அப்பா என்றுனை அழைத்தேன் ஏற்றுக் கொண்டாய்
அய்யனே அண்ணாமலை அழகனே நீ
அப்பா என்றெனை அழைக்க ஆசை கொண்டார்
அன்புடனே திருலோகசந்தர் என்பார்
ஒப்பில்லாத் தமிழன்னை தந்த வரம்
உயர் அன்பைத் தருகின்ற தெந்தனுக்கு
இப்பாரில் இவரைப் போல் உள்ள பிள்ளை
எனக்களித்த இறைவனே நான் பணிந்து நின்றேன்
Sunday, December 4, 2011
நான் பணிந்து நின்றேன்
Wednesday, November 30, 2011
இறைவன் துணை
புரியாமல் வாழுகின்றேன் அன்பை நம்பி
போற்றுவோர் தூற்றுவோர் அனைவரிடம்
அறியாமல் வாழுகின்றேன் என்றே பலர்
ஆதங்கம் கொள்கின்றார் என்னிடத்தில்
சிறியாராய் அவர் நடந்தால் எனக்கு என்ன
சிந்தித்தே முறையாய்த் தான் வாழுகின்றேன்
வறியானாய் ஆனாலும் எந்தனது
வழி முறைகள் மாறாது இறைவன் துணை
Sunday, November 20, 2011
தாயருளால் என்னைக் காப்பாய்
குணமாக்கி எனைக் கொல்ல வேண்டும் அய்யா
கோமகனே உன் பாதம் பணிந்தே நின்றேன்
இரணமாக்கிக் கொல்கின்றார் உற்றார் நண்பர்
இரவெனினும் பகலெனினும் உந்தன் துணை
பிணமாக்கிப் பார்க்கின்றார் நிதமும் என்னை
பேணி நிற்கும் அன்பாலே வந்த வினை
கணமேனும் உனை மறவா அருளைத் தந்த
கண்ணுதலே தாயருளால் என்னைக் காப்பாய்
Sunday, November 13, 2011
தம்பி மகள் ஆம் என அன்பு மகளோடும் மருமகனோடும்

பெரியப்பா என்று வாய் நிறைய கூப்பிடும் என் அன்பு மகளும் மருமகனும் வாழ்க வாழ்க என்று வாழ்த்தி மகிழ்கின்றேன்
Subscribe to:
Posts (Atom)

