங்கத காம்பிக்கியோ. ஒனக்கு ஒண்ணும் தெரியாதோ. முட்டாப் பயல
எல அந்தப் புள்ளைக்கு எத்தனை மாப்பிள்ளைத் தரம் வந்துது ஒண்ணையாவது திகைய விட்டானாலே. அந்தப் பிள்ளை தாய்மாமன் அதைப் படிக்க வெச்சான். அது எம்.ஏ.படிச்சிது. நல்லாப் படிச்சிது படிச்சு முடிஞ்சவுடனே 22 வயசில வேலை கெட்ச்சிட்டு. நல்ல சம்பள்ம் வாங்குதா. பாகவும் லெட்சணமா இருகு. அதுக்கு ஒரு கல்யாணம் செய்து வைக்காம அவ ஒழைப்பில ஒக்காந்து சாப்பிடுததுக்காக ஏற்பாடு செய்தானே. இவம்ல்லாம் ஒரு தகப்பனால்.

ஒரு நா தீடிர்ன்னு வந்து நிக்கு. பதறிட்டேம். என்னல யம்மாண்ணேன். பெரியப்பா. எனக்கு வயசு 32 ஆயிட்டுப் பா. எங்க ஆபீசில ஒரு மலையாளத்துக் காரர் எனக்கு மேல அதிகாரியா இருக்கார். அவரும் தன் தங்கச்சிகளுக்கெல்லாம் கலியாணம் ஆகணும்ன்னு காத்திருந்திருக்காரு
35 வய்சாச்சி. நாயர். அவங்களை. கேரளாவில் பிள்ளைன்னு தாம் சொல்லுவாங்களாம். நான் என்ன செய்யட்டும். அதாம் இங்கன ஒடி வந்தேம்.


பண்ணிர வேண்டிரது தானே. ஒங்கப்பங்கிட்ட சொன்னா ஈசியா மலையாளத்துக் காரனுக்கு எப்படிக் குடுப்பேம் நம்ம சாதி என்ன ந்ம்ம சனக் கூட்டம் என்ன பழமையெல்லாம் பேசி இத நிறுத்தப் பாப்பாம். ஒங்க அம்மே என்ன சொல்லுதான்னுஜ கேட்டுக்கிட்டியால

அம்மா உஆரு கிட்டயும் சொல்லத நம் வரமுடியாஅது பெரிய வீட்டுப் பெரியப்பாட்ட்ப் போயிச் சொல்லு அவுக வழி காட்டுவாகன்னா. அதம் வந்தேம்.
எல அவங்க ஊருலயே வெச்சிக்குவோம்ன்னு சொல்லிரு. அவரு பேரென்ன.

மணிகண்டன் நாயர்  பெரியப்பா.

நாமவர்ட்ட பேசலாமா.

என்ன பெரியப்பா. நானே சொல்லிருக்கேன் எங்க ஊரில நியாயம் சாகாம இருக்கத எங்க பெரியப்பாணாலதாம்ன்னு.

பொறவு என்ன விடு. நாம் பேசிக்கிடுதேன்னு    சொன்னேன்.பேசினேன்.

குருவாஉர்ல கல்யாணம்.அவங்க குடும்பத்துக்காரங்க எப்படி ஆட்கள் தெரியுமால. காந்திமதி தன் மகள சரியான இடத்துக்குத்தன் அனுப்பி வச்சிருக்கா. புரியுதால. மூடிக்கிட்டுப் போயி அவங்கிட்ட  சொல்லு.


Thursday, July 14, 2016

என்னவே சுப்பையா பிள்ளை கூப்பிட்டாத்தாம் அண்ணாச்சி நெனவு வரும் என்னவே. பன்னம்பாறைக்காரி எப்படி இருக்கா.

ஆமா பன்னம்பாரைக் காரில்லாம் நீங்க குடுக்கிற செல்லத்துல குளிர் விட்டுப் பொயிருக்கா. எல்லாப்பொம்பளகளும் அப்படித்தான் ஊருக்குள்ள இருக்காளுவ

எல எங்க அம்மே போய்ச் சேர்ந்ததுக்கப்புறம்  வத்தக்குழம்புக்கு அலந்த போதெல்லாம் அவ எங்கம்மையாயில்லாடா வத்தக் குழம்பு குடுத்து விடுவா.
பொம்பளப்புள்ளகள புரிஞ்சுகிட்டாத்தான் தொல்லையில்ல.எவம் புரிஞ்சுக்கிடுதீய. அண்ணாச்சிதான் காரணம்ன்னு ஊரு கூடித் தீர்மானம் போடுங்களேண்டே.


ஏய் நெல்லையப்ப பிள்ளை  என்ன படிக்கீரு.                                                                      

அவரு எங்கே படிச்சாரு. காலேஜ்ல இருந்து ஒடி வந்திட்டாரு. அங்கனயும் ஒங்க பேரத்தான் ஒங்க கொழுந்தியா பயன் படுத்துதா. அவோ பெரிய வீட்டுப் பெரியப்பா மாரி பெரிய ஆளா வந்திருவாம். அவோளும் பத்தாங்கிளாசுக்குப் பொறவு காலேஜ் போயிட்டு ஒடி வந்த ஆளுதானங்கா.

வெள்ங்கிச்சு போ. எய்யா அப்பா கூடக் கடையப் பாத்துக்கிடுதியோ.

எங்க அண்ணாச்சி போத்தீஸ்ல விதம் விதமா பேண்டும் சட்டையும் அவங்க அம்மாக்கர்ரி எடுத்துக் குடுக்கா. அவாள் மைனரா அலையுதாரு.

அதாம்வே நானும் கூப்பிட்டு விட்டேன்.

நெல்லையப்பா அந்த சேட் பிள்ளை பின்னால அலயுதீயோ. ஒண்ணும் தப்பில்லை. அவ்வளவு அழகா இருந்தா போகத்தான் தோணும்.ஆனா அவ எம்.சி.ஏ. படிக்கான்னு தெரியுமாவே. அவனுகளுக்கு ஒண்ணுன்னா ராஜஸ்தான் அரசாங்கம் நம்ம அரசாங்கத்துகு தகவல் தரும். கொன்னுருவானுவ.நீரும் பெரிய படிப்பெல்லாம் படிச்சு அந்தப் பிள்ளைய காப்பாத்தற அளவு சம்பாதிச்சாக் கூட பெரியப்பா பேசி ஏதாவது பண்ணிருவேன். கொஞ்சம் யோசனை பண்ணிப் பாரும். ஒரு நேரம் காலையில் டிபன் எவ்வளவு செலவாகும் தெரியுமாவே .மூணு நேரம் சாப்பாடு. மருந்து மாத்திரை சினிமா டிவி   சேல துணிமணின்னுன்னு செல வு வேற.அதுக்கெல்லாம் வழி  இருக்கா .ஒங்க அம்மை வேற அவங்க அண்ணன் மக சிவகாமிதான் எனக்கு மருமகன்னு ஊரு பூராவும் சொல்லிக் கிட்டு அலையுதா? காதல் பண்ணக் கூடாதுன்னு சொல்லல.அவளும் ஒன்னய விரும்பினாத்தானடே காதல். நீ வெள்ளையும்சொள்ளையுமா பேண்டும் சர்ட்டும் போட்டா வந்திருவாளாடே. போயி ஏதாவது தொழில் பாரு. இல்ல ஊரில வயக்காடு இருக்குல்லா அதைக் கவனி. எல்லாப் பயலுவளையும் காப்பாத்துத தொழில்ங்கார் வள்ளுவர். அதை விட்டுட்டு இப்படி அலையக் கூடாது சரியாய்யா. அவனுக கோடீஸ்வர்ன்லா அய்யா.அவ முறைபையன் எத்தனை கோடி சொத்துக்கு சொந்தக்கர்ரன் தெரியுமா. அவனும் அவளைப் போலவே செகப்புரெட்டா இருப்பாம்ல்லா. ஏம் மேல் ஒமக்குத்து கோபம் தான் வரும். ஆனா இந்தச் சேட்டைய நிறுத்தலைன்னு வையும் போலீஸ்ல்லாவே வரும்..
நல்ல புள்ளைல்லா வீட்டுல போயி யொசிச்சுப் பாரும் ஒமக்குப் புரியும்.ங்க அம்மைக்யும் ஒங்க மாமனும் செந்து ஒண்ணக் கொல்லக் கூட யோசிக்க மாட்டங்க. அவ ஒம் மொறப் போண்ணு அவளே கடுமையான் பிள்லைல்லாவே,

யாரு பின்னாலேயும் அலைஞ்சா கோட்டிக் காரப் பயன்னு சொல்லிரு வானுவல்லா நம்ம ஊருல.போயிட்டு வாங்க  . நாம் பாத்துக்கிடுதம் அண்ணாச்சி. ஒங்க கொழுந்தியா போன்ல கூப்பிட்டாலும் கூப்பிடுவா. அவளுக்கும் புரியுத மாரி சொல்லுங்க அண்ணாச்சி.

சரி வே


யத்தான்.

யாரு வத்தக் குழம்புக்காரியா. எங்க அம்மியில்லா. சொல்லுளா. இனிமே இந்தப் பய எங்கேயும் வர மாட்டாம் அந்த சேட் கிட்ட உறுதியாச் சொல்லுங்க.என்கிட்ட அவம் சொல்லிட்டாம். பெரியப்பாவெல்லாரும் ஏன் அய்யா அய்யான்னு சொல்லி விழுந்து கும்பிடுதாங்கன்னு இன்னிக்குத்தம் தெரிஞ்சுகிட்டேன்ங்கான். நல்லாப் புரியற மாரி கோபமே இல்லாம் பெரியப்பா சொன்ன ப்பொறவுதான்  நான் எப்படி அசிங்கமா நடந்துக்கிட்டிருக்கேம்ன்னு புரிஞ்சுதும்மான்னு சொல்லிட்டான்.   ஒங்க மாப்பிள்ளய கடையை ஒழுங்கா நடத்தச் சொல்லுங்க.

நெனச்சேம்லா. சொல்லிட்டே.சொல்லிருதேம்ம்மா.நல்லா இரி

எல என்ன காலேல யே வந்து நிக்கே. வாச்மேனில்லையா.

இல்ல அண்ணாச்சி நம்ம வளையல் கட சேட் பெரிய வீட்டுச் சாலாஜியப் பாக்கணும்ன்னார்.வாசலிலே நிக்கார். அது என்னண்ணாச்சி சாலாஜின்னா.

எல அவங்கிட்ட எப்படிப் பழக்கம். அங்கனயும் போயி பிச்சையெடுத்திட்டியா.

இல்ல அண்ணாச்சி அவர் கட கிட்டத்தான நம்ம பிச்சையா சைக்கிள் கட வச்சிருக்காம். ஒரு நா அங்கன போயி சைக்கிள் எடுக்கப் போனேன். அவராத்தான் என்னயப் பாத்துபெரிய வீட்டுச் சாலாஜியோட இருப்பீங்கள்ளா தம்பி. உள்ள வாங்கண்ணார். ஒரு டீ குடுத்தாரு அண்னாச்சி. அந்த டீக்காக அடிக்கடி அங்கன போயிப் பழக்கம் ஆயிடுச்சி அண்ணாச்சி. அது சரி அண்ணாச்சி சாலாஜின்னா என்ன அர்த்தம்.

எல் மூதேவி அத்தான்னு அர்த்தம்டா.

வாசல்ல நிக்காரு என்ன செய்ய.

எல துண்ட மாத்திட்டு வேட்டியக் கட்டிட்டு வாரேம்.முன் ரூம்ல ஒக்காரச் சொல்லு.

சரிதாம் அண்ணாச்சி இப்படியே ஒங்களப் பாத்தா பன்றி மலைச் சாமின்னு நெனச்சு கும்பிட்டுரப் போறாரு

காலையில வாரியலடி படணும்ன்னு வந்திருக்கியால.

என்ன ரமண்லால் நல்லா இருக்கியா. தங்கச்சி புள்ளைகள்ளாம் நல்லா இருக்கா.


அதுக்கென்ன சாலாஜி எல்லாரும் நல்லாத்தாம் இருக்காங்க.

வெடியக்காலமே வந்திருக்கீரே.என்ன விசேசம்.

அண்ணிக்கே அம்பி சார்ட்ட சொன்னேனே.

அந்தப் பய ஒம்ம வீட்டு டீயைப்பத்தித்தான் சொன்னான்.இன்னிக்குத்தான் நீரு வாசலுக்கு வந்தப்புறம்தாம்தாம் வாயைத் தொறக்காம்.சொல்லும்

மச்சான் ஒங்க தங்கச்சிதான் அண்ணாச்சி கிட்ட போயிச் சொல்லிட்டு வாருங்கண்ணா.அவளும் வாரேன்னுதாம் சொன்னா. நாந்தாம் நானே
போயிச் சொல்லிட்டு வாரேண்ணு சொன்னேன்.

என்ன விசயம்   மாப்பிள

நம்ம பலசரக்குக் கட சுப்பையா இருக்காருல்லா.அவரு மகன்

 நெல்லையப்பன்.ஒங்க செல்ல மருமக மஞ்சு காலேஜ் போகும் போதெல்லாம்
பின்னாலய போயி சங்கடப் படுத்துதாம். அதாம் சொல்லிட்டுப் போகலாம்ன்னு வந்தேம்.

சரி விடும் நாம்  பாத்துக்கிடுதேம். நிம்மதியாப் போயிட்டு வாரும்.
நானே ஒங்ககிட்ட சொல்லாணும்ன்னு நெனச்சேம் பாஸ். ஒரு நேரம் போல ஒரு நேரம்  இருக்க மாட்டிகள்ளா நீங்க அதாம் சொல்லல

எல பாஸ்ண்ணு சொல்லாதேண்ணு எத்தன தரம் சொல்லியும் அறிவில்லையால.ஒன்உத் தெரிஞ்சிருந்தும் சொல்லலண்ணா நெல்லையப்ப பயகிட்டேயும் சீட்டிங் எதும் போட்டுக்கிட்டிருந்தயால,

என்ன நீங்க என்னைக்கு நம்பியிருக்கியோ

சரி நாயே போயி சுப்பையா பயலயும் அவம் மகனையும் கையோட கூட்டிட்டு வா.


============================---------------------------------------------------------------------


Wednesday, July 13, 2016

வாரும் வே பசுங்கிளியா பிள்ளை. அத்தானை இப்பம்தான் நெனவு வந்திச்சோ.

ஆரம்பிச்சிட்டேளா. அய்யா நான் கடை கண்ணியோட படாத பாடு பட்டுக்கிட்டிருக்கேன். போதாக்குறைக்கு ஒங்க தங்கச்சி படுத்துத பாட்டையும் பொறுத்துக் கிட்டு ஒருத்தன் வாழுறதே பெரிய காரியம்ண்ணு நெனைக்கவே மாட்டுக்கேளே.

வே நாங்க பைத்தியக்காரத்தனமா எங்க தங்கச்சிய கட்டிக் கொடுத்தத இப்படிச் சொல்லிக் காட்டுதீரோ அவ இருக்கப் போய்தாம் நீரு மணந்துக்கிட்டு இருக்கீரு மறந்திராதியும்.

சரிய்யா வாயத் தொறக்க விடமாட்டேளே.

யத்தான் நான் நேத்து ராத்திரியே வந்திட்டேன். இப்பம் போய் அவாளத் தொந்தரவு ப்ண்ணாதேன்னு ஒங்க மாமனார் சொன்னதுனாலதான் இப்ப வந்தேன்.  ஆமா இந்த ஆவுடையப்பம் பொண்டாட்டி யாரோடயோ ஒடிப் போயிட்டாளாமே. அத ஊர்க்காரனுவ சொல்லுதானுவ  அவோ ஒங்க பெரிய வீட்டு அத்தான் அந்தப் பிள்ளைய எவனும் கொற சொல்லாதீங்ல ண்ணு உத்தரவு போடுதாவண்ணு சொல்லுதானுவளே நெசந்தானா.

நெனச்சேம் தென்காசிக்கு தகவல் வந்து இத வெசாரிக்கத்தாம் நீரு வந்திருக்கேரு. இதில அத்தானப் பாக்க வந்ததா ஒரு நாடகம்.


எய்யா அது சின்னப் புள்ள நல்லா பாக்க அம்சமா வேற இருக்கு. அதப் போயி அவ அம்மை அந்த ஆவுடையப்பப் பயலுக்கு நாப்பது வயசான பயலுக்குக் கட்டிக் கொடுத்தா எப்படிவே சரி. சொல்லும். பளிச்சினு எல்லாப் பயலுவளையும் போல நீங்க பேசலாமா.தென்காசியில் எத்தனை பெரிய தமிழ் அறிஞர்கள்லாம் வந்து திருக்குறள் கழகத்தில் பேசுதாங்க. அதை நல்லாக் கேட்டிருந்தா பொம்பளப்புள்ளயக் கொற சொல்றத விசாரிக்க வர மாட்டீய.


அவ அம்மையப் போல மகன்னு ஊர்க்காரனுவ சொல்லுதானுவள்ளா. அதான்  கேக்கலாம் ன்னு வந்தேன்.

மக்களுக்கு ஆயிரம் பிரச்சினை எல்லாம் இருக்கு அதையெல்லாம் விட்டுப் போட்டு இதக் கேக்க வந்தேளாக்கும்

என்ன அவ அம்மே பண்ணிட்டா. அவளும் அந்தக் கிராமத்திலேயே அழகுல்லா.  ஒடம்பு வேற நல்லாச் சாப்பிட்டு சாப்பிட்டு வளந்திருந்துது.நெய்யும் தயிருமால்லா அவ அம்மே அவள வளத்தா.
அவளைக் கொண்டு சொந்தம்ண்ணு ஒரு டிரைவருக்குக்  கட்டி வச்சா.
அந்தப் பய காரையே சரியா ஒட்ட மாட்டான்னு திருநவேலி பூராம் தெரியும்.

சரி இரண்டு பொட்டபுள்ளகள்யும் பெத்தா. இவம் ஒழைக் கதில்ல.எப்பம் பாரு எவங்கிட்டயாவது கடன் வாங்கியே பொழப்ப ஒட்ட்ப் பாத்தான். அப்பந்தாம் அவ தூரத்து சொந்தக்காரன் தாசிலதாரா வந்தான். அவ வீட்டுக்குக் கிட்டய குடியும் வந்தான் . இவ அவனுக்குப் பொங்கிக் குடுத்தாவது புள்ளைகளக் காப்பாத்த்லாம்ன்னு அவனுக்கு பொங்கிக் கொடுக்க ஆரம்பிச்சா . இவ புருஷங்காரப் பய அவங்கிட்டயும் பிச்சை எடுக்க ஆரம்பிசான். அந்தப் பய இவள ரொம்ப அன்பா வச்சுக்கிட்டான். வேணும்ன்னாவே அந்தப் புள்ள பண்ணுச்சி. சூழ்நிலைவே மாப்பிள்ளை.பொசுக்குண்ணு பேசிடப்பிடாது பொம்பளப்புள்ளகள புரியுதா.

Tuesday, July 12, 2016

எல அவளுக்கு ஒரே ஒரு பொம்பளைப்பிள்ள.இவங்க மெட்ராஸ்ல இருக்கும் போத் அவளுக்கு ஒரு பெரிய காலேஜ்ல கிட்டுப்பிள்ளைதான் சீட் வாங்கிக் கொடுத்தான். நன்றி வேணும்ல நன்றி.

அந்தப் பிள்ளைக்கு ஒரு பெரிய குடும்பத்தில கிட்டுப்பிள்ளதான் மாப்பிள்ளை பார்த்துக் கொடுத்தான். பத்து வருசமா வாங்கின சம்பளம் அத்தனையும் அந்தப் பையன் பேங்கில தான் போட்டு வச்சிருந்தான்.அந்தக் கல்யாணத்தையும் கிட்டுப் பிள்ளைதான் பொறுப்பா நடத்தினான்.அந்தக் கல்யாண வீட்டுலயே கிட்டுப்பிள்ளைய அவமானப் படுத்தினா அவங்க அக்கா.அவள்ளாம் என்ன பொம்பளண்ணூ பேச் வந்தே. அவ கேட்டாளாம். இவரு கேக்காராம்.

எல அந்தக் குடிகாரப் பயல பலவேசம் அடிச்சாம்லா.அதுக்குப் பிறகு அந்தப் பய மெட்ராஸ் ஊர்ல சொந்த்க் காரங்க வீட்டுக்குல்லாம் போயிருக்காம். எவம் வாசப்படியிலே ஏத்துவாம். கையில குடிக்கப் பணமுமில்லே.சோத்துக்குக் கூட யார் வீட்டுக்குள்ளேயும் போக முடியல்ல. கடைசியிலே விஷத்தைக் குடிச்சுச் செத்திட்டான்.


சொர்ணத்தக்கா அவ பாணியிலேயே கிட்டுப் பிள்ளை மகன் அடிச்சதிலத்தான் அவன் செத்தான்னு செத்த வீட்டுக்குள்ள எல்லாத்திட்டயும் சொல்லி அழுதிருக்கா. எல்லாரும் கிட்டுப் பிள்ளைட்ட வந்து சொல்லிருக்காங்க. அதுக்குப் பின்னாலே அவ வீட்டு வாசப்படிக்கு எப்படி போவான் கிட்டுப்பிள்ளை. அவம் பிள்ளகள எப்படி வளத்திருக்காம்ன்னு உனக்குத் தெரியும்லால. இத்தனை அயோக்கியப் பயலுவள சொர்ணத்தக்கா தெய்வக்குழந்தைகள்ன்னு வர்ணிப்பா. அவள்ளாம் ஒரு பொம்பிள்ண்ணு பேச வந்திட்டியோ.

எல கிட்டுப்பிள்ளை கூடவே கோயில் கோயிலாப் போயி அவங்க குடும்பம் ஒரு நல்ல காரியத்திற்காக கோயிலுக்குப் போம்போதும் தன் புருஷனைக் கொல்லணும்ன்னு  க்டவுள் எல்லாரையும் கூலிப்படை யாக வேண்டுதல்  வச்சவ என்ன யோக்கியதையில அவன் வரல்லேங்கா.

மன்னிச்சிடுங்க அண்ணாச்சி. தெரியாமக் கேட்டுப் புட்டேம்.

எதையுமே தெரியாமப் பேசாதீங்கடாண்ணு எத்தனை தடவை உங்ககிட்டச் சொல்லி அழுதாலும் இப்படித்தானல பேசிக்கிட்டுஅலையுதீய.







குறுக்குத் துறை ரகசியங்கள் இரண்டாம் பாகம் எழுதத் தொடங்குகின்றேன்.






ஏய் பூரணலிங்கம்  என்னல காலேல/

ஒண்ணுமில்ல அண்ணாச்சி நம்ம சொரணத்தக்காவ கோயில்ல பாத்தேன் அண்ணாச்சி. அவ ரொம்ப வருத்தப் பட்டா அவ வீட்டுக் காரர் இறந்ததுக்கு ந்ம்ம கிட்டுப்பிள்ள வரல்லேன்னு.

நெனச்சேம்ல ஏதாவது குண்டுணி பேசலைன்னா ஒனக்கு தூக்கம் வராதுன்னு.

ஒடனே என்னயத்தான் குத்தம் சொல்லுவியோன்னு தெரியும். ஒடம்பொறந்தவ வீட்டுக் காரம் செத்துப் போயிட்டான்னா இவரு போகல்லேன்னா சரிங்களோ அண்ணாச்சி

ஏய் சவத்து மூதி   கிட்டுப் பிள்ளையப் பத்தி ஒனக்குத் தெரியும்லாலே. அவம் அப்படி ஆளால, அவம் குடும்பத்தில எல்லொரும் அவனைப் பயன் படுத்திக் கிடுவாங்க. பொறவு ஆவலாதி தான். இந்த ஊருக்கே தெரியும்ல அவனப் பத்தி. அவ சொன்னாளாம் இவரு கேக்க வந்திட்டாராம்.மூடிக்கிட்டுப் போல.

எல அவளுக்கு மூணு கொள்ளி இருக்கானுவள்ளா. ஒரு பயலாவது உருப்படியா இருக்கானுவளா சொல்லுல. பூராவும் குடிகாரப் பயலுவ கேட்டா அந்த அக்காதாம் சொல்லுவா அவர மாதிரியே வந்திட்டானுவ தம்பி. அவ புருஷன்காரனப் பத்திச் சொல்லுவா .எல கிட்டுப் பிள்ள வாரம் தோறும் ஏதாவது கோயிலுக்குப் போவாம்ல்லால  இவளும் அவன்குடும்பத்தோட தொத்திக்கிடுவா தெரியும்லால ஒனக்கு.

ஆமா அண்ணாச்சி அன்னிக்கு நவ திருப்பதிக்குப் போம்போதும்  கூடத்தாம் போனா. அங்க போயி அவ பெருமாள்ட்ட என்ன வேண்டுவான்னு தெரியுமால. அவ புருஷன் உடனேயே செத்துப் போகணும்ன்னு.அது மட்டுமில்லல இந்த மாசம் உறுதியா செத்திருவாரு. புளியங்குடி ஜோசியன் சொல்லிட்டான்ம்பா. கிட்டுப்பிள்ளை வந்து அழுவாம். இவ தலையெழுத்து இப்படி ஆயிடுச்சே அண்ணாச்சி ண்ணு.


அவதான கோயில் கோயிலா வேண்டினா. இப்பம் அவரு செத்ததுக்கு வரல்லேன்னா. அசிங்கமா இல்லையா?

எல அவ பெரிய பய பன்னெண்டாம் கிளாசில அஞ்சு தடவ பெயிலா ஆயிட்டான். ஒரு காலேஜிலேயும் சேர்க்க முடியல்ல. கிட்டுப் பிள்ளைதான் நம்ம கிறிஸ்துவக் காலேஜில சேர்த்து விட்டான்.ஒரு தடவை பெயிலான பயலுவளய அந்தக் காலேஜ்ல சேக்க மாட்டானுவ. இவனச் சேத்துக் கிட்டானுவன்னா கிட்டுப் பிள்ளைக்காகத்தானே.
ஒரேமாசத்துல அந்தப் பய அந்தக் காலேஜ்ல ஸ்டிரைக பண்ணிட்டாம். கிட்டுப் பிள்ளை போயி காலேஜ் பிரின்சிபால் முன்னால தலையத் தொங்கப் போட்டுக் கிட்டு நின்னான். அடுத்த பய இருக்காம்ல்லா. நம்ம கண்ணதாசன் ஒரு சினிமாப் பாட்டுல் எழுதியிருப்பருல்லா காமுகர் நெஞ்சில் நீதியில்லை அவர்க்கு தாயென்றும் தாரமென்றும் பேதமில்லை என்று. அவம் கூத்து பெருசுல. ஒரு சொந்தக்காரங்க வீடிலயும் அவன உள்ள விட மாட்டாங்க.
பொம்பளப்புள்ள இருக்க வீட்டில மட்டும் இல்லல. பொம்பள இருக்க வீடுகளுக்குள்ளய விட மாட்டங்க.

கிட்டுப் பிள்ளைட்ட வந்து அவனுக்கு பொண்ணு பாக்கச் சொல்லியிருக்கா. கிட்டுப் பிள்ளை பொம்பளப் புள்ளபாவத்தில் நாம அடிச்சு விழுந்திருக் கூடாதுன்னு ஒண்ணும் பாக்கல. அவளா ஒரு பொண்ணைப் பாத்து கட்டி வச்சா. யாரோ ஒரு பைத்தியக்காரன் தன் பொண்ணைக் கட்டிக் குடுத்தாம்.இந்தப் பய தனிக்குடித்தனத்தில அந்தப் புள்ள முன்னாலேய பக்கத்து வீட்டில் இருக்கற ஒரு ஊன்முற்ற பையன் பொண்டாட்டியக் கூட்டிட்டு வந்து கூத்தடிச்சிருக்காம். அந்தப் புள்ள அவ அப்பன் வீட்டுக்குப் போயிட்டு.

கிட்டுப் பிள்ளை பயலுவல்லாம் எப்படி அவம் வள்த்திருக்காம் அப்படி. பாத்த  உடன கால்ல விழுந்து கும்பிடுவானுவ பெரியப்பா ஆசீரவாதம் பண்ணுங்கன்னு.

ஆமா அண்ணாச்சி என்னயும் எங்கன பாத்தாலும் மாமாண்ணு கும்பிடுவாங்க அண்ணாச்சி.

கிட்டுப் பிள்ளை மூத்த பயலுக்குக் கல்யாணம் ஆச்சுல்லால.

ஒங்க தலைமையில தான கல்யாணம். ரெண்டு நாளா எல்லாருக்கும் அவங்க வீட்டில தான சாப்பாடு.

கிட்டுப் பிள்ளை மாதந்தோறும் திருச்செந்தூர் போயிருவாம்ல்லா. அன்னிக்கு இந்தச் சின்னப் பய வந்திருக்காம் பொம்பளப் புள்ள இருக்க வீட்டுக்குள்ள இந்தப் பயல எப்படி விட முடியும். குடிச்சிட்டு வேற வந்திருக்காம். பணம் கேட்டிருக்காம். அந்தப் பயலும் மரியாதையா அத்தான் ஒங்க மாம திருச்செந்தூருக்குப் போயிருக்கா. சாயங்காலம் வந்து  வாங்கிக்கோ ண்ணிருக்கம். இந்தக் குடிகாரப் பய நிலயா நின்னிருக்காம். பக்கத்து வீட்டுப் பலவேசம் போயி யோவ் யத்தான் பெரியப்பா ஊரில் இல்லைல்லா அவாள் வந்ததுக்கப்புறம் வாங்கண்ணிருக்காம்.  அவனைப் போயி தேவடியாமகனேண்ணிருக்காம். அந்தப் பயலா பளிச்சின்னு யாரையும் கை நீட்டிருவாம்ல்லா. கையை நீட்டிட்டான். பொறவு அவன் அண்ணன் காரன் வந்து இந்தக் குடிகாரப் பயல கூட்டிடிட்டு போயிருக்காம்.இந்தப் பய பணத்தைப் பூராம் அவம் அண்ணங்கரான் தான் ஆட்டையப் போட்டிருக்காம். அவம் இந்தப் பயல ஒடனே சென்னக்கு அனுப்பி வச்சிருக்காம்

இடையில் கிட்டுப் பிள்லை வீட்டுக்காரிக்கு ஒடமுக்குச் சரியில்லேன்னு மெட்ராசுக்குக் கூட்டிட்டுப் போயிருந்தாம்லா அப்பம் இந்தப் பய வீட்டுக்கு பக்கத்துல இருந்த ஒரு மிலிட்டரிக்காரன் பிள்ளைய பதினங்ஜ்டு வயசுப்பிள்ளைய கூட்டிட்டு கிட்டுப் பிள்லை வீட்டுக்குப் போயிட்டாம். அதையும் எப்படியோ கிட்டுப் பிள்ளை சமாளிச்சு  அந்தப் பிள்ளையை அவங்க அப்பன் காரன்கிட்ட ஒப்படைச்சிருக்காம். இநதப் பய  அதேதான் சாக்குன்னு அங்கேயே ஒரு ஆறு மாசம்  டேரா போட்டுட்டான். அங்கனயும் சும்மா இல்ல ஒரு இள்நீர் விக்கறவ்ம் பொண்டாட்டிய சினிமாவுக்கு கூட்டிட்டுப் போயிட்டாம்ன்னு அங்க எல்லாரும் ஆவலாதி. என்ன பண்ணுவாம் கிட்டுப் பிள்ளை. அவன ஊருக்குப் போய்யாண்ணு கெஞ்சிக் கூத்தாடி அனுப்பிச்சு வச்சிருக்காம். இவ என்ன சொல்லுவா தெரியுமா  எல்லார்ட்டயும் ஒரு வாய்ச் சோறு போடாம எம்புள்ளய அனுப்பிச்சிட்டாம்ன்னு. ஆறுமாசம் இந்தப் பய அங் என்ன் பீயையால தின்னாம். இவள்லாம் ஒரு மனுஷின்னு  நீரு கேக்க வந்திட்டேரோ.

Friday, October 4, 2013

ஒன்றும் புரியவில்லை

உச்ச நீதி மன்ற்ம் ஊழல் அரசியல்வாதிகள் தேர்தலில் நிற்க தடை விதித்து தீர்ப்புச் சொன்ன அன்று அதனை எல்லா அரசியல் கட்சிகளும் எதிர்த்தன். ஜுலை 13ம் தேதி எனது வலைப்பூ தளத்திலேயே நான் எழுதியிருந்தேன். கம்யூனிஸ்ட்கள் எதிர்த்ததுதான் எனக்கு பெரிய ஆச்சரியத்தை ஏற்படுத்தியதையும் எழுதியிருந்தேன். காங்கிரஸ் பாஜக உட்பட எல்லோரும் ஒரு மனதாக எதிர்த்தனர். இன்று ராகுல் காந்தி அதனை கிழித்து எறிய வேண்டும் என்பதற்கு ஒரு நாள் முன்னர் பாஜகவினர் குடியரசுத் தலைவரை சந்தித்து இந்தச் சட்டத் திருத்தத்தைக் கொண்டு வர அவர் அனுமதிக்கக் கூடாது என்று கோரிக்கை வைத்த அன்றே எனக்குச் சிரிப்பு வந்தது. இப்போதோ  ராகுல் காந்தி மன்மோகன் சிங்கை அவமானப் படுத்தியதாக பாஜக தலைவர்கள் வருத்தப் படுகின்றனர். அவரை இவர்கள் எப்படியெல்லாம் விமரிசித்தவர்கள்.ராகுல் காந்தி ஒரு நாடாளுமன்ற உறுப்பினர். காங்கிரஸ் கட்சியின் அகில இந்தியத் துணைத் தலைவர். இரண்டு பொறுப்பில் இருப்பவர்.அவருக்கும் உரிமை உண்டு தானே ஒன்றும் புரியவில்லை.


கோயில்களை விட கழிப்பறைகள்தான் இன்று முக்கியத் தேவை என்று மோடி சொன்னதை விஷ்வ இந்து பரிஷத் தலைவர் ஒருவர் கண்டித்திருக்கின்றார்.

காந்திய இயக்கத் தலைவர் தமிழருவி மணியன் அவர்கள் மோடி பிரரதமராக வேண்டும் என்றும் தமிழகத்தின் முதல்வராக வை.கோ.அவர்கள் வர வேண்டும் என்றும் அவரது ஆசையை வெளிப்படுத்தியிருக்கின்றார். அவர் காந்தியை தெய்வமாகக் கருதுகின்றவர். பெருந்தலைவர். காமராஜரையும் போற்றுபவர். காந்தியைக் கொன்றவர்கள் யார் என்று விலாவாரியாகத் தமிழக மேடைகளில் பேசியவர். காமராஜரை உயிரோடு தீ வைக்க டெல்லியில் முயன்றவர்கள் யார் என்பதனையும் மேடைகள் தோறும் கடுமையாக விமரிசித்தவர். அவர் மோடி பிரதமர் ஆக வேண்டும் என்கின்றார். வை.கோ முதல்வர் என்பதுதான் எனக்குப் புரியவில்லை.

வை.கோ. தமிழ்நாட்டில் காங்கிரஸ் ஒரு இடத்தில் கூட வெற்றி பெற முடியாத படி செய்யப் போகின்றேன் என்கின்றார். முதலில் அவர் எந்தக் கூட்டணியில் இருக்கப் போகின்றார் என்பதனையாவது அவர் தெளிவுபடுத்திக் கொள்ளட்டும். கூட்டணிகளால்தான் காங்கிரஸ்காரர்கள் தமிழ்நாட்டில் வெற்றி பெறுவார்கள். அதனால் வை.கோவின் கனவு பலிக்காது