Thursday, April 29, 2010

கேதான் தேசாய்

இத்தனை நாள் எதுவும் தெரியாமலா இருந்தார்
இது என்ன அரசாங்கம் புரியவில்லை
கொத்து கொத்தாகக் கோடிகள் தங்கமோ
கொல்லுலை இரும்பு போல்கணக்கின்றி அய்யகோ
செத்தா இருந்தது அரசாங்கப் பிரிவுகள்
சிறியரோ ஏழையோ திருடினால் கொல்கின்றிர்
மெத்தப் படித்தவர் கேதனாம் தேசாயாம்
மேலிருப்போரே இது தெரியாதா உமக்கெலாம்

சத்தியம் செய்வீரோ தெரியாது என்று நீர்
சரித்திரம் பழிக்காதா உங்களைப் பேய் என்று
எத்தனை எத்தனை பேர் இங்கு காத்தீரோ
எப்படி காந்தியின் பெயரை நீர் சொல்லலாம்
மொத்தமும் பணத்தினால் என்று நீர் வாழ்கின்ற
முறையற்ற வாழ்விது வாழ்வென ஆகுமோ
செத்தொழிவீர் உம் வம்சமும் அழிந்திடும்
சிரிக்காதீர் இது உறுதி நான் உரைக்கின்றேன்

Sunday, April 25, 2010

ராம்கோ சிமிண்ட்ஸ் நிறுவனர் நாள்


நிறுவனத் துணைத் தலைவர் திரு ரவிஷங்கர் அவர்கள் மேலாளர் ஸ்ரீதரன் தங்ககிருஷ்ணன்
ராஜ ராஜன் அவர்கள் ஞானசம்பந்தம் தொழிற்சங்கத் தலைவர்கள்

ராம்கோ சிமிண்ட்ஸ் நிறுவனர் பெரியவர் ராமசாமி ராஜா நினைவு நாள்


பேராசிரியர் வே.சங்கரநாராயணன் அவர்கள் உரை நிகழ்த்துகின்றார்

ராம்கோ சிமிண்ட் நிறுவனர் பெரியவர் ராமசாமி ராஜா நினைவு நாள்


ஆசிரியர் பே.சங்கரலிங்கம் பேராசிரியர் திருமதி க.சுப்புலக்ஷ்மி

வணக்கத்திற்குரிய பெரியவர் ராமசாமி ராஜா நினைவு நாள்


24-04-2010 பட்டிமண்டபம் பேராசிரியர் முனைவர்திருமதி வேலம்மாள் பேராசிரியர் வே.சங்கரநாராயணன்

Saturday, April 24, 2010

சாமியாரு மாட்டிக்கிட்டாரு

சாமியாரு பக்கத்திலே தப்பே இல்லை
சரியாத்தான் எல்லாமே செஞ்சிருக்கார்
காமிகளாய்ப் போய் அங்கே சேர்ந்தாரெல்லாம்
கையெழுத்துப் போட்டுத் தான் சேந்திருக்கார்
சாமியோட கூடமில்ல காமக் கூடம்
சத்தமின்றி அனைத்தும் தான் நடந்திருக்கு
சாமிக்கு நேரங் கெட்ட நேரம் அதான்
சட்டுன்னு மாட்டிக்கிட்டார் என்ன செய்ய

Friday, April 23, 2010

ஆட வரணும் சொடலமாடன்

சொடலையிலே ஆடுகின்ற சொடலமாடா எங்க சொடலமாடா
சுத்தபத்தமாக ஒன்னக் கும்பிடுதோம் ஆமா கும்பிடுதோம்

திடலினிலே ஆடுகின்றார் சொடலமாடா ஆமா சொடலமாடா
தேசமெல்லாம் வாய் பிளக்கச் சுடலமாடா ஆமா சொடலமாடா

கொடல உருவி மால போட்டு நீயும் ஆட ஆமா நீயும் ஆட
கொமரிப் பெண்கள் உடலக் காட்டி ஆடுகிறார் ஆமா ஆடுகின்றார்

தங்களையே ஏலம் போட ஏலம் போட ஆமா ஏலம் போட
தனித் தனியாய் ஆடுதவர் பெருமை கொண்டார் ஆமா பெருமை கொண்டார்

கடலத் தாண்டி மறச்சு வச்ச கள்ளப் பணம் ஆமா கள்ளப் பணம்
கணக்கின்றிப் புரளுதிங்கே சொடலமாடா ஆமா சொடலமாடா

தெனம் ஆட்டம் முடிஞ்ச பின்னே ராத்திரிக்கு ஆமா ராத்திரிக்கு
தேக சுக வெளையாட்டு நடக்குதங்கே ஆமா நடக்குதங்கே

மோசடியில் வளந்த எங்க மோடி அண்ணன் எங்க மோடி அண்ணன்
முத்தக் கூட்டம் வெச்சிருக்கான் தன்னைச் சுத்தி ஆமா தன்னைச் சுத்தி

ஆரு ஜெயிக்க வேணுமின்னு முன்னக் கூட்டி ஆமா முன்னக் கூட்டி
அண்ணன் சொல்லி வெச்சிருக்கார் தன்னைக் கட்டி ஆமா தன்னைக் கட்டி

டண்டணக்கா டண்டணக்கா டண்டணக்கா அடி டண்டணக்கா
டண்டணக்கா டண்டணக்கா