ஒரு உண்ர்வே இரு புலவர் உள்ளம் தன்னில்
உருவாகும் என்பதற்கு உவமையாக
தருகின்றேன் இரு செய்யுள் உங்களுக்கு
தமிழன்னை கொடைகளினால் உளம் ம்கிழ்வீர்
இல்லாத இடை கொண்ட பெணணொருத்தி
இரு மார்பைத் தாங்கி மெல்ல நடக்கின்றாளாம
பொல்லாத மார்பதனின் சுமைகள் தன்னால்
பொறுக்காமல் இடையதுவும் ஒடியும் என்றே
நில்லாமல் ஒலி எழுப்ப என்றே அந்த
நெடுங் கண்ணாள் சிலம்பிரண்டும சத்தமிட்டு
எல்லோரும் வாருங்கள் இனிய பெண்ணின்
இடை முறியும் முன்னாலே காக்க என்று
குய்யோ முறையோ என்று கூச்சலிட்டுக்
கூப்பிடுமாம் ஊரையெல்லாம் உறவையெல்லாம்
அய்யோ இதைப் போன்ற அழகுச் செய்தி
அளிப்பதுவோ இரு புலவர் நமக்கு அய்யா
மெய்யாக வெண்பாவிற் கொருவரென்று
மேன்மை கொண்ட புகழேநதிபபுல்வரோடு
பொய்யாத செயங்கொண்டான் பரணியிலே
புகலுகின்றான் இச் செய்தி காண்போம் வாரீர்
நளவெண்பா
மோட்டிளங் கொங்கை முடியச் சுமந்தேற
மாட்டாது இடையென்று வாய் விட்டு - நாள்த் தேன்
அலம்புவார் கோதை அடியிணையில் வீழ்ந்து
புலம்புமாம் நூபுரங்க்ள் பூண்டு
கலிங்கத்துப் பரணி
உபய தனமிசையில் ஒடியும் இடை ந்டையை
ஒழியும் ஒழியும் என ஒண்சிலம்பு
அபயம் அபயம் என அலற நடை பயிலும
அரிவை மீர் கடைகள் திறமினோ்
Wednesday, April 30, 2008
பழம் பாடல் புதுக்கவிதை பரணி, நளவெண்பா
படித்த வழி நடக்க வேண்டும்
பதவியிலே இருக்கின்ற படித்தவர்கள்
படித்த வழி நடப்பதுவே நிலை உயர்த்தும்
உதவுகி்ன்றார் உங்களுக்கு ஏழை மக்கள்
உழைத்த பணம் வரியாக்கி பல விதத்தில்
கதவடைத்து பணம் படைத்தார் அடிமைகளாய்
கையூட்டில் வாழ்வது உங்கள் குலம் கெடுக்கும்
விதம் விதமாய்ப் பொருட்கள் உங்கள் வீடு வரும்
வினையாலே நோய்களுமே கூட வரும்
ஏய்க்காமல் இருப்பதனால் ஏழையானார்
இருந்தாலும் நிம்மதியில் செல்வரானார்
போய்ப் பாரும் அவர் பெண்டு பிள்ளையெல்லாம்
புரியும் நீர் செய்கின்ற அநியாயங்கள்
காய்த்திட்ட கைகளினால் கஷ்டப்பட்டு
கடமை செய்து உங்க்ளையே காத்து நிற்பார்
ஏய்க்காதீர் ஏழைகளை ஏய்த்தால் உம்மை
இழி நிலைக்கு தள்ளிடுவாள் விதியாம் தாயும்
Tuesday, April 29, 2008
பழம் பாடல் புதுக்கவிதை கம்பன்
சொற்களுக்குள் அடங்காதாம் காமம் என்னும்
சுவையதுவும் சொல்லுகின்றான் கம்ப நாடன்
விற்பிடித்த இராமனவன் சென்றான் அங்கே
விழி கொண்ட பெண்ணொருதி கண்டு விட்டாள்
பொற் பதத்தாள் படுகின்ற துயரம் தன்னைப்
புகலுகின்றான் கம்பனவ்ன் மெல்லக் கேட்பீர்
கற்பனையை விரிக்கின்றான் விரித்த போதும்
கனித்தமிழர் பண்பாடும் காத்து நின்றான்
எழுத்துக்குள் அடங்காத காமம் தன்னை
எடுத்தெழுதி வெற்றி கண்ட ஒவியம் போல்
துளிர்த்தங்கு நிற்கின்றாள் பெண்ணொருத்தி
துடிக்கின்றாள் ராமனையே கண்ட பின்னர்
கழுத்தோடு உறவு கொண்ட அணி கலன்கள்
கை கால்கள் இடுப்பிலுள்ள அணிகலன்கள
பொருப்பாகும் மார்பகத்தின் அணிகலன்கள்
பொன் நகைகள் அத்தனையும் பறித் தெறிந்தாள்
நெருப்பாகி மேனியெல்லாம் தகி தகிக்க
நெஞ்சுக்குள் பெருந்தீயே கொதி கொதிக்க
சுருக்கான இடைக்குள்ளோ சூடு ஏற
சொருகுகின்ற விழிகளுக்குள் இராமன் ஆட
மிடுக்கான இராமன் அவன் தந்த நோயால்
மேனி படும் பாட்டில் அவள் ஆடினாலும்
பொறுப்பாக தன் உடலை ம்றைப்பதற்காய்
போட்டிருந்தாள் ஆடையொன்று மேனிமேலே
தன்னை இழந்தாள் எனறே ஒதுகின்றான்
தங்க நகை துறந்ததையும் ஒதுகின்றான்
மென்நகையை இழந்தாள் என்றோ துகின்றான்
மேனி தாங்க முடியாள் என்றோ துகின்றான்
அன்னவெல்லாம் ஒதியவன் ஒதுகின்றான்
அழகு மயில் தாங்கி நின்ற தொன்றே யென்று
மென்நகையாள் ஆடை மட்டும் தாங்கினாளாம்
மேன்மையுறு தமிழினம் தான் என்பதனால்
கன்னலெனும் தமிழ்க் கவிதைக் கம்பனவன்
காட்டி நின்ற் இப்பெருமை உள்ளம் தன்னில்
மின்னலென வெட்டி நிற்கும் மெய் சிலிர்க்கும
மேன்மை கொண்ட தமிழினத்தைப் போற்றி நிற்கும்
அன்னவனின் கவிதையினைக் க்ற்கக்க்ற்க
ஆடி நிற்கும் பாடி நிற்கும் நம் மனது
சொல் நல்ம் கடந்ததென்ற அந்தப் பாடல்
சொலலு்கின்றேன் இதன் பின்னர் அதனைப் பாரும்
சொல்நல்ம் கடந்த காமச்சுவையை ஒர் உருவம் ஆக்கி
இன்நலம் தெரிய வல்லார் எழுதியது என்ன நின்றாள்
பொன்னையும் பொருவு நீரால், புனைந்தன எல்லாம் போக
தன்னையும் தாங்கலாதாள் துகில் ஒன்று தாங்கி நின்றாள்
்
தமிழைப் படியுங்கள்
அன்புடையீர்.
வணக்கங்கள்.நேற்றும் இன்றும் தமிழ் கற்றுக் கொண்டிருக்கும் மாணவர்கள்
அதிகாலையிலேயே என்னைக் காண வந்தவர்கள் கணிப்பொறியில் அமர்ந்த
உடன் நான் கவிதைகளை தட்டச்சு செய்வதனைக் கண்டு வியந்தனர்.
இதில் வியப்பதற்கு ஒன்றுமேயில்லை.தமிழைப் படித்துக் கொண்டேயிருந்தால்
இது எளிது என்று அவர்களுக்குச் சொன்னேன்.தமிழ் மாணவர்களூக்கு
மட்டுமல்ல.கவிதையோ கதைகளோ கட்டுரைகளோ எழுத விருப்பம் கொள்ளும்
அனைவருக்கும் எனது வேண்டுகோள் இதுவே.படியுங்கள் படியுங்கள் படித்துக்
கொண்டேயிருங்கள் என்பதுதான்.வாழ்க தமிழுடன்.
தங்கள் அன்பின் அடிமை
நெல்லைக்கண்ணன்
மரணம் வரை படித்தான்
நாடாளுமன்றத்தில் குண்டு வீசி
நாடனைத்தும் தனை நோக்க வைத்த வீரன்
கேடான சைம்னையே எதிர்த்து மக்கள்
கிளர்ச்சி கொள்ள எழுச்சி பெறச் செய்த தோழன்
வீடல்ல நாடேதான் பெரிது என்று
வீரர்களும் உருவாகச் செய்த சூரன்
ஆடல்ல மாடல்ல நாங்கள் என்று
ஆர்ப்பாட்டப் போர்ப்பாட்டுப் பாடியவன
ம்ரணமே தணடனையாய்ப் பெற்ற போதும்
மகிழ்ச்சியுடன் அதை ஏற்ற மாம்னிதன
உரம் நெஞ்சில் கொண்டவனாய் உயர்ந்ததாலே
உடல் எடையும் தினம் தினமும் கூடிற்றம்மா
கரம் கூப்பி நின்றார்கள் வெள்ளையர்கள்
காணவொண்ணாக் காட்சி இதைக் கண்டதாலே
சிரம் தன்னைத் தூக்கினிலே சேர்ப்பதற்காய்
செய்கின்றார் ஏற்பாடு அச்சத்தோடு
கீழ் நீதி மன்றத்தின் தீர்ப பெதிர்த்தான்
கேட்டு நின்றான் மேல் நீதி மன்றத் தீர்ப்பை
வாழ விடு என்ற்ல்ல நாடு காக்க
வந்ததனால் தூக்கு என்று சொல்லச் சொன்னான்
கேடுகெட்டார் கிரிமினல் என்று அவனைச் சொன்னார்
கீழ் நீதி மன்றத்தில் அதை எதிர்த்தான்
நாடு காக்க வந்ததனால் தூக்கு என்று
நாடறியச் சொல்க என்றே கேட்டு நின்றான்
ம்ரணமதை உறுதியாக்கக் கேட்டு நின்ற
மாவீரன் தூக்கு மேடை ஏறும் வரை
விரதம் ஒன்று கொண்டிருந்தான்மேலும் மேலும்
வேண்டும் பல நூற்களையே கற்று நின்றான்
அருகிருந்த நண்பர் இதைக் கேட்ட போது
அவன் ஆசை ம்ரணம் வரை கற்றல் என்றான்
பெரு விருந்து கல்வி அதைப் பெற்றதால் தான்
பேடி வாழ்க்கை வாழாமல் வீரம் கொண்டான்
தூக்கு மேடை ஏறுகின்றான் அருகிருந்த
தூய உடை நீதிப்தி தன்னைப் பார்த்து
பாக்கியம் நீர் செய்துள்ளீர் உலகம் உம்மைப்
பார்க்கும் வழி கொண்டுள்ளீர் புரிகிறதா
ஆர்க்கின்ற மனத்தோடு முக மலர்ந்து
அன்னை யவள் நாட்டிற்காயுயிர் துறக்க
வேர்க்கின்ற் உடலின்றி மிகத் தெளிவாய்
வீரன் நான் உயிர் துறக்கக் காண்பீர் நீரே
மூடியிடா முகத்தோடு அச்சமின்றி
முடிகின்ற வாழ்க்கை தாய் நாட்டிற்கென்று
வாடிவிடா முகமின்றி நெஞ்சு முற்ற
வாழ்ந்திருந்த மகிழ்வினையே முகத்தில் கொண்டு
பேடிகளாய் வாழாமல் இளைய தோழர்
பெரு வீரர் ஆவதற்காய் தனையே தந்த
கோடிகளில் ஒருவரென வாழ்ந்த வீரன்
கொள்கை பகத்சிங் அவரைப் போற்றுவோமே
Monday, April 28, 2008
பழம் பாடல் புதுக்கவிதை கம்பன்
பழம் பாடல் புதுக்கவிதை என்று ஒரு
படைப்புத்தி தந்திருந்தார் கண்ணதாசன்
உளம் கொண்ட அவ்வழகு வடிவம் தன்னில்
உலகத்துத் தமிழினத்தார் அனைவருக்கும்
தள வழியாய்ப் பழம் பாடல் அழகையெல்லாம்
தருவதற்கு நானும் இங்கு ஆசை கொண்டேன்
வழி வ்ழியாய் வந்த தமிழ்ப் புலமை யெல்லாம்
வருகிறது இவ்வழியில் வாழ்த்த வேண்டும்
கம்பனெனும் மாக்கவிஞன் காட்டுகின்ற காதலினை
அம்புவியின் தமிழன்பர் அனைவருக்கும் தர விழைந்தேன்
கொம்பு முலைக் கூட்டத்துக் கோலவிழிப் பெண்ணொருத்தி
வெம்புகின்ற தன்னுடலின் வெப்பமது தாங்காமல்
நம்பி நின்ற நாயகனை நாள் பலவாய்க் காணாமல்
வம்பு செய்யும் தன் உடலின் வாட்டமது தாங்காமல்
தெம்பு தர வருவானோ தீண்டி வெப்பம் தீர்ப்பானோ
தெங்கிள நீர் மார்பகத்தைச் சேர்ந்திடவே மாட்டானோ
நொந்து நின்றாள் பெண்ணவளும் நோவதனைத் தீர்ப்பதற்கு
வந்து விட்டான் நாயகனும் வரவேற்றாள் தாழிட்டாள்
செந்தமிழின் சிவப்புதட்டால் சேர்த்தே இறுக்குகின்றாள்
வந்தவனோ ம்ன்மகிழ்ந்தான் வரவிலுள்ள தாமதத்தால்
நொந்தவளும் தன்னை நோகடிப்பாள் என நினைந்தால்
அந்தி மழைக் காலத்து அரவணைப்பால் நெருக்குகின்றாள்
தந்து விட்டாள் தன்னை தாமதத்தால் ஏக்கத்தால்
என்றே கருதி நின்றான் இடையுறூ வந்ததங்கு
பல காலம் காத்திருந்த ஏக்கம் தன்னில்
பனி மொழியாள் தழுவி விட்டாள் தெளிந்த பின்னர்
சில பலவாம் கேள்விக்ளால் என்னை அவள்
சிக்கலுக்கு ஆளாக்கக் கூடும் என்றே
வெல வெலத்து நிற்கின்றான் அவளோ மெல்ல
விலகுகின்றாள் அவன் முதுகைத் திருப்பிப் பார்த்தாள்
பல பலவாய் எண்ணங்கள் படையெடுக்க
பாவி மகன் துடிக்கின்றான் அவளைப் பார்த்தான்
கல கல்வென்றே சிரித்தாள் கண்ணசைத்தாள
கலங்கியவன் புரியாமல் சிரித்து வைத்தான்
வல இடமாய் அவன் தன்னை ஆட்டி ஆட்டி தன்
வடிவழகால் கொல்லுகின்றாள சொல்லுகின்றாள
முலை இரண்டும் உந்தன் திரு மார்பை குத்தி
முதுகுக்கு வந்திருக்கும என நினைத்தேன்
சிலை மார்பே உன் மார்பு என்றுணர்ந்தேன்
சிரிப்பென்ன வா என்றே தழுவிக் கொண்டாள்
கம்பனது கற்பனையைக் காட்டும் பாடல்
காட்டுகின்றேன் படியுங்கள் மேலும் மேலும்
தெம்பளிக்கும் தமிழ்ப்பாடல் பலவும் தந்து
தினம் உம்மை வணங்கி நிற்பேன் எனை வாழ்த்த்ங்கள்
கொலை உரு அமைந்தெனக் கொடிய தோற்றத்தாள
கலை உரு அல்குலாள் கணவர்ப் புல்குவாள்
சிலை உரு வழி தரச் செறிந்த மார்பிற் தன்
முலை உருவின் என முதுகை நோக்கினாள்
தங்கள் அன்பின் அடிமை நெல்லைக்கண்ணன்
தமிழர் காமராஜர்
தமிழ்த் தாயார் ஈன்றெடுத்த காமராஜர்
தாய் நாட்டைக் காக்க வந்த பீமராஜர்
அமிழ்தான தமிழ் மொழிக்கு உண்மை ராஜர்
அகிலமெல்லாம் தமிழ் கொணடு சென்ற ராஜர்
வட புலத்தில் காங்கிரஸின் தலைவராகி
வாயாடி நின்ற தன்புத் தமிழிலேதான்
கடல் கடந்து ரஷ்ய நாட்டில் நின்ற போதும்
கனித் தமிழே பேசி நின்ற தனித் தமிழர்
தான் பெறவே இயலாமல் போன கல்வி
தமிழ் ஏழை அனைவருக்கும் தந்த தெய்வம்
ஊன் உடம்பு உயிர் தந்த தாய்க்குக் கூட்
உண்மைக்குப் புறம்பாக உதவாத் தேவன்
ஏன் என்று எதனையுமே கேட்டுக் கேட்டு
ஏழைகட்காய்ச் செய்து நின்ற மாமனிதன்
வான் சென்றான் என்கின்றார் இல்லையில்லை
வாழ்கின்றான் எம்மோடு இன்றும் இங்கே
ஏழையெனப் பிறந்தான் தான் உயர்ந்த போதும்
ஏழையென்றே வாழ்ந்தான் காண் தோல்வி தந்தார்
கோழையென அழுதானா இல்லை என்னைக்
கூப்பிடுங்கள் என்றெல்லாம் குமுறினானா
வாழையடி வாழையென காந்தி பேரை
வாழ்விக்க வந்தவன் காண் செல்வனான்
கூழையென நின்றார்க்கு கல்வி யெனும்
கொடை அளித்தான் அதனாலே செல்வனான்
ஏழையென்று சொல்லாதீர் அவனை எங்கும்
ஏற்றங்கள் அவனாலே பெற்ற நீவிர்
வாழையடி வாழையென கல்வி இன்று
வந்ததுங்கள் வீட்டிற்குள் அவனால்ன்றோ
பேழையென நெய்வேலி திருச்சியிலே
பேர் சொல்லும் மிகுமின் நிறுவனம் தான்
வாழ்வதற்கு அனைவருக்கும் உணவளிக்கும்
வயற்காட்டுத் தோழருக்காய் அணைகள் தந்தான்
ஊழை வெல்ல முடியாராய் ஒடுக்கப் பட்டோர்
ஒய்ந்திருந்த நேரத்தில் எழுந்து வந்தான்
கோழை மனம் விட்டவரும் கொடிகள் ஏந்தி
கொள்கை கண்டு வெற்றி பெற வழிகள் செய்தான்
ஏழையல்ல செல்வன் அவன் என்றே சொல்வேன்
ஏனென்றால் செழுங் கிளையைத் தாங்கி நின்றான்
நாளை வரும் இளைஞ்ருக்கு இந்தச் செய்தி
நல்கி நிற்பீர் ந்ன்றி கொல்லா நற்றமிழீர்