இந்தியாவின் தொழிலதிபர்களில் கலாநிதிமாறன் அவர்கள் தான் பல கோடிகளில் ஊதியம் பெற்று முத்லில் இருக்கின்றாராம். ஒரு சாமானியக் குடும்பத்தில் பிறந்தவர் ஒரு தலைமுறைக்குள்ளேயே இத்தனை பெரிய ஊதியம் பெறுகிராரென்றால் எத்தனை கடுமையாக உழைத்திருக்க வேண்டும்.
Monday, September 23, 2013
Tuesday, September 17, 2013
கொஞசம் செய்திகள்
மகிழ்ச்சியான செய்தி சந்திர பாபு நாயுடு அவர்களுக்கு சொத்து 42 இலட்சம்.அவர் குடும்பத்தினருக்கு 42 கோடி.
தொடர்ந்து ஆசிரியர்கள் குழந்தைகளை அடிப்பதும் குழந்தைகள் கண்களை இழப்பதும் தொடர்கிறது. ஆசிரியர் பணிக்கு கல்வி அளவுகோலை வைத்து மட்டும் ஆசிரியர்களைத் தேர்ந்தெடுப்பதால் வரும் கேடு.
நீதிபதிகள் நியமனம் குறித்து மைய அரசு நாடாளுமன்றத்தில் விவாதங்கள் நடத்தியது. பொதுமறை தந்த வள்ளுவப் பேராசானின் குறள் சொல்லுகின்றது. சமன் செய்து சீர் தூக்கும் கோல் போல் அமைந்தொருபால் கோடாமை சான்றோர்க்கணி
கல்வித் தகுதிகளை மட்டும் வைத்து நியமிப்பதனை விட சான்றாண்மை மிக்கவராக அதவது ஒழுக்கத்தில் சிறந்தவர்களா என்று பார்த்து நியமிப்பதென்று முடிவெடுத்தால் நீதித் துறை. உயர்ந்து விளங்கும்
ஆசாராம் ஆசாரத்தை விட்டதனால் ஆசிரமம் ஆகச் சிரமமாகிப் போச்சு.

Tuesday, September 10, 2013
இந்தியா தேசம் அது இணையற்ற தேசம்
பிரதமரிடம் அமைச்சர்களும் அனைவரும் தங்கள் சொத்து விபரங்களைத் தந்திருக்கின்றனர். அமைச்சர்களை விட அமைச்சர்களின் மனைவிமாருக்குத்தான் சொத்து அதிகம் என்ற தகவல் வந்திருக்கின்றது.இப்போதாவது இந்திய மக்கள் தெளிவடைய வேண்டும். ஆமாம் நமது அமைச்சர்கள் எவ்வள்வு நேர்மையானவர்கள் என்று. வந்தேமாதரம்.. ஜெய்ஹிந்த் இந்திய ஆட்சிப் பணி(ஐ.ஏ.எஸ்) அதிகாரிகள் வெளி நாட்டில் மருத்துவ சிகிச்சை எடுத்துக் கொள்வதற்கான் செலவை நமது அரசே ஏற்றுக் கொள்ளும் என்கின்ற மகிழ்ச்சியான செய்தி. மிகமிகக் குறைவான சம்பளத்தில் மக்களுக்கு (மந்திரிகளுக்கு) சேவை செய்யும் அவர்கள் படுகின்ற கஷ்டங்கள் கொஞசமா நஞசமா. இந்திய ஆட்சிப் பணி அதிகாரிகளின் தேசப் பற்றும் இதில் வெளியாகின்றது. நமது நாட்டில் சிற்ந்த மருத்துவர்களும் மருத்துவமனைகளும் கிடையாது என்கின்ற அவர்தம் தெளிவான் எண்ணத்தை மத்திய அரசும் ஆதரிக்கின்றதே. வாழ்க இந்தியா. தெளிவான முயற்சிக்குவ யது தடையில்ல என்று நிரூபித்திருக்கின்ற டென்னிஸ் வீரர் 40 வயது பயஸ்ஸூம் ( இவர் ஒரு இந்தியர் என்பதனை நினைவில் கொள்க) இவருக்கு அரசு ஒரு மரியாதையும் செய்து விடாது. இவர் கிரிக்கெட்டில் விளையாடினால்தான் கோடிக் கணக்கில் கிடைக்கும்.ஏற்கனவே ஹாக்கி வீரர்களுக்கு 25000 ரூபாய் தந்து கெள்ரவித்ததே நமது மத்திய அரசு. அமெரிக்க வீராங்கனை செரீனா வில்லியம்ஸ்இவரும் க்றூப்பினத்தவர் தாம் . கச்சத்தீவின் வரலாற்றை மக்களுக்குத் தெளிவு படுத்தி ந்மது மீனவ நண்பர்களுக்கு அது எத்தனை தேவை என்று உணர்த்தியிருக்கின்றனர் ராமநாதபுரம் அரசரும் அரசியும்.அவர்களுக்கு நெஞ்சார்ந்த நன்றி. இலங்கைத் தமிழர்களின் தமிழர் பகுதியை கைப்பற்றி அவர்களிடம் அதனைத் தர வேண்டும் எனது நண்பர் மத்திய அமைச்சர் சுதர்சன நாச்சியப்பன் சொல்லியிருக்கின்றார். அதற்கு இந்திரா அம்மாவோ சஞய் காந்தியோ இருந்திருக்க வேண்டும்.முதுகெலும்பில்லாத இன்றைய தலைவர்கள் என்ன செய்து விட முடியும்
Wednesday, August 28, 2013
என்ன் செய்ய்
இன்று செய்தித் தாள்க்ள் தந்துள்ள செய்திகள். இந்திய ஆட்சிப் பணித் துறைக்கு ஒன்றாகப் படிக்கும் பொது காதலித்து விட்டு இப்போது 2 கிலோ தங்கம் 50 இலட்ச்ம் ரொக்கம் கேட்கின்றவர் மீது நீதிமன்றத்தில் வழக்கு இருக்கும் போது அவர் பணியில் நியமிக்கப் பட்டுள்ளர் என்று அவரைக் காதலித்த பெண் குற்றஞ்சாட்டுகின்றார். நாகர்கோயிலில் ஒரு பொறியியற் கல்லூரி மாணவி பேராசிரியப் பெருமகன் ஒருவரால் காதலித்துக் கை விடப் பட்டதனால் உயிர். துறந்திருக்கின்றார்.
வயது முற்றிய பின் வரும் காதலே மாசுடைத்த்து தெய்வதம் அன்று காண்
இயலு புன்மை உடலினுக் கின்பெனும் எண்ணமே சிறிதேன்றதக் காதலாம் என்கின்றான் பாரதி.
உடல் கிடைத்த பின்னர் மனம் செத்துப் போகின்றது. என்ன செய்ய.

Tuesday, August 27, 2013
எல்லாம் தேர்தலுக்குத் தான்
உணவுப் பாதுகாப்புச் சட்டம் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப் பட்டு விட்டது. பாஜக தலைவர் திரு முரளி மனோகர் ஜோஷி தேர்தலுக்காகத் தானே 4 வது ஆண்டில் இதனை நிறைவேற்றுகின்றீர்கள் என்று காங்கிரஸை குற்றம் சாட்டுகின்றார். ஆனால் பாஜகவோ இத்தனை நாள் சும்மா இருந்து விட்டு விஸ்வ ஹிந்து பரிஷத்தை வைத்து இராமர் கோயில் விவ்காரத்தைக் கிள்ப்புகின்றது. அதுவும் தேரதலுக்காகத் தானே. ஆட்சியைக் கைப்பற்றத்தான் எல்லா அரசியல் இயக்கங்களும் வெட்கமின்றிச் செயல் படுகின்றன் எனபதைத் தான் இது காட்டுகின்றது. தெற்கே ஐயப்பன் வழிபாட்டிற்குச் செல்லும் பக்தர்கள் வாபர் சமாதியில் வழி பாடு செய்து விட்டுப் பின்னர் தான் ஐயப்பனை வழிபடுகின்றனர். நான் எனது வா மீத முலை கவிதை நூலில் எழுதியிருந்தேன் வாபர் அய்யப்பன வ்ழிபாட்டுறவை பாபர் ராமருக்கும் நீட்டித் தொலையுங்கள் என்று
Thursday, August 15, 2013
விடுதலை நாள்
இன்று விடுதலை நாள் இந்தியத் தலைமையமைச்சர் மாநில முதல்வர்கள் அனைவரும் கோட்டை கொத்தளங்களில் கொடியேற்றுகின்றனர்(கறுப்புப் பூனை பாதுகாப்போடு).ஆனால் அந்த மேடைகளில் நின்றுகொண்டு நம்மை பாதுகாப்பதில் அவர்கள் எப்படியெல்லாம் இது வரை செயல்பட்டார்கள் இனிமேல் செயல்படப் போகின்றார்கள் என்பதையெல்லாம் தங்கள் உரைக்ளில் குறிப்பிடுகின்றனர்.
மாவட்ட ஆட்சித் தலைவர்கள் அந்தந்த மாவட்டங்களில் கொடியேற்றுகின்றனர். எந்த நேரம் மாற்றப் படுவோம் என்பதனையே தெரிந்து கொள்ள முடியாதவர்களாக.
வெள்ளையன் விதைத்த விஷ் விதையில் மத மோதல்களில் நவகாளி பற்றி எரிந்த போது எந்த விதப் பாதுகாப்புமின்றி அங்கே சென்றார் தேசத் தந்தை காந்தியடிகள். பாதுகாப்பிற்கு அனுப்பப் பட்ட ராணுவம் வெளியேறிய பிற்கே.
குஜராத் முதல்வர் நரேந்திர மோடி நிதிஷ் குமார் தமிழக முதல்வர் மூவரும் அடுத்த பிரதமர் வேட்பாளர்கள்.
தி மு கவின் மிக மூத்த தலைவர்கள் இருக்கும் இடத்தில் கருணாநிதியின் மகள் கனிமொழி மாநிலங்களவை திமுக் உறுப்பினர்களுக்குத் தலைவராக அறிவிக்கப் பட்டிருக்கின்றார்.
சோனியா அம்மையாரின் மருமகன் மிகப் பெரிய குற்றச்சாட்டுகளுக்கு ஆளாக்கப் பட்டிருக்கின்றார். அது குறித்து அவர் வெட்கப் பட்டதாகவும் தெரியவில்லை. வாய் திறப்பதாகவும் தெரியவில்லை.
சபர்மதி ஆசிரமத்தில் விதி முறைகளை மீறி மாலை ஆறு மணிக்கு மேல் தனது மகனுக்கு உணவளித்த் க்ஸ்தூரிபாய் காந்தியையும் மகனையும் இரவோடு இரவாக ஆசிரமத்தை விட்டு வெளியேற்றினார் காந்தி மகான்..
பெற்ற தாய் ஒரு 50 ரூபாய் அதிகம் கேட்டும் தர ம்றுத்தார் காமராஜர் எனும் மாமனிதர்.
அரியலூர் ரயில் விபத்து நடந்த உடனேயே அமைச்சர் பதவ்யை ராஜினாமா செய்தனர் அன்றைய அமைச்சர்களான் லால் பகதூர் சாஸ்திரியும் அழகேசனும்.
சுப்ரமணிய சாமி பாஜகவில் சேர்ந்து விட்டார் அவரைத் தொடர்ந்து எடியூரப்பாவும் சேரப் போகினறாராம்.
அரசியல் சூதுகளை உணர்ந்தவுடன் முதல் அமைச்சர் பதவியைத் துறந்து வடலூர் சென்று சொத்துகள் அனைத்தையும் சன்மார்க்க சங்கத்திற்கு எழுதி வைத்து விட்டு பின்னர் அரசியல் பக்கமே திரும்பாமல் வாழ்ந்தார் ஒமந்தூரார்.
குறுகிய காலத்தில் கோடீஸ்வரார்களானவர்களெல்லாம் மத்திய மைச்சர்கள் மாநில அமைச்சர்களாகி விடுகின்றனர்.
ஏழைகள் மட்டும் ஏழைகளாகவே வாக்களிப்பதற்காக வாழ்ந்து கொண்டிருக்கின்றனர்.
சாதி மதத் தலைவர்களோ சக்கை போடு போட்டுக் கொண்டிருக்கின்றார்கள்.
ஆந்திராவிலும் கேரளத்திலும் வடநாடுகளிலும் விஜயின் தலைவா படம் திரையிடப் பட்டு விட்டது.. தமிழ்ப்படம் தான். இது வரை தமிழக வரலாற்றிலேயே இல்லாத வகையில் தமிழ்ப் படம் தமிநாட்டில் திரையிடத் தடை. புரியவில்லை.
விட்டு விடப் போகுதுயிர் விட்டு விட்ட உடனே உடலை
சுட்டு விடப் போகின்றார் சுற்றத்தார்
என்கின்றார் பட்டினத்துப் பிள்ளை

Saturday, August 10, 2013
வெட்கமில்லை வெட்கமில்லை இங்கு யாருக்கும் வெட்கமில்லை
நாடாளுமன்றம் வழக்கம் போல் செயல்பட எதிர்க்கட்சிகள் அனுமதிக்க வில்லை .யார் ஆண்டாலும் இதுதான் நிலை. பா.ஜ.க். காங்கிரஸ் எதுவெனிலும் இதுதான் நிலை.
ஆனால் உச்சநீதி மன்ற்ம் ஊழல் அரசியல்வாதிகள் மீது கிரிமினல் வழக்குகள் இருந்தால் அவர்களை பதவி நீக்கம் செய்யவேண்டும் என்றவுடன். பா.ஜ.க. காங்கிரஸ் என்று எல்லா அரசியல் கட்சிகளும் ஒன்றாகச் சேர்ந்து விட்டன. கேவலம் கம்யூனிஸ்ட்களும்.உச்ச நீதிமன்றத்தின் கையை ஒடிக்க வேண்டும். என்று முடிவெடுத்து விட்டனர் நாட்டின் மிக முக்கிய தலைவர்கள்.
சுதந்திரம் எனது பிறப்புரிமை என்றார் லோகமான்ய பால கங்காதர திலகர் பெருமான்.
பசியில் ஏழை திருடினால் சிறை. வாழ்வதற்காக பணிக்குச் செல்லும் ஏழைப் பெண்கள் கட்டாயப் படுத்தப் பட்டு பாலியல் தொழிலில் தள்ளப் பட்டால்
அவளுக்குச் சிறை
ஊழல் எங்கள் பிறப்புரிமை அதில் உச்ச நீதி மன்றம் தலையிடுவதற்கு உரிமை கிடையாது என்பதற்கான் புதிய சட்டத்தை உடனே கொண்டு வருவோம் என்கின்றனர் வெட்கமற்ற தலைவர்கள்.இவர்கள் மனமறிந்து விபச்சாரம் செய்கின்றவர்கள்.ஆனால் இவர்களுக்கு முழு நேர காவற்றுறைக் காவல்.
இவர்களில் பிரதமர் வேட்பாளர்கள் வேறு அறிவிக்கப் படுகின்றார்கள்.
வெட்கமில்லை இங்கு வெட்கமில்லை யாருக்கும் வெட்கமில்லை என்ற பாவேந்தரின் பாடல் வரிகள் தான் நினைவைக் குடைகின்றன.

Subscribe to:
Posts (Atom)