Wednesday, July 13, 2016

வாரும் வே பசுங்கிளியா பிள்ளை. அத்தானை இப்பம்தான் நெனவு வந்திச்சோ.

ஆரம்பிச்சிட்டேளா. அய்யா நான் கடை கண்ணியோட படாத பாடு பட்டுக்கிட்டிருக்கேன். போதாக்குறைக்கு ஒங்க தங்கச்சி படுத்துத பாட்டையும் பொறுத்துக் கிட்டு ஒருத்தன் வாழுறதே பெரிய காரியம்ண்ணு நெனைக்கவே மாட்டுக்கேளே.

வே நாங்க பைத்தியக்காரத்தனமா எங்க தங்கச்சிய கட்டிக் கொடுத்தத இப்படிச் சொல்லிக் காட்டுதீரோ அவ இருக்கப் போய்தாம் நீரு மணந்துக்கிட்டு இருக்கீரு மறந்திராதியும்.

சரிய்யா வாயத் தொறக்க விடமாட்டேளே.

யத்தான் நான் நேத்து ராத்திரியே வந்திட்டேன். இப்பம் போய் அவாளத் தொந்தரவு ப்ண்ணாதேன்னு ஒங்க மாமனார் சொன்னதுனாலதான் இப்ப வந்தேன்.  ஆமா இந்த ஆவுடையப்பம் பொண்டாட்டி யாரோடயோ ஒடிப் போயிட்டாளாமே. அத ஊர்க்காரனுவ சொல்லுதானுவ  அவோ ஒங்க பெரிய வீட்டு அத்தான் அந்தப் பிள்ளைய எவனும் கொற சொல்லாதீங்ல ண்ணு உத்தரவு போடுதாவண்ணு சொல்லுதானுவளே நெசந்தானா.

நெனச்சேம் தென்காசிக்கு தகவல் வந்து இத வெசாரிக்கத்தாம் நீரு வந்திருக்கேரு. இதில அத்தானப் பாக்க வந்ததா ஒரு நாடகம்.


எய்யா அது சின்னப் புள்ள நல்லா பாக்க அம்சமா வேற இருக்கு. அதப் போயி அவ அம்மை அந்த ஆவுடையப்பப் பயலுக்கு நாப்பது வயசான பயலுக்குக் கட்டிக் கொடுத்தா எப்படிவே சரி. சொல்லும். பளிச்சினு எல்லாப் பயலுவளையும் போல நீங்க பேசலாமா.தென்காசியில் எத்தனை பெரிய தமிழ் அறிஞர்கள்லாம் வந்து திருக்குறள் கழகத்தில் பேசுதாங்க. அதை நல்லாக் கேட்டிருந்தா பொம்பளப்புள்ளயக் கொற சொல்றத விசாரிக்க வர மாட்டீய.


அவ அம்மையப் போல மகன்னு ஊர்க்காரனுவ சொல்லுதானுவள்ளா. அதான்  கேக்கலாம் ன்னு வந்தேன்.

மக்களுக்கு ஆயிரம் பிரச்சினை எல்லாம் இருக்கு அதையெல்லாம் விட்டுப் போட்டு இதக் கேக்க வந்தேளாக்கும்

என்ன அவ அம்மே பண்ணிட்டா. அவளும் அந்தக் கிராமத்திலேயே அழகுல்லா.  ஒடம்பு வேற நல்லாச் சாப்பிட்டு சாப்பிட்டு வளந்திருந்துது.நெய்யும் தயிருமால்லா அவ அம்மே அவள வளத்தா.
அவளைக் கொண்டு சொந்தம்ண்ணு ஒரு டிரைவருக்குக்  கட்டி வச்சா.
அந்தப் பய காரையே சரியா ஒட்ட மாட்டான்னு திருநவேலி பூராம் தெரியும்.

சரி இரண்டு பொட்டபுள்ளகள்யும் பெத்தா. இவம் ஒழைக் கதில்ல.எப்பம் பாரு எவங்கிட்டயாவது கடன் வாங்கியே பொழப்ப ஒட்ட்ப் பாத்தான். அப்பந்தாம் அவ தூரத்து சொந்தக்காரன் தாசிலதாரா வந்தான். அவ வீட்டுக்குக் கிட்டய குடியும் வந்தான் . இவ அவனுக்குப் பொங்கிக் குடுத்தாவது புள்ளைகளக் காப்பாத்த்லாம்ன்னு அவனுக்கு பொங்கிக் கொடுக்க ஆரம்பிச்சா . இவ புருஷங்காரப் பய அவங்கிட்டயும் பிச்சை எடுக்க ஆரம்பிசான். அந்தப் பய இவள ரொம்ப அன்பா வச்சுக்கிட்டான். வேணும்ன்னாவே அந்தப் புள்ள பண்ணுச்சி. சூழ்நிலைவே மாப்பிள்ளை.பொசுக்குண்ணு பேசிடப்பிடாது பொம்பளப்புள்ளகள புரியுதா.

Tuesday, July 12, 2016

எல அவளுக்கு ஒரே ஒரு பொம்பளைப்பிள்ள.இவங்க மெட்ராஸ்ல இருக்கும் போத் அவளுக்கு ஒரு பெரிய காலேஜ்ல கிட்டுப்பிள்ளைதான் சீட் வாங்கிக் கொடுத்தான். நன்றி வேணும்ல நன்றி.

அந்தப் பிள்ளைக்கு ஒரு பெரிய குடும்பத்தில கிட்டுப்பிள்ளதான் மாப்பிள்ளை பார்த்துக் கொடுத்தான். பத்து வருசமா வாங்கின சம்பளம் அத்தனையும் அந்தப் பையன் பேங்கில தான் போட்டு வச்சிருந்தான்.அந்தக் கல்யாணத்தையும் கிட்டுப் பிள்ளைதான் பொறுப்பா நடத்தினான்.அந்தக் கல்யாண வீட்டுலயே கிட்டுப்பிள்ளைய அவமானப் படுத்தினா அவங்க அக்கா.அவள்ளாம் என்ன பொம்பளண்ணூ பேச் வந்தே. அவ கேட்டாளாம். இவரு கேக்காராம்.

எல அந்தக் குடிகாரப் பயல பலவேசம் அடிச்சாம்லா.அதுக்குப் பிறகு அந்தப் பய மெட்ராஸ் ஊர்ல சொந்த்க் காரங்க வீட்டுக்குல்லாம் போயிருக்காம். எவம் வாசப்படியிலே ஏத்துவாம். கையில குடிக்கப் பணமுமில்லே.சோத்துக்குக் கூட யார் வீட்டுக்குள்ளேயும் போக முடியல்ல. கடைசியிலே விஷத்தைக் குடிச்சுச் செத்திட்டான்.


சொர்ணத்தக்கா அவ பாணியிலேயே கிட்டுப் பிள்ளை மகன் அடிச்சதிலத்தான் அவன் செத்தான்னு செத்த வீட்டுக்குள்ள எல்லாத்திட்டயும் சொல்லி அழுதிருக்கா. எல்லாரும் கிட்டுப் பிள்ளைட்ட வந்து சொல்லிருக்காங்க. அதுக்குப் பின்னாலே அவ வீட்டு வாசப்படிக்கு எப்படி போவான் கிட்டுப்பிள்ளை. அவம் பிள்ளகள எப்படி வளத்திருக்காம்ன்னு உனக்குத் தெரியும்லால. இத்தனை அயோக்கியப் பயலுவள சொர்ணத்தக்கா தெய்வக்குழந்தைகள்ன்னு வர்ணிப்பா. அவள்ளாம் ஒரு பொம்பிள்ண்ணு பேச வந்திட்டியோ.

எல கிட்டுப்பிள்ளை கூடவே கோயில் கோயிலாப் போயி அவங்க குடும்பம் ஒரு நல்ல காரியத்திற்காக கோயிலுக்குப் போம்போதும் தன் புருஷனைக் கொல்லணும்ன்னு  க்டவுள் எல்லாரையும் கூலிப்படை யாக வேண்டுதல்  வச்சவ என்ன யோக்கியதையில அவன் வரல்லேங்கா.

மன்னிச்சிடுங்க அண்ணாச்சி. தெரியாமக் கேட்டுப் புட்டேம்.

எதையுமே தெரியாமப் பேசாதீங்கடாண்ணு எத்தனை தடவை உங்ககிட்டச் சொல்லி அழுதாலும் இப்படித்தானல பேசிக்கிட்டுஅலையுதீய.







குறுக்குத் துறை ரகசியங்கள் இரண்டாம் பாகம் எழுதத் தொடங்குகின்றேன்.






ஏய் பூரணலிங்கம்  என்னல காலேல/

ஒண்ணுமில்ல அண்ணாச்சி நம்ம சொரணத்தக்காவ கோயில்ல பாத்தேன் அண்ணாச்சி. அவ ரொம்ப வருத்தப் பட்டா அவ வீட்டுக் காரர் இறந்ததுக்கு ந்ம்ம கிட்டுப்பிள்ள வரல்லேன்னு.

நெனச்சேம்ல ஏதாவது குண்டுணி பேசலைன்னா ஒனக்கு தூக்கம் வராதுன்னு.

ஒடனே என்னயத்தான் குத்தம் சொல்லுவியோன்னு தெரியும். ஒடம்பொறந்தவ வீட்டுக் காரம் செத்துப் போயிட்டான்னா இவரு போகல்லேன்னா சரிங்களோ அண்ணாச்சி

ஏய் சவத்து மூதி   கிட்டுப் பிள்ளையப் பத்தி ஒனக்குத் தெரியும்லாலே. அவம் அப்படி ஆளால, அவம் குடும்பத்தில எல்லொரும் அவனைப் பயன் படுத்திக் கிடுவாங்க. பொறவு ஆவலாதி தான். இந்த ஊருக்கே தெரியும்ல அவனப் பத்தி. அவ சொன்னாளாம் இவரு கேக்க வந்திட்டாராம்.மூடிக்கிட்டுப் போல.

எல அவளுக்கு மூணு கொள்ளி இருக்கானுவள்ளா. ஒரு பயலாவது உருப்படியா இருக்கானுவளா சொல்லுல. பூராவும் குடிகாரப் பயலுவ கேட்டா அந்த அக்காதாம் சொல்லுவா அவர மாதிரியே வந்திட்டானுவ தம்பி. அவ புருஷன்காரனப் பத்திச் சொல்லுவா .எல கிட்டுப் பிள்ள வாரம் தோறும் ஏதாவது கோயிலுக்குப் போவாம்ல்லால  இவளும் அவன்குடும்பத்தோட தொத்திக்கிடுவா தெரியும்லால ஒனக்கு.

ஆமா அண்ணாச்சி அன்னிக்கு நவ திருப்பதிக்குப் போம்போதும்  கூடத்தாம் போனா. அங்க போயி அவ பெருமாள்ட்ட என்ன வேண்டுவான்னு தெரியுமால. அவ புருஷன் உடனேயே செத்துப் போகணும்ன்னு.அது மட்டுமில்லல இந்த மாசம் உறுதியா செத்திருவாரு. புளியங்குடி ஜோசியன் சொல்லிட்டான்ம்பா. கிட்டுப்பிள்ளை வந்து அழுவாம். இவ தலையெழுத்து இப்படி ஆயிடுச்சே அண்ணாச்சி ண்ணு.


அவதான கோயில் கோயிலா வேண்டினா. இப்பம் அவரு செத்ததுக்கு வரல்லேன்னா. அசிங்கமா இல்லையா?

எல அவ பெரிய பய பன்னெண்டாம் கிளாசில அஞ்சு தடவ பெயிலா ஆயிட்டான். ஒரு காலேஜிலேயும் சேர்க்க முடியல்ல. கிட்டுப் பிள்ளைதான் நம்ம கிறிஸ்துவக் காலேஜில சேர்த்து விட்டான்.ஒரு தடவை பெயிலான பயலுவளய அந்தக் காலேஜ்ல சேக்க மாட்டானுவ. இவனச் சேத்துக் கிட்டானுவன்னா கிட்டுப் பிள்ளைக்காகத்தானே.
ஒரேமாசத்துல அந்தப் பய அந்தக் காலேஜ்ல ஸ்டிரைக பண்ணிட்டாம். கிட்டுப் பிள்ளை போயி காலேஜ் பிரின்சிபால் முன்னால தலையத் தொங்கப் போட்டுக் கிட்டு நின்னான். அடுத்த பய இருக்காம்ல்லா. நம்ம கண்ணதாசன் ஒரு சினிமாப் பாட்டுல் எழுதியிருப்பருல்லா காமுகர் நெஞ்சில் நீதியில்லை அவர்க்கு தாயென்றும் தாரமென்றும் பேதமில்லை என்று. அவம் கூத்து பெருசுல. ஒரு சொந்தக்காரங்க வீடிலயும் அவன உள்ள விட மாட்டாங்க.
பொம்பளப்புள்ள இருக்க வீட்டில மட்டும் இல்லல. பொம்பள இருக்க வீடுகளுக்குள்ளய விட மாட்டங்க.

கிட்டுப் பிள்ளைட்ட வந்து அவனுக்கு பொண்ணு பாக்கச் சொல்லியிருக்கா. கிட்டுப் பிள்ளை பொம்பளப் புள்ளபாவத்தில் நாம அடிச்சு விழுந்திருக் கூடாதுன்னு ஒண்ணும் பாக்கல. அவளா ஒரு பொண்ணைப் பாத்து கட்டி வச்சா. யாரோ ஒரு பைத்தியக்காரன் தன் பொண்ணைக் கட்டிக் குடுத்தாம்.இந்தப் பய தனிக்குடித்தனத்தில அந்தப் புள்ள முன்னாலேய பக்கத்து வீட்டில் இருக்கற ஒரு ஊன்முற்ற பையன் பொண்டாட்டியக் கூட்டிட்டு வந்து கூத்தடிச்சிருக்காம். அந்தப் புள்ள அவ அப்பன் வீட்டுக்குப் போயிட்டு.

கிட்டுப் பிள்ளை பயலுவல்லாம் எப்படி அவம் வள்த்திருக்காம் அப்படி. பாத்த  உடன கால்ல விழுந்து கும்பிடுவானுவ பெரியப்பா ஆசீரவாதம் பண்ணுங்கன்னு.

ஆமா அண்ணாச்சி என்னயும் எங்கன பாத்தாலும் மாமாண்ணு கும்பிடுவாங்க அண்ணாச்சி.

கிட்டுப் பிள்ளை மூத்த பயலுக்குக் கல்யாணம் ஆச்சுல்லால.

ஒங்க தலைமையில தான கல்யாணம். ரெண்டு நாளா எல்லாருக்கும் அவங்க வீட்டில தான சாப்பாடு.

கிட்டுப் பிள்ளை மாதந்தோறும் திருச்செந்தூர் போயிருவாம்ல்லா. அன்னிக்கு இந்தச் சின்னப் பய வந்திருக்காம் பொம்பளப் புள்ள இருக்க வீட்டுக்குள்ள இந்தப் பயல எப்படி விட முடியும். குடிச்சிட்டு வேற வந்திருக்காம். பணம் கேட்டிருக்காம். அந்தப் பயலும் மரியாதையா அத்தான் ஒங்க மாம திருச்செந்தூருக்குப் போயிருக்கா. சாயங்காலம் வந்து  வாங்கிக்கோ ண்ணிருக்கம். இந்தக் குடிகாரப் பய நிலயா நின்னிருக்காம். பக்கத்து வீட்டுப் பலவேசம் போயி யோவ் யத்தான் பெரியப்பா ஊரில் இல்லைல்லா அவாள் வந்ததுக்கப்புறம் வாங்கண்ணிருக்காம்.  அவனைப் போயி தேவடியாமகனேண்ணிருக்காம். அந்தப் பயலா பளிச்சின்னு யாரையும் கை நீட்டிருவாம்ல்லா. கையை நீட்டிட்டான். பொறவு அவன் அண்ணன் காரன் வந்து இந்தக் குடிகாரப் பயல கூட்டிடிட்டு போயிருக்காம்.இந்தப் பய பணத்தைப் பூராம் அவம் அண்ணங்கரான் தான் ஆட்டையப் போட்டிருக்காம். அவம் இந்தப் பயல ஒடனே சென்னக்கு அனுப்பி வச்சிருக்காம்

இடையில் கிட்டுப் பிள்லை வீட்டுக்காரிக்கு ஒடமுக்குச் சரியில்லேன்னு மெட்ராசுக்குக் கூட்டிட்டுப் போயிருந்தாம்லா அப்பம் இந்தப் பய வீட்டுக்கு பக்கத்துல இருந்த ஒரு மிலிட்டரிக்காரன் பிள்ளைய பதினங்ஜ்டு வயசுப்பிள்ளைய கூட்டிட்டு கிட்டுப் பிள்லை வீட்டுக்குப் போயிட்டாம். அதையும் எப்படியோ கிட்டுப் பிள்ளை சமாளிச்சு  அந்தப் பிள்ளையை அவங்க அப்பன் காரன்கிட்ட ஒப்படைச்சிருக்காம். இநதப் பய  அதேதான் சாக்குன்னு அங்கேயே ஒரு ஆறு மாசம்  டேரா போட்டுட்டான். அங்கனயும் சும்மா இல்ல ஒரு இள்நீர் விக்கறவ்ம் பொண்டாட்டிய சினிமாவுக்கு கூட்டிட்டுப் போயிட்டாம்ன்னு அங்க எல்லாரும் ஆவலாதி. என்ன பண்ணுவாம் கிட்டுப் பிள்ளை. அவன ஊருக்குப் போய்யாண்ணு கெஞ்சிக் கூத்தாடி அனுப்பிச்சு வச்சிருக்காம். இவ என்ன சொல்லுவா தெரியுமா  எல்லார்ட்டயும் ஒரு வாய்ச் சோறு போடாம எம்புள்ளய அனுப்பிச்சிட்டாம்ன்னு. ஆறுமாசம் இந்தப் பய அங் என்ன் பீயையால தின்னாம். இவள்லாம் ஒரு மனுஷின்னு  நீரு கேக்க வந்திட்டேரோ.

Friday, October 4, 2013

ஒன்றும் புரியவில்லை

உச்ச நீதி மன்ற்ம் ஊழல் அரசியல்வாதிகள் தேர்தலில் நிற்க தடை விதித்து தீர்ப்புச் சொன்ன அன்று அதனை எல்லா அரசியல் கட்சிகளும் எதிர்த்தன். ஜுலை 13ம் தேதி எனது வலைப்பூ தளத்திலேயே நான் எழுதியிருந்தேன். கம்யூனிஸ்ட்கள் எதிர்த்ததுதான் எனக்கு பெரிய ஆச்சரியத்தை ஏற்படுத்தியதையும் எழுதியிருந்தேன். காங்கிரஸ் பாஜக உட்பட எல்லோரும் ஒரு மனதாக எதிர்த்தனர். இன்று ராகுல் காந்தி அதனை கிழித்து எறிய வேண்டும் என்பதற்கு ஒரு நாள் முன்னர் பாஜகவினர் குடியரசுத் தலைவரை சந்தித்து இந்தச் சட்டத் திருத்தத்தைக் கொண்டு வர அவர் அனுமதிக்கக் கூடாது என்று கோரிக்கை வைத்த அன்றே எனக்குச் சிரிப்பு வந்தது. இப்போதோ  ராகுல் காந்தி மன்மோகன் சிங்கை அவமானப் படுத்தியதாக பாஜக தலைவர்கள் வருத்தப் படுகின்றனர். அவரை இவர்கள் எப்படியெல்லாம் விமரிசித்தவர்கள்.ராகுல் காந்தி ஒரு நாடாளுமன்ற உறுப்பினர். காங்கிரஸ் கட்சியின் அகில இந்தியத் துணைத் தலைவர். இரண்டு பொறுப்பில் இருப்பவர்.அவருக்கும் உரிமை உண்டு தானே ஒன்றும் புரியவில்லை.


கோயில்களை விட கழிப்பறைகள்தான் இன்று முக்கியத் தேவை என்று மோடி சொன்னதை விஷ்வ இந்து பரிஷத் தலைவர் ஒருவர் கண்டித்திருக்கின்றார்.

காந்திய இயக்கத் தலைவர் தமிழருவி மணியன் அவர்கள் மோடி பிரரதமராக வேண்டும் என்றும் தமிழகத்தின் முதல்வராக வை.கோ.அவர்கள் வர வேண்டும் என்றும் அவரது ஆசையை வெளிப்படுத்தியிருக்கின்றார். அவர் காந்தியை தெய்வமாகக் கருதுகின்றவர். பெருந்தலைவர். காமராஜரையும் போற்றுபவர். காந்தியைக் கொன்றவர்கள் யார் என்று விலாவாரியாகத் தமிழக மேடைகளில் பேசியவர். காமராஜரை உயிரோடு தீ வைக்க டெல்லியில் முயன்றவர்கள் யார் என்பதனையும் மேடைகள் தோறும் கடுமையாக விமரிசித்தவர். அவர் மோடி பிரதமர் ஆக வேண்டும் என்கின்றார். வை.கோ முதல்வர் என்பதுதான் எனக்குப் புரியவில்லை.

வை.கோ. தமிழ்நாட்டில் காங்கிரஸ் ஒரு இடத்தில் கூட வெற்றி பெற முடியாத படி செய்யப் போகின்றேன் என்கின்றார். முதலில் அவர் எந்தக் கூட்டணியில் இருக்கப் போகின்றார் என்பதனையாவது அவர் தெளிவுபடுத்திக் கொள்ளட்டும். கூட்டணிகளால்தான் காங்கிரஸ்காரர்கள் தமிழ்நாட்டில் வெற்றி பெறுவார்கள். அதனால் வை.கோவின் கனவு பலிக்காது

Monday, September 23, 2013

ஊழலுக்குச் சம்பள்ம்

இந்தியாவின் தொழிலதிபர்களில் கலாநிதிமாறன் அவர்கள் தான் பல கோடிகளில் ஊதியம் பெற்று முத்லில் இருக்கின்றாராம். ஒரு சாமானியக் குடும்பத்தில் பிறந்தவர் ஒரு தலைமுறைக்குள்ளேயே இத்தனை பெரிய ஊதியம்  பெறுகிராரென்றால் எத்தனை கடுமையாக உழைத்திருக்க வேண்டும்.

Tuesday, September 17, 2013

கொஞசம் செய்திகள்

மகிழ்ச்சியான செய்தி சந்திர பாபு நாயுடு அவர்களுக்கு சொத்து 42 இலட்சம்.அவர் குடும்பத்தினருக்கு 42 கோடி.

தொடர்ந்து ஆசிரியர்கள் குழந்தைகளை அடிப்பதும் குழந்தைகள் கண்களை இழப்பதும் தொடர்கிறது. ஆசிரியர் பணிக்கு கல்வி அளவுகோலை வைத்து மட்டும்  ஆசிரியர்களைத் தேர்ந்தெடுப்பதால் வரும் கேடு.


நீதிபதிகள் நியமனம் குறித்து மைய அரசு நாடாளுமன்றத்தில் விவாதங்கள் நடத்தியது. பொதுமறை தந்த வள்ளுவப் பேராசானின் குறள் சொல்லுகின்றது. சமன் செய்து சீர் தூக்கும் கோல் போல் அமைந்தொருபால் கோடாமை சான்றோர்க்கணி

கல்வித் தகுதிகளை மட்டும் வைத்து நியமிப்பதனை விட சான்றாண்மை மிக்கவராக அதவது ஒழுக்கத்தில் சிறந்தவர்களா என்று பார்த்து நியமிப்பதென்று முடிவெடுத்தால் நீதித் துறை. உயர்ந்து விளங்கும்

ஆசாராம் ஆசாரத்தை விட்டதனால் ஆசிரமம் ஆகச் சிரமமாகிப் போச்சு.


Tuesday, September 10, 2013

இந்தியா தேசம் அது இணையற்ற தேசம்

பிரதமரிடம் அமைச்சர்களும் அனைவரும் தங்கள் சொத்து விபரங்களைத் தந்திருக்கின்றனர். அமைச்சர்களை விட அமைச்சர்களின் மனைவிமாருக்குத்தான் சொத்து அதிகம் என்ற தகவல் வந்திருக்கின்றது.இப்போதாவது இந்திய மக்கள் தெளிவடைய வேண்டும். ஆமாம் நமது அமைச்சர்கள் எவ்வள்வு நேர்மையானவர்கள் என்று. வந்தேமாதரம்.. ஜெய்ஹிந்த்                                                                                                               இந்திய ஆட்சிப் பணி(ஐ.ஏ.எஸ்)  அதிகாரிகள் வெளி நாட்டில் மருத்துவ சிகிச்சை எடுத்துக் கொள்வதற்கான் செலவை நமது அரசே ஏற்றுக் கொள்ளும் என்கின்ற மகிழ்ச்சியான செய்தி. மிகமிகக் குறைவான சம்பளத்தில் மக்களுக்கு (மந்திரிகளுக்கு) சேவை செய்யும் அவர்கள் படுகின்ற கஷ்டங்கள் கொஞசமா நஞசமா.  இந்திய ஆட்சிப் பணி அதிகாரிகளின் தேசப் பற்றும் இதில் வெளியாகின்றது. நமது நாட்டில் சிற்ந்த மருத்துவர்களும் மருத்துவமனைகளும் கிடையாது என்கின்ற அவர்தம் தெளிவான் எண்ணத்தை மத்திய அரசும் ஆதரிக்கின்றதே.   வாழ்க இந்தியா.              தெளிவான முயற்சிக்குவ யது தடையில்ல என்று நிரூபித்திருக்கின்ற டென்னிஸ் வீரர் 40 வயது பயஸ்ஸூம் ( இவர் ஒரு இந்தியர் என்பதனை நினைவில் கொள்க) இவருக்கு அரசு ஒரு மரியாதையும் செய்து விடாது. இவர் கிரிக்கெட்டில் விளையாடினால்தான் கோடிக் கணக்கில் கிடைக்கும்.ஏற்கனவே ஹாக்கி வீரர்களுக்கு 25000 ரூபாய் தந்து கெள்ரவித்ததே நமது மத்திய அரசு. அமெரிக்க வீராங்கனை செரீனா வில்லியம்ஸ்இவரும் க்றூப்பினத்தவர் தாம்  .                                           கச்சத்தீவின் வரலாற்றை மக்களுக்குத் தெளிவு படுத்தி ந்மது மீனவ நண்பர்களுக்கு அது எத்தனை தேவை என்று உணர்த்தியிருக்கின்றனர் ராமநாதபுரம்   அரசரும் அரசியும்.அவர்களுக்கு நெஞ்சார்ந்த நன்றி.                                                                                           இலங்கைத் தமிழர்களின் தமிழர் பகுதியை கைப்பற்றி அவர்களிடம் அதனைத் தர வேண்டும் எனது நண்பர் மத்திய அமைச்சர் சுதர்சன நாச்சியப்பன் சொல்லியிருக்கின்றார். அதற்கு இந்திரா அம்மாவோ சஞய் காந்தியோ இருந்திருக்க வேண்டும்.முதுகெலும்பில்லாத இன்றைய தலைவர்கள் என்ன செய்து விட முடியும்