Sunday, September 11, 2011

சிந்தையில் உயிர்த்த நன்னாள்

தங்க நிகர் இமயமே தலைப்பாகை என்றொரு
தனிக் கர்வம்கொண்டிருந்தான்
தலைப்பாகைக்குள்ளேயோ தமிழையும் நாட்டையும்
தாங்கிய பெருமை கொண்டான்
சிங்க நிகர் வீரர்கள் தமிழர்கள் என்றொரு
செருக்கினைக் கொண்டு வாழ்ந்தான்
செந்தமிழ்த் தாய் பெற்ற சீராளன் பாரதி
சிந்தையில் உயிர்த்த நன்னாள்

Tuesday, August 30, 2011

கலைவாணர் என்.எஸ்.கே. நினைவு நாள்

சிந்திக்க வைப்பதற்கே சிரிக்க வைத்தான்
செந்தமிழர் மனத்தி லெல்லாம் நிலைத்து நின்றான்
மந்திரத்து மாய்மாலம் ஒழிப்பதற்கோ
மனம் தெளிந்து சிரிக்க வைத்து வெற்றி கண்டான்
இந்திரனின் ஆட்சியிலும் மது ஒழிக்க
எண்ண வைத்த கூத்து ஒன்றை ஆடி வைத்தான்
நந்தனையே மனம் கொண்டு கிந்தனையே
நமக்களித்து கல்வியினை உணர வைத்தான்

Friday, August 12, 2011

கொங்கு பொறியியற் கல்லூர் நண்பர் முத்துச் சாமியோடு மேடை நோக்கி விரைகின்றேன்


ஐந்தாம் தேதி விழாவிற்காக மகிழூந்தில் வந்து இறங்குகின்றேன்


ஈரோடு புத்தகத் திருவிழா நுழைவாயில்


ஈரோடு மக்கள் சிந்தனைப் பேரவை புத்தகத் திருவிழா


நுழை வாயில் விள்ம்பரம்

Tuesday, August 9, 2011

விதிதான் போலும்

வெள்ளையனே வெளியேறு என்று காந்தி
வீரமுடன் முழக்கமிட்ட நன்னாள் இந்நாள்
கள்ளமில்லாக் கதராடை உள்ளம் போல
கண்ணியத்தின் பேரூருவம் கொண்டார் எல்லாம்
துள்ளி அன்று வந்தார்கள் விடுதலைக்காய்த்
துச்சமென உணர்ந்தார்கள் உயிரை அன்று
எள்ளி நகையாடுகின்ற நிலையில் இன்று
இருக்கின்றோம் என்ன செய்ய விதி தான் போலும்