Saturday, April 19, 2008

பாடம் கற்றேன்

     காதலித்துப்  பார்த்ததனால்   பாடம்    கற்றேன்

          கணணியமாய்  இருந்ததனால்  பாடம்  கற்றேன்

     ஆதரித்துப்  பார்த்ததனால்  பாடம்  கற்றேன்

          அன்பு  செய்து   பார்த்ததனால்  பாடம்  கற்றேன

    பேர் தரித்த  புகழதனால்   பாடம்  கற்றேன்

          பெரியவராய்  நடிப்பவரால்  பாடம்  கற்றேன்

     ஊர் நிறைந்த  நண்பர்களால்   பாடம்   கற்றேன்

          உணமை  சொல்லும்  காரணத்தால்  பாடம்  கற்றேன்



     வார்  குழலார்  துன்பம்  கண்டு  பாடம்  கற்றேன்

          வாய்  திறவா  ஊமையர்  பால்  பாடம்  கற்றேன்

     கூர்  மதியார்  கொடுமைகளால்  பாடம்  கற்றேன்

          கொடுத்ததனால்  அளித்ததனால் பாடம்  கற்றேன்

     யாரிடமும்  அன்பு  செய்து  பாடம்    கற்றேன்

          யாசித்தார்  தம்மிடமும்   பாடம்  கற்றேன

     ஊர்  முழுக்கப்   பாடம்  கற்றும்  என்ன  செய்தேன்

          உள்ளமதில்  நிறுத்தாமல்   மீண்டும்   கற்றேன்

     

     

2 மறுமொழிகள்:

said...

நெல்லை கண்ணன் ஐயா வணக்கம் !!!

வலைப்பதிவு உலகில் தங்களைக் காண்பதில் மகிழ்ச்சி :)

தங்களின் இலக்கிய ஞானம் என்னை வியப்பில் ஆழ்த்தியதுண்டு.

தொடர்ந்து பதிவெழுதி எங்களை மகிழ்ச்சிக் கடலில் ஆழ்த்துவீர்கள் என்ற சந்தோசத்துடன்,
யோகேஸ்வரன்
ponvandu.blogspot.com

said...

அன்பான அய்யா வணக்கம்.
தங்களைப் போன்ற உண்மையான
வர்கள் அன்பிற்கு நான் செய்யும் கைம்
மாறே தொடர்ந்து எழுதுவதுதான்.

நன்றி அய்யா


தங்கள்

நெல்லைகண்ணன்