Tuesday, April 29, 2008

மரணம் வரை படித்தான்

     நாடாளுமன்றத்தில்   குண்டு  வீசி  
          நாடனைத்தும்  தனை நோக்க  வைத்த  வீரன்
     கேடான  சைம்னையே  எதிர்த்து  மக்கள்
          கிளர்ச்சி   கொள்ள எழுச்சி பெறச் செய்த  தோழன்
     வீடல்ல நாடேதான்   பெரிது  என்று
          வீரர்களும்  உருவாகச் செய்த  சூரன்
     ஆடல்ல  மாடல்ல  நாங்கள் என்று
          ஆர்ப்பாட்டப் போர்ப்பாட்டுப்  பாடியவன


     ம்ரணமே  தணடனையாய்ப்  பெற்ற  போதும்
          மகிழ்ச்சியுடன்  அதை  ஏற்ற மாம்னிதன
     உரம்  நெஞ்சில்  கொண்டவனாய்  உயர்ந்ததாலே
          உடல்  எடையும்  தினம் தினமும்  கூடிற்றம்மா
     கரம்  கூப்பி நின்றார்கள்   வெள்ளையர்கள்
          காணவொண்ணாக் காட்சி இதைக் கண்டதாலே
     சிரம் தன்னைத் தூக்கினிலே  சேர்ப்பதற்காய்
          செய்கின்றார்  ஏற்பாடு அச்சத்தோடு

     கீழ் நீதி  மன்றத்தின்  தீர்ப  பெதிர்த்தான்
          கேட்டு நின்றான் மேல்  நீதி மன்றத் தீர்ப்பை
     வாழ  விடு  என்ற்ல்ல  நாடு  காக்க
          வந்ததனால்   தூக்கு   என்று  சொல்லச் சொன்னான்
     கேடுகெட்டார்  கிரிமினல் என்று அவனைச்  சொன்னார்
          கீழ் நீதி மன்றத்தில்   அதை  எதிர்த்தான்
     நாடு  காக்க  வந்ததனால்  தூக்கு  என்று
          நாடறியச்  சொல்க  என்றே கேட்டு  நின்றான்


     ம்ரணமதை  உறுதியாக்கக்  கேட்டு  நின்ற
          மாவீரன்  தூக்கு  மேடை  ஏறும்  வரை
     விரதம்  ஒன்று  கொண்டிருந்தான்மேலும் மேலும்
          வேண்டும்  பல  நூற்களையே கற்று நின்றான்
     அருகிருந்த  நண்பர்  இதைக் கேட்ட  போது
          அவன்  ஆசை  ம்ரணம்  வரை கற்றல்  என்றான்
     பெரு விருந்து  கல்வி  அதைப்  பெற்றதால் தான்
          பேடி  வாழ்க்கை  வாழாமல்  வீரம்  கொண்டான்


     தூக்கு மேடை  ஏறுகின்றான்  அருகிருந்த
          தூய  உடை  நீதிப்தி தன்னைப்  பார்த்து
     பாக்கியம்  நீர்  செய்துள்ளீர்  உலகம்  உம்மைப்
          பார்க்கும்  வழி  கொண்டுள்ளீர் புரிகிறதா
     ஆர்க்கின்ற  மனத்தோடு   முக மலர்ந்து
          அன்னை யவள்  நாட்டிற்காயுயிர்  துறக்க
     வேர்க்கின்ற்  உடலின்றி  மிகத் தெளிவாய்
          வீரன்  நான் உயிர்  துறக்கக் காண்பீர்  நீரே

     மூடியிடா  முகத்தோடு அச்சமின்றி
          முடிகின்ற வாழ்க்கை  தாய்  நாட்டிற்கென்று
     வாடிவிடா  முகமின்றி  நெஞ்சு முற்ற
          வாழ்ந்திருந்த   மகிழ்வினையே  முகத்தில் கொண்டு
     பேடிகளாய்  வாழாமல்  இளைய  தோழர்
          பெரு வீரர்  ஆவதற்காய்  தனையே தந்த
     கோடிகளில்  ஒருவரென  வாழ்ந்த  வீரன்
          கொள்கை  பகத்சிங் அவரைப் போற்றுவோமே
     

1 மறுமொழிகள்:

said...

ஆஹா..பகத்சிங்கிற்கு இப்படி ஒரு தமிழ்க்கவிதை உங்களால் மட்டும்தான் தரமுடியும். அற்புதம் அய்யா!