Thursday, April 17, 2008

இன்றைய கவிதை மிருகங்கள்

     மிருகங்கள்  என்று மனிதர்கள்  தம்மையே

          மேன்மைப்  படுத்திடும் தவறினை  மாற்றுங்கள்

     அருகியே  வருகுது  மிருக  இனமென்றால்

          அவற்றை ஒழிப்பதும்  மனிதர் தம் கோரங்கள்

     கருவுற்ற  பெண்மையின்  அருகிலே  போகின்ற

          கண்ணியக்  குறைவினை  மிருகங்கள் செய்யாது

     தருகின்ற  கல்வியைப்  பெற வந்த  சிறுமியைத்

          த்ழுவிடும்   குருக்களும்   காட்டினில்  கிடையாது



     சிங்கம்  புலியினைச்  சேரவே  முயலாது

          சிறு நரி  யானையைச்  சீண்டியே  பார்க்காது

     பொங்குமமயில் அழகு  பருந்தினைச்  சேராது

          புலியது  கரடியைப்  புணரவே  முயலாது

     தங்கள்    தொழிலையே  தான்  பார்க்கும் மிருகங்கள்

          தாண்டியே  தமக்குள்ள  விதிகளை  மீறாது

     எங்கே  மனிதர்காள்  இதனை  நீர்  உண்ர்வீரேல

          இனிமேல்  மனிதரை  மிருகமாய்ச்  சொல்வீரோ

        

          

3 மறுமொழிகள்:

said...

அடடா...! அருமை!

// தங்கள் தங்கள் தொழிலைத் தான் பார்க்கும் மிருகங்கள்

தாண்டியே தமக்குள்ள விதிகளை மீறாது

எங்கே மனிதர்காள் இதனை நீர் உண்ர்வீரேல்

இனிமேல் மனிதரை மிருகமாய்ச் சொல்வீரோ //

மிருகமாகவே இருந்திருக்கலாமோன்னு
நினைக்க வைத்துவிட்டீர்கள்
இனிமேல் மறந்தும் மிருகம் என
அடுத்தவரை திட்ட மனசு வராது.

இதுதான்..இதுதான் அய்யா நீங்கள்!
இந்தத் தமிழ்நடை உங்களுக்கு மட்டும்தான் சொந்தம்!

said...

கவிதை கொள்ளை அழகு கவிஞரே..

தங்களைப் போன்ற தமிழறிஞர்களின் வரவு வலையுலகிற்கு புத்துயிர்ப்பு ஊட்டப் போவது உறுதி..

வணங்குகிறேன்.

said...

ஐந்து பெரிது ஆறு சிறிது என்று புதுக்கவிதையில் பாடுவார் கவிஞர் வைரமுத்து.தங்கள் வருத்தமோ மரபில் அழகிய பதிவு