Thursday, November 26, 2009

விடத்தான் சொன்னார்

ஆசை வைத்தோம் இறைவன் மேல் அதனாலேதான்
ஆளாளுக் கொரு பெயரில் வணங்குகின்றோம்
பூசை வைத்தோம் அதில் கூட இறைவனிடம்
புத்தியற்று எது எதையோ கேட்டு நின்றோம்
வீசு புகழ் வள்ளுவரும் தமிழும் இங்கே
வேண்டாத ஆசைகளை விடுவதற்காய்
தேசு கொண்ட ஆண்டவரைப் பற்றச் சொன்னார்
தெய்வப் பற்று அதனையுமே விடத் தான் சொன்னார்

2 மறுமொழிகள்:

said...

//வேண்டாத ஆசைகளை விடுவதற்காய்
தேசு கொண்ட ஆண்டவரைப் பற்றச் சொன்னார்
தெய்வப் பற்று அதனையுமே விடத் தான் சொன்னார்//

இதை மக்கள் சரியாக புரிந்து கொண்டால்
வாழ்வில் சிக்கல்கள் ஏது? சமுதாயத்தில் ஏது பிரச்சினை?

வாழ்த்துகள் திரு.நெல்லைகண்ணன்
அவர்களே

said...

ஆசைப்பட ஆசைப்பட ஆய் வரும் துன்பம்
ஆசை அறுமின் ஆசை அறுமின் ஈசனோடாயினும் ஆசை அறுமின் என்று அதனால்தான் அன்றே எழுதி வைத்தார் திருமூலர்