Tuesday, April 8, 2008

காதல் செய்யாதவர்கள் கல்லெறியுங்கள் !

எனது


'காதல் செய்யாதவர்கள் கல்லெறியுங்கள்'


நூலிலிருந்து சில கவிதைகள்..

நீ
கோலம்
போட
வருவதைப்
பார்க்கவே
சூரியன்
வருகின்றான்

இவர்கள்
அதைக்
காலை
என்கின்றார்கள்

இன்னொரு
முறை
பார்த்தால்தான்
மறைவேன்
என்கின்றான்

அதை
மாலை
என்கின்றார்கள்.

*

தேசிய
அழகி
என்று
உன்னை
அறிவிக்க
முடிவு
எடுத்திருந்தார்களாம்

தாமரையும்
மயிலும்
தகராறு
செய்திருக்கின்றன.

*

3 மறுமொழிகள்:

said...

காலையும் மாலையும் நல்ல வருகை. தாமரையும் மயிலும் உடன்பட்டால் தேசிய அழகி ஆக்கி விடலாம்.

said...

தபூ சங்கர் என்பது உங்கள் புனைப் பெயரா?

said...

அன்புடயீர், வணக்கம்.சென்னைக்கு
நான் வரும் போதெல்லாம் என்னை
வாயார தந்தை என அழைக்கும் அறிவுமதி,பழநி பாரதி,நந்தலாலா,தம்பி
ஜெயந்தா ஆகியோருடன் தபூ சங்கரும்
அவர்களோடு என்னை வந்து சந்தித்தல்
வழக்கம்.அறிவுமதியும் பழநி பாரதியும்
அய்யா காதல் கவிதை எழுத வேண்டும் என்று சொன்னதனால் எழுதிய நூல்.நான்கே மணி நேரத்தில்
எழுதிய நூல்.வடிவமைத்தது பழநி பாரதி.தபூ எனது அன்புப் பிள்ளை.
நன்றி.
தங்கள் அன்பின் அடிமை
நெல்லைக்கண்ணன்