எதிர் வரும் ஜனவரி 27ம் நாளில் 68ம் அகவையில் அடி எடுத்து வைக்கின்றேன். நான் பிறந்தது தைப் பூசத் திருநாளில். இந்த ஆண்டு தைப் பூச த் திருநாளும் ஆங்கில நாளும் ஒன்று போல வருகின்றன். அந்த நாளில் வா மீத் முலை எறி கவிதை நூலின் இரண்டாம் பதிப்பும் எனது கட்டுரைத் தொகுதிகளும் வரக் கூடும் என் எண்ணுகின்றேன். சிறு கதை தொகுப்பு தினமலரில் வந்த எனது முதலிரவு என்ற கதை கிடைக்காததால் தடைப் பட்டு நிற்கின்றது. யாரும் தினமலரின் அந்தக் கதையை வைத்திருப்பின் எனக்கு அனுப்பி உதவினால் நன்றி உடையவானாயிருப்பேன். அன்புடன் நெல்லைகண்ணன்
Monday, January 21, 2013
Tuesday, January 8, 2013
எள்ளுப் பெயரன் வெண்பாவும் பதில் வெண்பாவும்
இன்று காலை மின்னஞலில் எனது ஞானத்தந்தை பாரதியின் எள்ளுப் பெயரன் திரு நிரஞசன் அவர்கள் அவரது கவிதை நூலை நான் வெளியிட வேண்டும் என்று கேட்டுக் கொண்டிருந்தார். அதோடு என்னைக் குறித்து ஒரு வெண்பாவும் அனுப்பியிருந்தார்.
கலைமகள் நாவில் கரை புரண்டோட
மலையருவி பேச்சில் வழிய-நிலை பெற்று
எண்ணியே என்றும் இமிழும் திரு நெல்லை
கண்ணன் தமிழின் கடல்
நான் பதில் அனுப்பினேன்
எள்ளுமிள காய்ப்பொடியும் எள்ளெண்ணெ யும் சேர்த்து
அள்ளூற உண்ணுவதே ஆசையாம் - தெள்ளுதமிழ்ப்
பாரதியின் எள்ளுப் பெயரா அதனால் தான்
நீர்வந்து சேர்ந்தீரோ நெஞ்சு

Saturday, December 29, 2012
திருடும் தந்தைகள்
திராவிட இயக்கங்கள் வந்த பிறகுதான் நகரத் தலைவர்களையெல்லாம் நகரத் தந்தை என்று அழைத்தார்கள். மாநகரத் தந்தைகள். ஊராட்சித் தந்தைகள் பேரூராட்சித் தந்தைகள் என்று நிறையத் தந்தைகள்.
எந்தத் தந்தையாவது தன் பிள்ளைகளை ஏமாற்றுவானா. அவர்களுக்கு செய்ய வேண்டிய நியாயமான நன்மைகளைச் செய்யாமல் தன் வயிற்றை வளர்ப்பானா. புரியவில்லை.
ஒரு மாநிலம் முழுவதும் உள்ள மக்கள் தன்னை நம்பி தன் இயக்கத்தை நம்பி தங்கள் அரசிற்கு அளிக்கின்ற வரி வருவாயை முறைப்படுத்தித் தங்களுக்குச் செய்ய வேண்டிய காரியங்களை சிறப்பாகச் செய்யத்தானே சட்டப் பேரவை உறுப்பினர்களிலிருந்து அமைச்சர் பெருமக்கள வரை ஊதியம் தருகின்ற்னர்.
ஆனால் அரசுப் பணியாள்ர்களாக இருக்கும் கிராம நிர்வாக அலுவலர்கள் 100 ரூபாய் வாங்கியதாக கைது செய்யப் படுகின்றனர். கோடிக் கணக்கில் அடிக்கின்ற நமது நாடாளும்ன்ற சட்டப் பேரவை உறுப்பினர்களும் நம்மிடம் சம்பள்ம் வாங்கிப் பிழைப்பவர்கள் தானே. அவர்களை ஒன்றுமே செய்ய முடிவதில்லையே ஏன்.
தாங்கள் ஆட்சிப் பொறுப்பில் இருந்து இறங்கிய பிறகும் தங்கள் மரணத்திற்குப் பிற்கும் தங்களை மக்கள் போற்ற வேண்டும் என்கின்ற எண்ணம் ஒருவருக்கும் இல்லையே.இருக்கின்ற போதே செத்துப் போகும் இவர்களுக்கு அந்த ஆசையெல்லாம் எப்ப்படி வரும்.

Thursday, December 27, 2012
கொடுமை
அன்புடையீர் தூத்தூக்குடிக்கு மாநிலங்களவை தி.மு.க. உறுப்பினர் கனிமொழி வந்துள்ளார். இன்று நெல்லை வருகின்ற்றார் போல. அவருக்கு ஒரு முன்னாள் சட்டப் பேரவை உறுப்பினர் வரவேற்பு விளம்பரம் ஒன்று தருகின்றார். காமராஜரின் வழியில் நடக்கும் கனிமொழி அவர்களே வருக என்று. பெரியார் வழி என்றால் புரிகின்றது அண்ணா வழியில் என்றால் அறிந்து கொள்ள முடிகின்றது. கருணாநிதியின் வழியில் என்றால் கண்டு கொள்ள முடிகின்றது. பிறகு தான் இன்றைய தினமணியில் ஒரு செய்தி பார்த்தேன். கனிமொழி அவர்கள் தூத்தூக்குடி மாவட்டத்தில் ஒரு பள்ளி மாணவி பாலியல் வன்முறைக்குப் பலியானதைக் கண்டித்து தி.மு.க.வினர் நடத்திய ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்க வந்துள்ளார். அதன் நோக்கமே திருநெல்வேலி நடாளுமன்றத்திற்குப் போட்டியிடுவதற்கான வெள்ளோட்டமாம். அதற்காகத்தான் படுகொலை செய்யப் பட்ட பள்ளி மாணவி நாடார் வகுப்பைச் சேர்ந்தவர். திருநெல்வேலி நாடாளுமன்றம் நாடார்கள் நிறைந்த தொகுதி. அதனால் தான் சற்குண பாண்டியன் அவர்கள் அந்த மேடையில் நிற்கின்றார். புரிகின்றதா எல்லோருக்கும் பொதுவாக இருந்த பெரியவர் காமராஜரை சாதிக்குள் இழுக்கின்ற கொடூரம்.நமது நாட்டின் சட்டப்படி கனிமொழி அவர்கள் அவரது தந்தையாரின் சாதியாகத் தானே இருக்க வேண்டும்.
இந்தக் காரணத்திற்காகத்தான் பெரியவர் கருணாநிதி தூத்துக்குடி சம்பவத்திற்காக வருத்தம் தெரிவித்துள்ளார். விருத்தாசலத்திலே ஒரு பாலியல் வன்முறை நடந்துள்ளது. கனிமொழி அங்கே போவாரா.

Tuesday, December 25, 2012
டில்லியும் தமிழ்நாடும்
நெல்லை மாவட்த்தில் ந்டந்த பள்ளி மாணவி பலியல் வன்முறையில் கொல்லப் பட்டது குறித்து எந்த அரசியல் கட்சியின் தலைவருமே கருத்துத் தெரிவிக்கவில்லை என்று கருணாநிதி வருத்தம் கொண்டிருக்கின்றார்.
டில்லி சம்பவத்திற்கு அவரே முதலில் கருத்துத் தெரிவிக்கவில்லை. அவர் ஆட்சி நடத்தும்போது தான் பாலியல் குற்றங்களே அதிகப் பட்டன என்பதை மறந்தவாறு. உடனே இன்றைய அரசு கருணாநிதி ஆட்சியில் நடந்த பாலியல் குற்றங்களைப் பட்டியல் போட்டுக் காட்டும். இது நம்முடைய தலைவிதி.
டில்லியில் மாணவர்களும் இளைஞர்களும் நடத்திய போராட்டத்தில் பா.ஜ.க. இளைஞரணியும் பாபா ராம்தேவின் கூட்டமும் கெஜ்ரிவாலின் ஆட்களும் நுழைந்திருக்கின்றார்கள். அந்தக் கூட்டத்திற்குள்ளேயே பாலியல் கூத்துக்கள் அரங்கேறியிருக்கின்றன.
இதுதான் நம் நாட்டின் பெரிய துன்பம். அன்னா ஹசாரே இன்னும் வாய் திறக்கவில்லை.
பாராட்ட வேண்டும்
யாருக்காகவெல்லாமோ பேசி தன் வாழ்நாளை வீணடித்த நண்பர் வை.கோ.(நானும் தான்) நாட்டின் எதிர்காலம் குறித்த சிந்தனையில் இளைஞர்களையும் ஏழைகளையும் வதைக்கின்ற வாழ்விழக்க வைக்கின்ற மதுவினை எதிர்த்து போராடுகின்றார்.
வாழ்த்தி அவருக்கு உதவி செய்வோம்.
சாதி வெறியூட்டும் ராமதாஸ்
ஏதோ மேல்சாதிக்காரர்கள் தான் சாதியை உருவாக்கினார்கள் என்று காலமெல்லாம் குற்றம் சாட்டிக் கொண்டிருந்த மருத்துவர் தமிழ்க்குடிதாங்கி என்று நண்பர் திருமாவளவனால் பட்டம் சூட்டப் பட்ட ராமதாஸ் இன்று சாதிய
பிரிவுகளைக் காப்பாற்ற வேண்டும் என்கின்றார். அவரது இயக்கத்திலேயே பல பெரியவர்கள் தங்களை விட மேல் சாதி பெண்களைத் திருமணம் செய்துள்ளனர். அது குறித்து ராமதாஸ் ஒன்றும் சொல்ல மாட்டார். தாழ்த்தப் பட்ட இளைஞ்னுக்கு காதல் வரக் கூடாது. அவ்வளவுதான்.
தம்பி சம்பத்
தம்பி நாஞ்சில் சம்பத் அவர்கள் நெல்லையில் அ.இ.அ.தி.மு.க. பொதுக் கூட்டத்தில் உரையாற்றும் போது கழுகு துரத்திய புறாவாக சிபிச் சக்கரவர்த்தியிடம் அடைக்கலம் புகுந்ததாக பேசினாராம். எனக்கு வியப்பாக இருந்தது. ஒரு கழுகு இத்தனை நாட்களாக அந்தப் புறாவை ஏன் வளர்த்தது என்பது தெரியவில்லை.
18 ஆண்டுக்காலம் தன்னை விட மூத்த இயக்கத்தவர்கள் தகுதியோடு இருந்தவர்கள் இருந்த போதும் வை.கோ.வை நாடாளுமன்ற உறுப்பினராக்கி அழகு பார்த்த கருணாநிதிக்கு வை.கோ.செய்த அதே நன்றியைத் தான் தம்பி சம்பத் வை.கோ.விற்கு செய்து கொண்டிருக்கின்றார்.

Sunday, December 23, 2012
விருது அளிப்பார்
எல்லாரும் விருதுகளை வாங்கிடலாம்
இருக்கின்றார் கவிஞர்களும் இதற்கு என்றே
பொள்ளாச்சி சந்தையிலே கிடைக்கும் இது
பொது உடைமைப் புலவரினால் ஆமாம் ஆமாம்
கல்லாரே ஆனாலும் வாங்கி அளிப்பார்
கவிஞர்களே புலவர்களே சென்று பாரும்
நில்லாதீர் உடனடியாய்க் கிளம்பும் ஆமாம்
நிச்சயமாய் நிச்சயமாய்க் கிடைக்கும் அய்யா

காங்கிரஸ் எப்படித் தேறும்
நேற்று புதுடில்லி இளைஞர்களாலும் மாணவர்களாலும் குலுங்கியது. அரசியல் கலப்பே இல்லாத இளைய தலைமுறை பாலியல் வன்முறைக் குற்றத்திற்கு எதிராக தங்கள் நிலையை நாட்டின் தலைமகனுக்கு எடுத்துச் சொல்ல கூடியது. தனது மாளிகையில் இருந்து அந்தப் பெருமகனார் வெளியில் வந்து தனது பிரதம மந்திரியையும் அமைச்சரவையையும் சரியான நடவடிக்கை எடுக்க உத்தரவிடுவேன் என உறுதி மொழி அளித்திருந்தால். தேவையற்ற கண்ணிற் புகைக் கூண்டுகளையும் தடியடியையும் நியாயம் கேட்டு வந்த இளைய தலைமுறை சந்தித்திருக்காது. உள்ளாத்திலும் காயம் உடலிலும் காயம்.
சோனியாகாந்தி பெண்தானே அவர் வந்து அவர்களைச் சந்தித்திருக்கலாமே.
பிரதமர் எங்கே போனார். காங்கிரஸ் ஏன் அழிகின்றது என்பதற்கு இந்த முட்டாள்தனங்களை விட வேறு உதாரணம் வேண்டுமா. அடுத்த பிரதமர் வேட்பாளர் என்று காங்கிரஸ் முன் நிறுத்துகின்ற ராகுல் காந்தி எங்கே போனார். அந்த இளைய கூட்டாத்தின் முன்னர் அவர் அவரது இளைய பட்டாள
அமைச்சர்களோடு வந்திருக்க வேண்டாமா.
காவற்றுரையினர் கையூட்டில் வாழ்கின்ற நாட்டில் எல்லாக் கொடுமைகளும் நடக்கும்தான்.
டில்லி முதலமைச்சர் சொல்லுகின்றார். நடப்பவை அனைத்திற்கும் டில்லி
லெப்டினண்ட் கவர்னரும் காவற்றுறையும் தான் காரணம் எனக்கும் அதற்கும்
எந்தத் தொடர்பும் இல்லை என்கின்றார். என்ன அர்த்தம் புரியவில்லை.
கவிஞர் சல்மா சொல்லுகின்றார். மரண தண்டனை இருக்கும் அரபு நாடுகளிலும் பாலியல் வன்முறை இருக்கின்றது என்கின்றார். என்ன செய்ய.
எல்லா இடங்களிலும் சாதியும் அரசியலும் நுழையும் நாட்டில் பணத்தால் வாழ்ந்து விடலாம் என்கின்ற நாட்டில் நீதித் துறையும் சீரழிந்திருக்கும் நாட்டில் பெண்களுக்குக் கள்ளிப் பால் கொடுத்த கிராமத்தவர்கள் செயல் நியாயமாகப் போய் விடுமோ என்கின்ற அச்சம் ஏற்படுகின்றது.

Subscribe to:
Posts (Atom)