Tuesday, November 24, 2009

இறைவன் இல்லை

கடவுளினை உண்மையென்று கருதுவார்க்குள்
கட்டாயம் மோதல் இல்லை சண்டை இல்லை
மடமையினைக் கொண்டார்க்கு மத்தியில் தான்
மதச் சண்டை இனச் சண்டை சாதிச் சண்டை
இடம் அனைத்தும் கடவுளவன் இடம் தான் என்று
எவர் உணர்ந்து உள்ளாரோ அவர்கள் என்றும்
தடம் மாறிப் போவதில்லை தேர்தலுக்காய்
தன் மதத்தைக் காட்டி நிற்பார்க்கு இறைவன் இல்லை

3 மறுமொழிகள்:

said...

அற்புதமான கவிதை. உண்மையான வரிகள்.

அன்புடன்
பாரதி சங்கர்

said...

//தேர்தலுக்காய்
தன் மதத்தைக் காட்டி நிற்பார்க்கு இறைவன் இல்லை//

அப்படி பார்த்தால் முக்கிய எதிர் கட்சியே இல்லையே....

யாரு காதில் விழபோகுதுன்னு சொல்லுரிங்க...

said...

பாவத்தைத்தான் வெறுக்க வேண்டுமே தவிர பாவம் செய்பவர்களை அன்று
என்று கூறி அதன்படி வாழ்ந்து காட்டியுள்ளனர்கள் நம் ஞானிகள்
வழிப்பறி கொள்ளை செய்து வயிறு வளர்த்த ரத்னாகரன்
நல்வழி திரும்பி வால்மீகி ஆகி
வையம் போற்றும் ராமாயணத்தை நமக்கு தந்ததை
நினைவில் கொள்க
பாரதியும் நமக்கு அறிவுறுத்தியுள்ளதையும் இங்கே
சிந்தையில் கொள்வது சால பொருத்தம்
பகைவனுக்கருள்வாய் நன்னெஞ்சே
அப்பபகைவருள்ளத்திலும் நம் அன்புருவான பரமன்
வாழ்கின்றான் .
தீயோர்என்றென்றும் தீயோராக இருப்பது இல்லை
நல்லோர் என்றும் நல்லவராக இருப்பதும் இல்லை.
சுயநலமும், கூடா நட்பும் அவர்களை அவ்வாறு
உருவாக்குகின்றன என்பது கண்கூடு